widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, July 5, 2011

திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணிடம் பேசலாமா?


ஷேக் உஸ்தாத் மன்ஸூர்
கேள்வி:  அஸ்ஸலாமு அலைக்கும் உஸ்தாத், என்னுடைய நண்பர் அவர் இஸ்லாமிய சிந்தனை பெற்றவர் தஃவாவுடைய பாதையில் அயராது உழைப்பவர். அவருக்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட பெண் உள்ளது இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு அடுத்த வருடம் நிக்காஹ், இப்பொழுதுஇருவரும் டெலிஃபோன் மூலம் இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.இதனை சில அவருக்கு மற்ற சகோதரர்களும் மத்தியில் சில மனக்கசப்பு. இந்த கேள்விக்கு குர்ஆன், ஸுன்னா பார்வையிலும் இப்போதுள்ள கால சூழ்நிலை கொண்டு பதில் கூறவும்.
பதில்:  பெண்களோடு பேசுவது அவசியத் தேவையாயின் ஆகுமானதாதும். கற்பித்தல், டாக்டரோடு பேசல், வியாபாரத் தேவைகள் போன்ற பல்வேறு தேவைகளின் போது மஹ்ரமியத் அல்லாத பெண்களுடன் பேச முடியும். இறைதூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளார்கள் என்பது மிகப் பல ஹதீஸ்களில் வந்துள்ளது. ஸஹாபாக்களும், ஸஹாபிப் பெண்களுடன் பேசியுள்ளார்கள் என்பது மிகவும் பிரசித்தம். உதாரணத்திற்கு இரண்டொரு ஹதீஸ்களை கீழே தருகிறேன்.
தாபித் இப்னு கைஸ் என்பவரின் மனைவி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே தாபித்தின் மார்க்க நடத்தையிலோ, ஒழுக்கத்திலோ நான் குறை காணவில்லை. ஆனால் நான் நன்றி கொன்ற முறையில் அவரோடு நடந்து கொள்வேனோ என்று தான் பயப்படுகிறேன் என்று கூறினார். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரது தோட்டத்தை நீ திருப்பி கொடுக்கத் தயாரா? எனக் கேட்டார்கள். அப்பெண் ஆம் என்றார். அவ்வாறே அவர் தோட்டத்தை திருப்பிக் கொடுக்க இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாபிதிடம் அப்பெண்ணை பிரிந்துவிடுமாறு பணித்தார்கள் (ஸஹீஹ் புகாரி)
ஸபீஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா என்ற பெண்ணின் கணவர் ஸஃத் இப்னு கவ்லா ஹஜ்ஜதுல் விதாவின் போது மரணித்தார். அப்போது கர்ப்பவதியாக இருந்த ஸபீஆ மிகச் சில நாட்களிலேயே பிள்ளையை ஈன்றார். பிள்ளைபேற்று நிலையிலிருந்து அவர் தூய்மையானதும் திருமணம் பேசி வருவோருக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அந்நிலையில் அவரிடம் சென்ற அபூ ஸலாபில் இப்னு பஃலாக் அவரைப் பார்த்து என்ன திருமணம் பேசி வருவோருக்காக அழகுபடுத்திக் கொண்டீரா? திருமணம் முடிக்க விரும்புகிறீரா? நான்கு மாதங்கள் 10 நாட்கள் சென்ற பின்னரே நீர் திருமணம் முடிக்க முடியும் என்றார்... (ஸஹீஹ் புகாரி)
இவ்வாறு பேசுவது அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அல்குர்ஆன் கீழ்வரும் விஷயத்தை கவனதிற் கொள்ள வேண்டும்.
‘விபச்சாரத்தை நெருங்காதீர்கள்....’ (அல் இஸ்ரா 32)
அதாவது விபச்சாரம் செய்வது மட்டுமல்ல அதனை நெருங்கவும் கூடாது என இவ்வசனம் கூறுகிறது. பேசுவதும் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்ல முடியும் என்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். பார்வை, பேச்சு, தொடுதல் என்ற இவை அனைத்தும் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்வதாகும். இதனையே மேற்குறிப்பிட்ட வசனம் தடை செய்கிறது.
திருமண ஒப்பந்தம் முடியும் வரையில் ஒரு பெண் உறவால் ஆகமாட்டாள். திருமணம் பேச்சுவார்த்தை முடிவது குறிப்பிட்ட பெண்ணை மனைவியாக்க மாட்டாது. இந் நிலையில் இருவரும் தனியே சந்திப்பது,உரையாடுவது போன்ற அனைத்தும் கூடாததாகும். ஏனெனில் திருமணம் பேசப்பட்ட இருவரும் பகிடியாகப் பேசல், சிலவேளை மறைமுகமான காம உணர்வைத் தூண்டும் வார்த்தைகளைப் பேசல் என்பன தம்மை அறியாமலேயே நடந்துவிடும்.
திருமணம் பேச்சுவார்த்தை மட்டுமே முடிவுக்கு வந்திருப்பின் அது இடையில் முறிய முடியும் எனவே ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ளல் மிகவும் முக்கியமானது. கணவன் மனைவி என்ற உறவு கொண்டாட முடியாத நிலையில் அந்த வகையிலான ஆரம்ப நடத்தைக்குக் கூட நாம் வந்துவிடக் கூடாது.
Sheik Usthaz Mansoor.

0 comments:

Post a Comment