widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 10, 2011

முஸ்லிம்கள் அமெரிக்காவை அழிப்பார்கள்: அயிமன் அல் சவஹிரி _


அமெரிக்கா மற்றும் அதன் நட்புறவு நாடுகளை அழிக்க சர்வதேச முஸ்லிம் சமூகம் காத்திருப்பதாக அல் கொய்தா இயக்கத்தின் முக்கிய பிரதானியான அயிமன் அல் சவஹிரி தெரிவித்துள்ளார். 

ஒசாமாவின் மறைவுக்குப் பின்னர் அல் கொய்தாவின் அடுத்த தலைவராக வர்ணிக்கப்படும் அயிமன் அல் சவஹிரி 28 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பின்லேடன் உயிருடன் இருக்கும் வரை அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகவும் அவர் இறந்த பின்னரும் அது தொடரும் எனவும் அவர் இக்காணொளியில் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் தொடர்ந்து நிலை கொண்டிருக்கக் கூடாது எனவும் அவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமெனவும் சவஹிரி எச்சரித்துள்ளார். 

மேலும் முஸ்லிம்கள் அனைவரையும் தம்மோடு கைகோர்க்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் வெளியாகியுள்ள இக்காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ___ 

0 comments:

Post a Comment