widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, July 31, 2011

புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம்


"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)

ஆம்! உலக முஸ்லிம்களின் வாழ்வில் மீண்டும் ஒரு முறை புனித ரமழான் வந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச ரமழான் மாதம் பிறந்திருக்கிறது. 

புண்ணியம் மொழியும் கண்ணியமிகு மாதமான இம்மாதம் பாவக் கறையகற்றும் மாதமாகும். பதினொரு மாதமும் நாம் செய்த பாவங்களை கழுவி பரிசுத்தப்படுத்துவதற்காக இனிய நோன்பு வருடத்தில் ஒரு தடவை வருகிறது. 

இந்த மாதத்திற்கு "ரமழான்' என்று பெயர் வரக் காரணம் என்ன? ரமழான் என்ற அரபுப் பதம் காய்தல், எரித்தல் என்று பொருள்படும். இந்த மாதத்தில் வயிறு காய்கிறது. உடலில் மிதமிஞ்சிய கொழுப்புக்கள் எரிக்கப்படுகின்றன. அதே போன்று சூரியனின் வெப்பத்திற்கும் "ரமழான்' என்று கூறப்படுகிறது. 

ஆயினும் ஆத்மீகமான ரமழான் என்பதன் அர்த்தம் ஆத்மீக இன்பம், விருப்பம் மற்றும் மார்க்க ரீதியிலான வெப்பமாகும் என இஸ்லாமிய அறிஞர்கள் கூறியுள்ளனர். நோன்பு நோற்பதன் காரணமாக ஒரு முஸ்லிமிடத்தில் "இறை நேசம்' எனும் வெப்பம் பிறக்கிறது. "தக்வா' என்ற இறையச்சம் ஏற்படுகிறது. 

நோன்பின் முக்கியத்துவம் 
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ""உங்களுடைய இந்த மாதம் உங்களுக்காக நிழல் தர வந்துள்ளது. முஃமின்களுக்கு இதனைவிட சிறந்த மாதம் எதுவுமில்லை. மேலும் முனாபீன்களுக்கு இதனைவிட கஷ்டமான மாதம் எதுவுமில்லை. 

ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: 

""நோன்பு ஒரு கேடயமாகும். மேலும் நெருப்பிலிருந்து காப்பாற்றுகின்ற ஒரு உறுதியான கோட்டையாகும்''

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்: ""ரமழான் மாதம் ஆரம்பமாகும் போது சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும். நரகத்தின் வாயில்கள் மூடப்படும்''

முஸ்லிம்களின் நான்காவது கடமையான நோன்பு இறைவனுக்காக செய்யப்படுவதாகும். அதனால்தான், மனிதன் எல்லாச் செயல்களையும் தனக்காகவே செய்கிறான். ஆனால், நோன்பை எனக்காக நோற்கிறான். (அவன் தனது எல்லாச் சொந்த விருப்பங்களையும், உண்ணுவதையும் அருந்துவதையும் எனக்காக விட்டுவிடுகிறான்) எனவே, நானே அவனுக்கு வெகுமதியாகிவிடுகிறேன். (புகாரி, கிதாபுஸ்ஸவ்ம்)

என்று அல்லாஹ் தஆலா கூறியுள்ளதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நோன்பானது மனிதனது ஆன்மாவை மேம்படுத்தக்கூடிய ஆத்மீகப் பயிற்சியாக விளங்குகிறது. அதனால்தான் நோன்பு நோற்பதன் காரணமாக இறையச்சம் உடையவர்களாக ஆகலாம் என்று இறைவன் கூறுகின்றான். இறையச்சத்தின் உயர்ந்த நிலையை அடைவதே நோன்பு நோற்பதன் குறிக்கோளாகும். 

ரமழான் ஒரு மனிதன் தன்னை மனிதப் புனிதனாகவும், ஒரு குடும்பம் தன்னை ஒரு சிறந்த குடும்பமாகவும் மாற்றிக் கொள்வதற்கு பயிற்சியளிக்கிறது. அதன் மூலம் அதற்கான வழியமைக்கப்படுகிறது. 

நோன்பின் விதிகள்
பருவமடைந்த ஒவ்வொரு ஆண், பெண் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. ஆயினும் சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கும் பயணிகளுக்கும் நோன்பு பிடிப்பதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் வேறு நாட்களில் நோன்பிருந்து விடுபட்ட நோன்புகளை ஈடுசெய்ய வேண்டும். 

நீண்ட காலமாக நோயுற்றுள்ள ஒருவர் நோன்பிற்கு பகரமாக ஓர் ஏழைக்கு தினமும் (அதாவது ரமழான் மாதம் முழுதும்) உணவளிக்க வேண்டும். 

மாதவிடாய் உள்ள பெண்களும், கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் நோன்பிருக்கக்கூடாது. அவர்கள் அவற்றை பின்னர் ஈடு செய்ய வேண்டும். 

"ஸஹா' செய்வதன் சிறப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: ""நீங்கள் ஸஹரின் (அதிகாலை உதயமாவதற்கு முன்னுள்ள நேரத்தில்) உணவை உண்ணுங்கள். ஏனெனில் ஸஹரில் உணவை உண்பதில் பரகத் (அருள்) உள்ளது.'' (திர்மிதி)

மிகப் பிந்திய ஸஹரும் விரைவாக குறித்த நேரத்தில் நோன்பு திறப்பதும் சிறப்பானதாகும். நோன்பின் மூன்று பகுதிகள் ரமழான் நோன்பு மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: 

""புனித ரமழான் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இறைவனின் பேரருள் மழை நீரைப் போன்று பொழியும். அதையடுத்து வரும் பத்து நாட்களில் பாவங்கள் மன்னிக்கப்படும். இறுதிப் பத்து நாட்களில் நரக தண்டனையிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும்''

நோன்பின் பயன்கள்
மனித ஆரோக்கியத்திற்கு நோன்பு தலைசிறந்த மருந்தாகும். நாங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தாலேயே வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

நோன்பின் போது உடலின் உறுப்புக்கள் தூய்மையடைகின்றன. உள்ளுறுப்புக்களும் தூய்மையடைகின்றன. பசியோடு இருப்பதன் காரணமாக கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன் பின் கிளைக்கோஜனாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரையும், புரதப் பொருளும் கரைந்து உடலில் கலக்கின்றன. 

உடல் பெருத்தவர்கள் நோன்பு நோற்பதன் காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களை சுற்றியிருக்கும் வீணான பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உடல் ஓய்வடைகிறது. நரம்புத்தளர்ச்சி நீங்குகிறது. இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றஞீ. காம உணர்வு தணிக்கப்படுகிறது. நீண்ட ஆயுளுக்கும் நோன்பு சிறந்த மருந்தாகும். 

உடல் ரீதியில் மட்டுமன்றி உள ரீதியாகவும் ஆரோக்கியம் மேன்மையடைகிறது. சரியான முறையில் நோன்பு நோற்பவர்களுக்கு இறைவனின் நெருங்கிய தொடர்பு கிடைக்கிறது. இறையருள் கிடைக்கிறது. அவரின் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பாவங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. அவர் தூய்மையாக்கப்படுவார். 

நோன்பினால் உடல் கஷ்டங்களையும் இன்னல்களையும் சகித்துக்கொள்வதற்கு பழக்கப்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக சகித்துக்கொள்ளும் வலிமையும், பொறுமையை கைக்கொள்ளும் தன்மையும் கிடைக்கின்றன. 

ஏராளமான நன்மைகளை தரக்கூடிய அடியார்களை பக்குவப்படுத்தக்கூடிய புனித நோன்பை எல்லோரும் நோற்று பயன் பெறவேண்டும். 

நோன்பை முறிக்கக்கூடிய நோன்பை வீணாக்கக்கூடிய காரியங்களிலிருந்து ஒவ்வொருவரும் விலகி இருக்க வேண்டும். 

ரமழான் மாதம் "துஆக்கள்' அங்கீகரிக்கப்படும் மாதமாகும். இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

""மூன்று பேர்களின் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை. முதலாவது நோன்பாளி நோன்பு திறக்கும் வரை கேட்கும் துஆ இரண்டாவது நீதியுள்ள அரசன் கேட்கும் துஆ. மூன்றாவது அநீதி இழைக்கப்பட்டவன் கேட்கும் துஆ''

ஆகவே, நோன்பு நோற்று எமது தேவைகளை இறைவனிடம் கேட்டு நிறைவேற்றிக்கொள்ளவும் பாவ மன்னிப்புக் கேட்கவும் இனிய ரமழான் எமக்கு வாய்ப்பு தர வந்துள்ளது.

நோன்பின் உண்மை நிலையை பற்றி ஒவ்வொருவரும் நன்கு உணரவேண்டும். பொய் பேசுதல், புறங்கூறுதல், சண்டை பிடித்தல், வீணான பேச்சு பேசுதல், இன்னொருவரை கேலி செய்தல் போன்றவைகளிலிருந்து தவிர்ந்து நடக்கவேண்டும். 

புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை தியானத்தில் மூழ்கி இருந்து நற்செயல்கள் பல புரிந்து நன்மையடைவோமாக. 

எம்.இஸட். ஷாஜஹான் ___ 

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!


எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:83)
மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.
-1- உடல் இச்சை.
-2- கோபம்.
-3- தவறான உணவு முறை.
-4- தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.
மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.
இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.
உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.
நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.
இளைஞர்களே!
“திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)
இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி!” எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.
உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.
மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.
நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.
மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.
நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும், ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.
இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவமளிக்கின்றது. “பிச்சைக்காரர்கள்” என்ற பெயரில் உலாவுவோரில் 99 வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை, விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)
சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர். பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள் சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்பு” என்பது வரவேற்கத் தக்க அம்சமே!
அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள் உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும், “பிச்சைக்காரர் ஒழிப்பு” நடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, நோன்பு காலத்தில் ‘ஃபித்றா”வின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப் புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால், ரமழான் என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப் பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது, பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக் கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ் தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும். இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும் ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.
மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ நடக்க வேண்டும்!” என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில் செயற்படுகின்றனர்.
மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப் பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.
“ரமழான் மாதம்” என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.
எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!.
-Islam Kalvi-

Saturday, July 30, 2011

நெருங்கி விட்டது ரமளான் மாதம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ...

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும்... திருக்குர்ஆன். 2:185
நெருங்கி விட்டது ரமளான் மாதம்

ஆண்டான் - அடிமைதலையில் பிறந்தோன் – காலில் பிறந்தோன்கருப்பன்- சிவப்பன் என்ற அடிமை விலங்கை உடைத்தெறிந்து ஆதமின் மக்கள் அனைவரும் சமமே என்று முழங்கிய திருமறைக் குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.

பெண் சிசுவை உயிருடன் புதைத்துபெண் இனத்திற்கு ஆன்மா உண்டா என்று ஆய்வுக்குட்படுத்திய பெண்ணடிமைத் தனத்தை உடைத்தெறிந்து ஆணும் - பெண்ணும் ஓரினமே என்று முழங்கிய நீதமிகு  குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.

நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்து மனிதனை மனிதனாக வாழச் செய்ய நேர்வழிக் காட்டிய  மகத்துவமிக்க குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் நெருங்கி விட்டது.

நிரந்தர மறுமை வாழ்வின் இன்பத்தை மறந்து நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு மறுமை வாழ்வின் இன்பத்தை நிணைவூட்ட நெருங்கி விட்டது ரமளான் மாதம்.

கல் நெஞ்சை கரையச் செய்து இறக்க குணத்தை வளரச் செய்த ஈகை மிகு மாதம் நெருங்கி விட்டது.

பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகள் குவிக்கப்படும் பாக்கியமிக்க மாதம் நெருங்கி விட்டது.

நரக வாயில்கள் பூட்டப்பட்டு சுவன வாயில்கள் திறக்கப்படும் நன்மையின் மாதம் நெருங்கிவிட்டது.

அமல்களின் வாசல்கள் திறக்கப்படும் அருள் மிகு மாதம் நெருங்கி விட்டது.

அருள்மிகு மாதத்தில் அமல்கள் அதிகம் செய்து அளவற்ற அருளாலனின் நிகரற்ற அன்பை அடைந்து  கொள்வோம் 

ரமளான் மாதத்தின் நன்மைகளை பூரணமாக அடைந்து கொள்வதற்கு கீழ் காணும் லிங்கை சொடுக்குங்கள்.


2-கட்டுரைகள் கேள்விகள்

3- ஆடியோ வீடியோக்கள்

5- நோன்பு குறித்த சட்டங்களை அறிந்திட

6- தராவீஹ் தொழுகை

7-பெருநாள் தொழுகை
பெருநாள் தக்பீர் முறை என்ன
பெருநாள் தொழுகை சட்டங்கள்
பெருநாளின் தனித்தன்மை
பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா
பெருநாள் தொழுகையில் கைகளை உயர்த்துதல்
பெருநாள் தொழுகை தக்பீர் எத்தனை
பெருநாள் குர்பானி சட்டங்கள்
பெருநாள் தொழுகை சட்டங்கள்
பெருநாள் தினத்தில் தொழுகைகளுக்குப் பின் தக்பீர் கூறுதல்
பெருநாள் தொழுகை தக்பீர் எத்தனை

நோன்பு - கேள்விகளின் தொகுப்பு
துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா?
நாளின் ஆரம்பம் எது?
ஆறு நோன்பு வைப்பது நபிவழியா?
நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் ஊசி போடலாமா?
நோன்பை தாமதமாக திறத்தல்
விட்ட நோன்பை கற்பிணிகள் நிறைவேற்றுவது ஆவசியமா?
ஆஷீரா நோன்பு
ஆஷீராவிற்கு பல நிலைபாடுகள்
அரஃபா நோன்பு உண்டா? 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.


பெண் உருவத்தில் பூக்கள் மலரும் அதிசய மரம்

தாய்லாந்து நாட்டிலே ஒரு அதிசய மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் பூக்கின்றன. இந்த வினோத மரம் Nareepol என்றழைக்கப்படுகிறது. இது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன.

அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும் Pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது. 







சிறுமியின் கற்பை காப்பாற்றிய திருக்குர்ஆன் வசனங்கள்!


இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் 2:2)
சிறுமியின் கற்பை காப்பாற்றிய திருக்குர்ஆன் வசனங்கள்!
ஜெத்தா: சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்கு அதிகமாக திருமணங்கள் பெரும் ஹால்களில் வாடகைக்கு பிடித்து நடத்தப்படும். அது போல் ஒரு திருமண வைபவத்தில் பெண்கள் பகுதிக்கு ஒரு சவுதி காமுகன் வந்துள்ளான். 10 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனியாக நிற்கவும் ‘என் காரில் மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு உள்ளது. எனது கார் வரை வர முடியுமா பெண்ணே!’ என்று அவன் கேட்டுள்ளான்.
திருமணத்துக்கு வந்த உறவினர் என்று நினைத்து அவனுடன் உதவி செய்ய அந்த பெண் சென்றுள்ளாள். வாகனத்துக்கு பக்கத்தில் சென்றவுடன் ‘காரில் ஏறு! பரிசுப் பொருள் வீட்டில் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வந்து விடலாம்’ என்று சொல்லிக் கொண்டே பின் சீட்டில் அந்த பெண்ணை தள்ளி, வண்டியையும் எடுத்து விட்டான். சாப்பாடு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததால் இங்கு நடந்த இந்த களேபரங்கள் பெண்ணின் குடும்பத்தின் கவனத்துக்கு வரவில்லை.
வெளியேற முயற்ச்சித்த அந்த பெண்ணை ‘சத்தம் போடாதே!’ என்று மிரட்டவும் செய்துள்ளான். ‘உனது தகப்பனாரை எனக்குத் தெரியும். நான் போனில் பேசிக் கொள்கிறேன்’ என்று சொல்லவும் சற்று அமைதியாகியிருக்கிறாள் அந்த பெண். அவனின் வீடும் வருகிறது. வீட்டினுள் வந்த அவன் அந்த பெண்ணை அழைத்து சென்று ஒரு அறையில் பூட்டியிருக்கிறான். 10 வயதே ஆன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள் எல்லாம் நடந்திருக்கிறது.
பிறகு ஹாலில் அமர்ந்த அவன் சீசா குடிக்க ஆரம்பித்துள்ளான். அரபுகள் நீண்ட குழாய் மூலமாக புகையை இழுத்து விடுவது ஒரு வழக்கம். இதற்கு சீசா குடித்தல் என்று சொல்வார்கள். படங்களில் கூட பார்த்திருக்கலாம். சிலர் இதில் போதை மருந்துகளையும் கலந்து குடிப்பது உண்டு. அரசுக்கு தெரிந்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.
வீட்டில் யாரும் இல்லாததும் அவனுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. சீசா குடித்து முடிந்தவுடன் அந்த பெண்ணின் அருகே நெருங்கி வந்துள்ளான். நடக்கப் போவதை உணர்ந்து கொண்ட அந்த பெண் தனக்கு தெரிந்த குர்ஆன் வசனங்களை மளமளவென்று வேகமாக ஓத ஆரம்பிக்கிறாள். இதனால் கோபம் உண்டான அவன் ‘குர்ஆன் ஓதுவதை நிறுத்து’ என்று கூறி முகத்தில் அடித்திருக்கிறான். இதே போல் பலமுறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த பெண் குர்ஆனை ஓதுவதும் அவன் அடிப்பதுமாக இரவு முழுதும் நடந்திருக்கிறது.
"Every time he came closer to me, I started reciting Quran and he would withdraw" she said.
அவனும் அரபி மொழி பேசுபவன். அந்த வசனங்கள் என்ன சொல்கிறது என்பது விளங்கியதால் அந்த பெண்ணிடம் அவன் நெருங்க மனது இடம் தரவில்லை. இதுபோல் பலமுறை முயற்ச்சித்தும் முடியாமல் போக முடிவில் தனது தவறை உணருகிறான். காலையும் நெருங்கியது. அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு எங்கு பிடித்தானோ அந்த இடத்திலேயே அந்த பெண்ணை இறக்கி விட்டு தலைமறைவாகியிருக்கிறான்.
திருமண மண்டபத்தில் காலை நேரமாகையால் யாரும் இல்லை. பிறகு வழியில் சென்ற ஒருவரை நிறுத்தி தனது தகப்பனின் செல் நம்பரை அந்த பெண் கொடுத்துள்ளாள். அந்த நல்ல மனிதர் அந்த பெண்ணின் தகப்பனோடு பேசி அவரை வரவழைத்தார். தனது மகளை கண்டவுடன் தந்தை அழுதது நெகிழ்ச்சியாக இருந்தது.
-நன்றி: அரப் நியூஸ் 21-06-2011
இங்கு நாம் ஒன்றை யோசிக்க வேண்டும். நமது நாட்டை விட இது போன்ற தவறுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கக் கூடிய நாடுதான் சவுதி. இருந்தும் துணிந்து ஒரு பெண்ணை கடத்தி சென்றவனை சமயோஜிதமாக குர்ஆன் வசனங்களை கொண்டு அவனை ஒரு வழிக்கு கொண்டு வந்துள்ளாள் அந்த பெண். இத்தகைய மன உறுதி ஒரு சில பேருக்குத்தான் வரும். அது இறைவனின் வார்த்தை என்பதை இருவரும் உணர்ந்ததால்தான் ஒரு பெரும் தவறு நடக்கவிருந்தது தவிர்க்கப்பட்டது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இந்த சம்பவத்தை இன்று நான் படித்த போது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சமபவத்தை சொன்னது உடன் ஞாபகம் வந்தது. அதையும் பகிர்ந்துகொள்கிறேன்.
2272. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:'' உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் ‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!" என்று தமக்குள் கூறினர்.
அவர்களில் ஒருவர் ‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!
மற்றொருவர், ‘இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன்.
அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!" என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், ‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார்.
‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!" என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
Volume :2 Book: 37
y.shahulhameed|National Petrolem&Petrochemical Tank pipe Line Company |Petro tank Yanbu| Kingdom of Saudi Arabia/ +966 (0) 0509892454

Tuesday, July 26, 2011

தஸ்பீஹ்  தொழுகை ஒர் ஆய்வு By: PJ

சுவனம் செல்லும் பாதைகளில் சில...


சுவனம் செல்லும் பாதைகளில் சில...
நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள சொர்க்கம் செல்லும் பாதைகளில் சில...
1. ஏகத்துவமும் தூதுத்துவமும்
அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.
(நபிமொழி, அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
2. அல்குர்ஆன்  அல்குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர் தூய்மையான கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார்.
''அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு.''
(நபிமொழி, அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: முஸ்லிம்)
''கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது.''
(நபிமொழி, அறிவிப்பவர்: அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ)
''அல்குர்ஆனில் 30 வசனங்களைக் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதிய மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படும்வரை அது அவருக்காக பரிந்துரை செய்யும். அதுதான் தபாரக் அத்தியாயம்.''
(நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
''குல் ஹுவல்லாஹு அஹத் சூராவை யாரேனும் பத்துத் தடவை முழுமையாக ஓதிமுடித்தால் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்.''
(நபிமொழி, அறிவிப்பவர்: முஆத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)
3. அஸ்மாவுல் ஹுஸ்னா
நிச்சயமாக அல்லாஹ்வுக்கு -நூறில் ஒன்று குறைய- 99 அழகிய பெயர்கள் உள்ளன. யார் அதனை மனனம் செய்துள்ளாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்.
(நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
4. திக்ருகள்
ஸுப்ஹானல்லாஹில் அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகிறது.
(நபிமொழி, அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
உங்களில் யாரேனும் ஒருவர் முறையாக உளுச் செய்து, பிறகு
அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ
என்று கூறுவரானால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன. அதில் அவர் விரும்பி வாயிலில் நுழைந்து கொள்ளலாம்.
(நபிமொழி, அறிவிப்பவர்: உக்பா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
"லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்பது சொர்க்கத்துப் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும்.
(நபிமொழி, அறிவிப்பவர்: அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: முஸ்லிம்)
5. பிரார்த்தனை
''சொர்க்கத்தை வேண்டி மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், இறைவா! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது. நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி வேண்டுமென மூன்று தடவை யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால், இறைவா! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது.''
(நபிமொழி, அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
6. கல்வி
''யாரேனும் ஒருவர் கல்வியைத் தேடிச் சென்றால் அதன் மூலம் அல்லாஹ் அவருக்கு சொர்க்கப் பாதையை எளிதாக்கிவிடுகின்றான்.''
(நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்)
7. வணக்க வழிபாடுகளும் பொதுப்பணிகளும்
''மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் -எழுந்து- வணங்குங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்!.''
(நபிமொழி, அறிவிப்பவர்: அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ)
8. பள்ளிவாயில் கட்டுதல்
''காட்டுப் புறாவின் கூட்டைப் போன்றோ அல்லது அதனை விட சிறிய அளவிலோ யாரேனும் அல்லாஹ்வுக்காக பள்ளிவாயில் கட்டிக் கொடுத்தால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான்.''
(நபிமொழி, அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா)
9. அறப்போர்
''சொர்க்கம், வாள்களின் நிழல்களுக்கு கீழே உள்ளது.''
(நபிமொழி, அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ)
10. தர்மம்
''அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் ஒரு தர்மம் செய்தால் அதன் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவது உறுதியாகி விட்டது.''
(நபிமொழி, அறிவிப்பவர்: ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத்)
11. இரக்க சிந்தனை
''ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் தன் காலுறையைக் கழற்றி அதில் தண்ணீர் அள்ளி ஊற்றி அதன் தாகத்தைத் தணித்தார். இச்செயலை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அதன் காரணத்தால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்தான்.''
(நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ)
12. அநாதைகளுக்கு ஆதரவு
''தன் உறவினருடைய அனாதைக்கோ, அல்லது பிறருடைய அனாதைக்கோ பொறுப்பேற்றவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு -அருகில்- இருப்போம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உயர்த்தி சைகை செய்தார்கள்''.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
13. பெண் பிள்ளைகள்
''இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்''.
(அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
14. இறையச்சமும் நற்குணமும்
''எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக சொர்க்கத்தில் நுழைவார்கள்? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு பயப்படுவதாலும் நற்குணத்தாலும் என்று பதிலளித்தார்கள். எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக நரகத்தில் நுழைவார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நாவின் காரணத்தாலும் இச்சை உறுப்பின் காரணத்தாலும்! என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)''
15. கோபம் கொள்ளாமை
''தன் கோபத்தை வெளிப்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதனை அடக்கிக் கொண்டவரை மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைத்து, அவர் விரும்பிய ஹுருல்ஈனை (சொர்க்கத்து கன்னியரை) தேர்ந்தெடுத்துக் கொள்ள அவருக்கு அனுமதி வழங்குவான்.''
(நபிமொழி, அறிவிப்பவர்: முஆத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்)
16. பெற்றோரைப் பேணல்
''முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் -அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்- சொர்க்கம் செல்லாதவனுடைய மூக்கு மண்ணோடு மண்ணாகட்டும்!''
(நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
17. மார்க்கச் சகோதரனை சந்திக்கச் செல்தல்
'''யாரேனும் நோயாளியை விசாரிக்கச் சென்றால் அல்லது அல்லாஹ்வுக்காக மார்க்கச் சகோதரனைச் சந்திக்கச் சென்றால் -மலக்குமார் களில்- அழைப்பவர் அவரை அழைத்து நீ மிகச் சிறந்த காரியம் செய்தாய்! மிகச் சிறந்த செயலுக்காக அடியெடுத்து வைத்துள்ளாய்! மேலும் இதனால் நீ சொர்க்கத்தில் உனக்கென ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டாய்! என்று கூறுவார்.''
(நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
18. குழந்தைகளை இழந்தவர்கள்
மூன்று குழந்தைகளை இழந்தும் பொறுமையை கடைபிடித்தவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி எழுந்து, இரண்டு குழந்தைகளை இழந்தவர்? என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரண்டு குழந்தைகளை இழந்தவரும் தான் என்று கூறினார்கள். நான் ஒரு குழந்தையைப் பற்றிக் கேட்டிருக்கக் கூடாதா? என்று அப்பெண் கூறினார். (நூல் : நஸாயீ)
19. சோதனையில் பொறுமை
ஆதமின் மகனே! சோதனை ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே பொறுமையைக் கடைபிடித்து, என்னிடத்தில் கூலியையும் எதிர்பார்த்தால் அதன் கூலியாக சொர்க்கத்தை தவிர வேறு எதனைத் தரவும் நான் விரும்ப மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா)
20. பெருமையும் கடனும் வேண்டாம்
பெருமையடித்தல், போரில் கிடைத்த பொருட்களில் மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகிய மூன்றை விட்டும் நீங்கியவனாக மரணித்தவன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டான்.
(நபிமொழி, அறிவிப்பவர்: ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ)
21. ஈமானுடன் மரணம்
''யார் நரகத்தை விட்டும் தூரமாகி, சொர்க்கத்தில் நுழைய விரும்புகின்ரோ அவருக்கு அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டிருக்கும் நிலையில் மரணம் வரட்டும். மேலும் தன்னிடம் பிறர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்புவாரோ அது போன்றே அவர் பிறரிடம் நடந்து கொள்ளட்டும்''.
(நபிமொழி, அறிவிப்பவர்: அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்)
''இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (அல்குர்ஆன் 3:53).
source: nidur.info

Sunday, July 24, 2011

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரு வெற்றி-18 சபைகளும் கூட்டமைப்பு வசம்: ஈ.பி.டி.பியினருடன் இணைந்து களமிறங்கிய ஆளும் கட்சி தோல்வி!


நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர்களுக்குப் பெரு வெற்றி கிடைத்துள்ளது. அரச அடக்குமுறைக்கு எதிராக மக்களை வாக்களிக்கக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் தமிழர்கள் இந்தப் பெரு வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.

வடக்கில் உள்ள 20 பிரதேச சபைகளில் 18 சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இரு சபைகளையும்கூட கூட்டமைப்பே கைப்பற்றி உள்ளது. யாழ். மாவட்டத்தில் 3 நகரசபைகளுக்கும் 13 பிரதேச சபைகளுக்கும் கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் முல்லைத்தீவில் ஒரு பிரதேச சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச சபைகளுக்கும் வாக்களிப்பு இடம்பெற் றது. திருகோணமலை மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில் 48 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றதாக தெரிவத்தாட்சி அதிகாரி இமெல்டா சுகுமார் அறிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்று அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கிலும் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.வன்னியில் சுமார் 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. படையினரின் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சம் கொடுத்தல் ஆகிய பல முறைப்பாடுகள் பதிவாகி இருந்த நிலையிலும் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது பெரும் ஆதரவையும் வழங்கி உள்ளனர்.
அரச தரப்பினரின் சட்டவிரோதச் செயற்பாடுகள், கடும் அச்சுறுத்தல்கள், அராஜகங்களின் மத்தியில் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பது அவர்களின் தேசிய உணர்வைக் காட்டுகின்றது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். தமக்குப் பெரு வெற்றியை ஈட்டித்தந்த தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு கிடைத்த தகவலின்படி வடக்கில் 18 சபைகளை வென்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி நெடுந்தீவு பிரதேசசபை தவிர்ந்த ஏனையவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகின. உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின்படி வேலணை பிரதேசசபை மட்டும் அரசு பக்கம் போக எஞ்சியவற்றில் கூட்டமைப்பு வெற்றி பெற்றது.