widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, October 5, 2011

பிறருக்குச் சொல்வதை கடைபிடிக்க வேண்டாமா?


அறிவிப்பாளர்: உஸாமா பின் ஜைத்(ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:""ஒரு மனிதன் இறுதித் தீர்ப்பு நாளில் கொண்டு வரப்பட்டு நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும்! பிறகு அக்குடலை எடுத்துக் கொண்டு அவன், கழுதை தன் செக்கில் சுற்றுவதைப் போல் நரகத்தைச் சுற்றுவான். இதைப் பார்த்து மற்ற நரகவாசிகள் அவனிடம் ஒன்றுகூடி, ""உனக்கு இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது? நீ நன்மைகள் புரியும்படி உலகில் எங்களுக்கு போதித்துக் கொண் டிருக்கவில்லையா? தீமைகளை விட்டு எங்களைத் தடுத்துக் கொண்டு இருக்கவில்லையா? (இப்படிப்பட்ட நற்செயலைப் புரிந்தும் கூட நீ எப்படி இங்கே வந்து விட்டாய்?)'' என்று கேட் பார்கள். அந்த மனிதன், ""நான் உங்களுக்கு நன்மை புரியும்படி போதித்துக் கொண்டு இருந்தேன்! ஆனால் நானோ அதன் அருகில் கூடச் செல்லாமலிருந் தேன்; தீமைகளை விட்டு உங்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன்! ஆனால் நானோ அந்த தீமைகளைப் புரிந்து கொண்டிருந்தேன்'' என்று பதிலளிப்பான். (புகாரி, முஸ்லிம்)அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:""நான் மிஃராஜ் இரவில் சிலரைப் பார்த்தேன். அவர்களுடைய உதடுகள் நெருப்புக் கத்தரிகளால் கத்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நான் ஜிப்ரீலிடம் ""இவர்கள் யார்?'' என்று வினவினேன். ஜிப்ரீல் கூறினார்: ""அவர்கள் தங்களைப் பின்பற்றும் குழுவினரை(உம்மத்) சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் சொற்பொழிவாளர்களாக இருந்தார்கள். இவர்கள் மக்களுக்கு நற்செயலையும், இறையச்சத்தையும் போதித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தம்மை மறந்து விட்டிருந்தார்கள்.'' அதாவது அதனைத் தாம் பின்பற்றுவது குறித்து அக்கறை கொள்ளாமல் இருந்தார்கள்.'' (மிஷ்காத்)அறிவிப்பாளர்: ஹர்மலா(ரலி)நான் அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம், ""நான் எந்த விஷயங்களின்படி செயல்பட வேண்டுமென்று தாங்கள் போதிக்கிறீர்கள்?'' என்று வினவினேன். அண்ணலார் பதில் கூறினார்கள்: ""நன்மையின் பால் செயல்படு; தீமையை விட்டு விலகிக்கொள்! மேலும் ஓர் அவையிலிருந்து நீ எழுந்து சென்ற பின்னால் மக்கள் உன்னை நற்குணங்களால் நினைவு கூர வேண்டும் என்று நீ விரும்பினால் உனக்குள் நற்குணங்களை வளர்த்துக் கொள். மக்கள் நீ இல்லாத போது உன்னைக் குறித்து எந்த விஷயங்களைச் சொல்வதை நீ வெறுக்கின்றாயோ அந்த விஷயங்களை தவிர்த்துக் கொள்.'' (புகாரி)விளக்கம்: மக்கள் தன்னைப் பற்றி நல்ல வார்த்தைகள் பேச வேண்டும் என்று தான் மனிதன் விரும்புகிறான். எனவே, மக்கள் புகழக்கூடிய, பாராட்டக்கூடிய பணிகளில் அவன் ஈடுபடவேண்டும். அதேபோல், தன்னை இழிவானவன், தவறான பழக்கம் உள்ளவன் என்று மக்கள் பேசக்கூடாது என்றும் விரும்புகிறான். அப்படியானால், தன்னிடமுள்ள தவறான குணங்களை, இழிவான நடத்தைகளை விட்டும் அவன் விலகியிருக்க வேண்டும். ஹஸன்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:""கல்வி இரு வகைப்படும். ஒருவகை நாவிலிருந்து வெளிப்பட்டு உள்ளத்தில் பதிந்து கொள்ளும் கல்வி. இந்தக் கல்வியே(மறுமையில்) பயனளிக்கும். மற்றொருவகை உள்ளத்தில் பதியாமல் நாவில் மட்டும் இருக்கும். இந்த கல்வி (அல்லாஹ்வின் நீதிமன்றத்தில்) மனிதனுக்கு எதிரான ஆதாரமாக அமைந்துவிடும்!'' விளக்கம்: இத்தகைய மனிதனிடம் அல்லாஹ், ""நீ எல்லாவற்றையும் நன்கு அறிந்திருந்தாய். பின்னர் "செயல்படுதல்' எனும் பயணச் சாதனத்தை நீ ஏன் கொண்டு வரவில்லை? அது இருந்தால் உனக்குப் பயன் அளித்திருக்குமே!''எனக் கூறிவிட்டு அவனுக்கு தண்டனை வழங்குவான். (அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)

0 comments:

Post a Comment