"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Monday, July 18, 2011
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் இடம்பெற்ற சம்மேளனம் மற்றும் காத்தான்குடி உலமா சபையினரின் ஒன்றுகூடல்
-அபூ றப்தான்-
காத்தான்குடி பள்ளிவாயல்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி உலமா சபையினர் இணைந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் இன்று நடாத்திய கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு ஒருசில முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன.
கூட்டத்தின் இறுதியில் மூன்று அமைப்பினரும் இணைந்து எடுத்த தீர்மானங்களின் அறிக்கையை வாசகர்களுக்காக அப்படியே இங்கே தருகின்றோம்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் ஜூலை அன்று ஒன்றுகூடிய காத்தான்குடி பள்ளிவாயல்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி உலமா சபையினர் இணைந்து பின்வரும் தெளிவுகளுக்கு வந்தனர்.
- அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவே நாட்டின் உத்தியோகபூர்வ ஸ்தாபானம் என்றவகையில் அதனை அடிப்படையாகக் கொண்டே அதன் கிளைகள் செயற்பட வேண்டும் .
- ஜம்இய்யாவின் கிளைகளில் ஊரில் உள்ள அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமாக்கள் அனைவரும் சேர்த்துக்கொள்ளப்படல் வேண்டும்
- பத்வா தீர்ப்புக்கள் அனைத்தும் வழங்கப்படும்போது அ.இ.ஜ.உலமாவின் யாப்பின் படியே வழங்கப்பட வேண்டும்
- தனிப்பட்ட அபிப்பிராயங்கள் உலமா சபைத் தீர்ப்பாக அறிவிக்கப்படக்கூடாது
- அபிப்பிராய பேதங்களுக்குரிய அம்சங்களில் கலந்துரையாடல்களின் ஊடாகவே முடிவுகள் எட்டப்படல் வேண்டும்
- மக்கள் மத்தியில் தோன்றும் பிரச்சினைகளுக்கு “இர்ஷாதாத்” எனும் வழிகாட்டல் முறையைக் கையாளுதல்
- அ.இ.ஜ.உலமாவின் வழிகாட்டலில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் சம்மேளனமும் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை நடாத்துதல் வேண்டும்
- ஒற்றுமைக்கு வழிசெய்யக்கூடிய சகல அம்சங்களையும் வளர்த்து விடல்
- பள்ளிவாயல்கள் சம்மேளனம் கடந்த காலங்கள் போல் உலமாக்களை முன்னிலைப்படுத்தியே நடந்து கொள்ளும்
- காத்தான்குடியிலுள்ள சன்மார்க்கப் பிரச்சினைகளை அவை சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடி முடிவுகாண நடவடிக்கை எடுத்தல் வேண்டும் .அ.இ.ஜ.உலமா இதற்கான ஏற்பாட்டை செய்தல் வேண்டும்
- புதிய பள்ளிவாயல்களில் நியாயமான காரணங்களை வைத்து ஜும்ஆ ஆரம்பிப்பதாயினும் அ.இ.ஜ.உலாமாவின் அனுமதியுடனேயே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
Source: Kattankudi.info
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment