widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, May 31, 2012

நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ?

 நாகரீகமே!  நீ ஆபாசத்தின் மறு உருவோ? .
ஒருகாலத்தில் பெண்களின் உள்ளாடை வெளியே தெரிவது ஆபாசமாகப் பார்க்கப்பட்ட நிலையில், இன்றோ அது நாகரீகமாகிப்போனது வெட்கக்கேடு.ஆம் இப்பல்லாம் நாகரீக மங்கைகள் தங்களது உள்ளாடை தெரியும் வண்ணமே மேலாடை அணிகின்றனர்.
 இதில் நாகரீகம் என்ற ஒன்று எங்கே ஒட்டிக்கொண்டுள்ளது எனத் தெரியவில்லை.அவர்கள் எண்ணுவது போல், அழகும் வழியவில்லை. மாறாக ஆபாசமும், வெற்றுக்கவர்ச்சியும், எதிர்பாலினத்தை பாலியல் ரீதியாக ஈர்க்கும் முயற்சியுமே பளிச்சிடுகிறது.
முதலில் முழுமையான கீழாடையாக வெளிவந்த ஜீன்ஸ் பிற்காலங்களில் நாகரீகத்தை?? தன்னுள் புகுத்திக்கொள்ள பல (ப்)பரீட்ச்சைகளுக்கு ஆளானது. ஆங்காங்கே கிழிசல்கள் உருவாக்கப்பட்டு அதை நவநாகரீகம் எனக் காட்டியது. ஆண்களுக்கு முட்டி, கிரண்டை என அந்த கிழிசல்கள் வரையறுக்கப்பட, அதை அணியும் பெண்களுக்கோ, இடஒதுக்கீடு வேறு இடங்களில்!.முன் பின் தொடைகளில், பின்புறத்தில், என அவை கிழித்தெடுக்கப்பட்டது. ஆணுக்கு முழுநீள ஆடை வழங்கிய நாகரீகம் ஏனோ பெண்ணுக்கு அதை அரைகுறையாக்கி உள்ளாடைக்கு மேலாடையாக்கியதோ தெரியவில்லை.

ஆடையில் பெரும் புரட்சியாக, நாகரீகத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக, நீண்டகாலமாக மக்கள் மத்தியில் உலாவி வருவது ஜீன்ஸ் என்றால் மிகையல்ல.. அனைத்து தரப்பினராலும் விரும்பி அணியப்படும் இந்த ஆடை ஆரம்பத்தில் கப்பலோட்டிகளையும், பின் விவசாய நிலங்களில் பணி புரிபவர்களையும், அதை தொடர்ந்து சுரங்கப்பணிகளில் ஈடுபடுபவர்களையும் பயனாளிகளாகக் கொண்டு, சில காலங்களில் அனைவரும் பயன்படுத்தும் ஆடையாக உருமாறியதை அனைவரும் அறிவோம்.
முதலில் முழுமையான கீழாடையாக வெளிவந்த ஜீன்ஸ் பிற்காலங்களில் நாகரீகத்தை?? தன்னுள் புகுத்திக்கொள்ள பல (ப்)பரீட்ச்சைகளுக்கு ஆளானது. ஆங்காங்கே கிழிசல்கள் உருவாக்கப்பட்டு அதை நவநாகரீகம் எனக் காட்டியது.ஆண்களுக்கு முட்டி, கிரண்டை என அந்த கிழிசல்கள் வரையறுக்கப்பட, அதை அணியும் பெண்களுக்கோ, இடஒதுக்கீடு வேறு இடங்களில்!.முன் பின் தொடைகளில், பின்புறத்தில், என அவை கிழித்தெடுக்கப்பட்டது. ஆணுக்கு முழுநீள ஆடை வழங்கிய நாகரீகம் ஏனோ பெண்ணுக்கு அதை அரைகுறையாக்கி உள்ளாடைக்கு மேலாடையாக்கியதோ தெரியவில்லை.
ஒன்று மட்டும் எனக்கு புலப்பட மறுக்கிறது. நாகரீகம் என்பது மனிதனை தரம் உயர்த்தும், அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் ஒரு படிநிலை என புரிகிறேன். உதாரணமாக, ஆடையில்லாத மனிதன் ஆடை அணிந்தால் அது நாகரீகம்.இதை ஏன் நாம் நாகரீகம் என வகைப்படுத்துகிறோம்? என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது ஆடையின்றி நிர்வாணியாக, ஆபாசமாக, அநாகரீகமாக அறியப்பட்ட மனிதன் ஆடை கொண்டு அவயங்கள் மறைத்து கண்ணியமாக, இருப்பதால் நாம் இதை நாகரீகம் என வகைப்படுத்துகிறோம். ஆனால், உடலை மறைப்பதை முதன்மை காரணியாகக் கொண்ட ஆடையே, மறைக்க வேண்டிய அவயத்தை திறந்து காட்டும் மீள்நிலையை நாகரீகப் பட்டியலில் கொண்டுவருவது முரண்.
சரி, முடிந்த மட்டிலும் கிழித்தாகிவிட்டது, கிழித்துக் கிழித்து,கிழிக்கும் நாகரீகமும் கிழிந்து தொங்கிவிடவே, அடுத்தகட்ட நிலையை நோக்கி தன் பரிணாமத்தை உயர்த்திக்கொள்ள நாகரீக உலகு முயல, அதன் வெளிப்பாடாகவே சில ஆண்டுகளாக, கீழாடைகளை இடுப்பில் இருந்து ஒரு அங்குலத்திற்கும் மேலாக, Sorry கீழாக இறக்கி அணிவது என ஒரு மனதாக?!? முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது.
இதிலும் ஆணுக்கு பெண் சலைத்தவர்கள் இல்லை இல்லையா? பெண்களுக்கு ஆடையில் ஆபாசத்தை புகுத்துவது நாகரீக உலகுக்கு அல்வா கிண்டுவது போலென்றால்,அதை அணியும் நவநாகரீக?! நங்கைக்கோ அது அல்வா சாப்பிடுவது போல....
ஒருகாலத்தில் பெண்களின் உள்ளாடை வெளியே தெரிவது ஆபாசமாகப் பார்க்கப்பட்ட நிலையில், இன்றோ அது நாகரீகமாகிப்போனது வெட்கக்கேடு.ஆம் இப்பல்லாம் நாகரீக மங்கைகள் தங்களது உள்ளாடை தெரியும் வண்ணமே மேலாடை அணிகின்றனர். இதில் நாகரீகம் என்ற ஒன்று எங்கே ஒட்டிக்கொண்டுள்ளது எனத் தெரியவில்லை.அவர்கள் எண்ணுவது போல், அழகும் வழியவில்லை. மாறாக ஆபாசமும், வெற்றுக்கவர்ச்சியும், எதிர்பாலினத்தை பாலியல் ரீதியாக ஈர்க்கும் முயற்சியுமே பளிச்சிடுகிறது.
இம்மாதிரியான நாகரீக?!? மேம்பாடு மேலாடையோடு நின்றால் போதுமா? கீழாடை என்ன பாவம் செய்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக, நாகரீக மங்கைகளும் இயன்றவரைக்கும் கீழாடையை இறக்கி அணிகின்றனர். இந்த இறக்கம் எதற்காக எனும் மாபெரும் காரணத்தை ஆங்கிலத்தில் சற்றே நாகரீகமாக?? கூகுள் அளித்தது. அதை தமிழில் மொழியாக்க விரும்பவில்லை.
எதுக்காகவாம்?! இந்த எழவு விசிபில் ஆக இருக்கனும்? அற்பமான அடித்தட்டு ரக ஆபாசத்தை இந்த ஆடை வெளிப்படுத்தவில்லையா?. நாகரீகம், முன்னர் கண்ணியமான வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது.ஆனால், இப்போது எதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை விளக்க, மேற்சொன்ன ஆங்கில வாசகம் போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்.
பெண்கள்தான் இப்படி என்றால்? இதையே ஆண்களும் செய்து துலைக்க என்ன கேடுவந்தது என புடிபடவில்லை.ஆம் ஆண்களும் லோ ரைஸ் ஜீன்ஸ் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். இதன் தனித்தன்மை?! என்னவென்றால் பார்ப்பவர்கள் "ஐய்யோ எந்த நேரம் அவிழ்ந்து விழுமோ என பதைபதைக்கும் அளவுக்கு கீழே இறக்கி அணிந்து இருப்பர். மேலும் அவர்களின் உள்ளாடை பளிச்சென தெரியும் வண்ணம் இறக்கம் இருக்கும். இதில் அந்த உள்ளாடை எந்த ப்ராண்ட் என்பதில் மேலதிக பெருமை வேறு...
இந்தக்கருமங்களையெல்லாம் யாரும் பார்க்க விரும்புவோமா? ஆனால் அவர்களோ "ய்யோ யோ.. ட்யூட்... யு வியர் ப்ளேபாய்’ஆ.... கூல்...." என கூவிக்கொள்கிறார்கள்... சரி இந்த எழவு எங்கிருந்து வந்தது என பார்த்தோமேயானால், விலங்குகளில் இருந்து வந்து துளைத்த ஒரு கேவலமான பழக்கம் நாகரீகமாக?!? உருமாறியிருப்பதை விளங்கிக்கொள்ளலாம்.
அதாவது இணைசேர விரும்பும் விலங்குகள் அதை தன் இணைக்கு உணர்த்த பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவதை நாம் அறிவோம்.வித்தியாசமாக குரல் எழுப்புவது,ஏதேனும் நருமணத்தை பரப்புவது, இதுபோல... இதில் வேறொரு செய்கையும் உண்டு.அதாவது தனது பின்புறத்தை தன் இணைக்கு காட்டி அதை ஈர்க்கும்.இது விலங்குகளுக்கு சரி.
ஆனால், இந்த வித்தையை முன்னர் மேலைநாட்டில் உள்ள சில சிறைக்கைதிகள், தான் உடலுறவு கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தன்னோடு உறவுகொள்ள விரும்புவோர் தன்னை அணுகலாம் என உணர்த்தவும் இப்படி தங்களின் கீழாடையை இறக்கி அணிந்திருக்கிறார்கள். விலங்காய் மாறியகாரணத்தால் கூண்டில் அடைபட்டவன்,மனிதனாய் மாறாமல் முழுவதும் விலங்காகவே மாறியதன் விளைவு இந்த ஈனச்செயல்.
எதைக் கடைப்பிடிப்பதென்ற வகைதொகையற்ற மாக்களோ,வாய் பிளந்தவர்களாக இந்த ஆபாசத்தையும் தனதாக்கிக்கொண்டார்கள். ம்ம்... இது தெரிந்தும் தெரியாமலும், நம்முன்னே அன்றாடம் ஆணோ பெண்ணோ இது போன்ற ஆடைகளுடன் மமதையாக உலாவருவதைக் காணமுடிகிறது. ஆனால் தாங்கள் ஒரு ஐந்தறிவு ஜீவராசியாக மனிதர்கள் மத்தியில் நடமாடுகிறோம் என்பதை அறிவார்களா?...
ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு அடையாளம் உண்டு.காக்கி உடை காவலாளரை உணர்த்தும், கருப்பு அங்கி வழக்கறிஞரை உணர்த்தும் வெள்ளை அங்கி மருத்துவரை உணர்த்தும். அதுபோல இப்படி இறக்கம் தரித்த ஆடை, பாலுறவுக்கு அலையும் வேசிகளை( ஆண்/ பெண்)த் தான் உணர்த்தும்.ஒருவர் முதுகில் பைத்தியம் என யாராவது ஒட்டிவிட்டால், அதை அறியாமல் நாள் முழுக்க சுத்திவருபவரைப் போன்று இவர்கள் இந்த ஆடையின் காரணம் அறியாமல் நாகரீகப் போர்வையில் ஆபாசப்பைத்தியங்களாக அலைகிறார்கள். இந்த ஆபாசக் காரணத்தை அறிந்தபின்பாவது அவர்கள் இம்மாதிரியான ஆடையை புறக்கணிப்பார்களா?...
''ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.'' (அல் குர்ஆன் 7 : 26)

Monday, May 28, 2012

ஹாஜி எனும் அடைமொழி

ஹாஜி எனும் அடைமொழி - ஓர் இஸ்லாமியப் பார்வை
  அபூ-இஸாரா 
[ நமது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொண்டானா என்பதைப் பற்றியெல்லாம் நமக்கு அக்கரையில்லை. ஆனால், நம்மை ஹாஜி என்று மக்கள் அழைக்க வேண்டும் என்பதில் மட்டும் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறோம். இது சரியா? முறைதானா? ]
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்:
'எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்: அவற்றில் குறைவு செய்யப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை: (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன: அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் - 11 ஸூரத்துல் ஹூது - 15 மற்றும் 16ஆம் வசனங்கள்).
'ஹஜ்' என்கிற கடைமையை இஸ்லாத்தின் இறுதி கடமையாக அல்லாஹ் முஸ்லிம்கள் மீது விதித்திருக்கிறான். முஸ்லிமான எவரிடம் பொருளாதார வசதியும், உடல் வலிமையும் இருக்கின்றதோ, அவர் ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும். மேலும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 'யார் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து அசிங்கமான வார்த்தைகள் பேசாமல், பாவமான காரியங்களில் ஈடுபடாமல் இருக்கிறாரோ, அவர் ஹஜ்ஜை முடித்துவிட்டுத் திரும்புகிற போது அன்று பிறந்த பாலகன் போல் திரும்புகிறார்.' (ஆதார நூல்: புஹாரி).
இவ்வாறு அல்லாஹ் விதித்த கடமையான ஹஜ்ஜை தூய்மையான எண்ணத்துடனும், செயல்களுடனும் செய்துவிட்டு வந்த நம் இஸ்லாமிய சகோதரர்கள் 'ஹாஜி' என்றும், சகோதரிகள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் 'ஹாஜிமா' என்றும் அடைமொழி இட்டுக்கொள்வது காலங்காலமாக நம் சமுதாய மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவிலிருந்து மக்கா வந்து 'ஹஜ்' செய்துவிட்டு மீண்டும் மதினா திரும்பினார்கள். அவர்களுடன் அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் 'ஹஜ்' என்னும் கடமையை முடித்துவிட்டு மதினா திரும்பினார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லது அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களோ தங்கள் பெயர்களுக்கு முன்னால் 'ஹாஜி' என்றோ அல்லது 'ஹாஜிமா' என்றோ அடைமொழி இட்டுக் கொள்ளவில்லை.
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஹஜ்' செய்தபோது அவர்களுடன் அவர்களின் அன்புத்தோழர்கள் பலர் 'ஹஜ்' என்கிற கடமையை செய்தார்கள். அவர்களில் எவரையும் நாம் 'ஹாஜி' என்று அழைப்பதில்லை. இருப்பினும் 'ஹஜ்' என்னும் கடமையை முடித்துவிட்ட நம் சமுதாய மக்கள் தஙகள் பெயருக்கு முன்னால் 'ஹாஜி' அல்லது 'ஹாஜிமா' என்று அடைமொழி இட்டுக் கொள்ளும் வழக்கம் இன்றும் வேரூன்றி போய் இருப்பதை காண்கிறோம்.
இவ்வாறு அடைமொழி இட்டுக்கொள்வது எப்படியிருக்கிறது என்றால் - இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளில் சிலர் மிசா என்ற சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பார்கள். அவர்கள் சிறையிலிருந்து வெளியானவுடன் தங்கள் பெயருக்கு முன்னால் 'மிசா' என்கிற அடைமொழியைச் சேர்த்துக் கொள்வதைப்போலவும், தடா என்ற சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் 'தடா' என்கிற அடைமொழியைத் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதைப்போலவும் இருக்கிறது.
அல்லாஹ் விதித்த ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜினை நிறைவேற்றி வந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் 'ஹாஜி' என்ற அடைமொழியைச் சேர்த்து கொள்வதில் பலவிதத்தில் உள்ளது. ஒரு முறைக்கு மேல் இன்னொரு முறை 'ஹஜ்' கடமையை நிறைவேற்றி வந்தவர்களில் சிலர் 'அல்-ஹாஜ்' என்ற அடைமொழியைத் தங்கள் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதை நாம் நம் அன்றாட வாழ்வில் கண்டு வருகிறோம்.
அதுமட்டுமில்லாமல் தாங்கள் வைத்திருக்கும் கடைகளுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் ஹாஜி ஸ்டோர் என்றும், ஹாஜி அன் ஸன்ஸ் என்றும், ஹாஜி மளிகைக்கடை என்றும் பெயர் வைத்துக் கொண்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் நிலையையும் பார்க்கிறோம். தவிர ஹஜ் என்னும் இஸ்லாத்தின் கடமையை முடித்தவிட்டு வந்தவர்களை, அறிந்தவர்கள் சாதாரணமாக அழைக்கும்போது கூட 'ஹாஜி' என்று அழைப்பதையும், அவ்வாறு அழைக்கப்படுவதை சம்பந்தப்பட்டவர் அவ்வாறு அழைக்கக் கூடாது என்று மறுக்காமல், அவ்வாறு அழைப்பதே தமக்குப் பெருமை சேர்க்கும் என்ற நோக்கத்தில் இருந்து வருவதையும் நாம் அன்றாட வாழ்வில் கண்டு வருகிறோம். மேற்படி செயல்கள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத, இஸ்லாத்தில் புதிதாக புகுத்தப்பட்ட ஒரு நூதன செயலாகும்.
'நமது உத்திரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்: முஸ்லிம்).
அல்லாஹ் முஸ்லிம்கள் மீது விதித்த கடமைகளான - ஈமான் கொள்வது, இறைவனைத் தொழுவது, ஜக்காத் கொடுப்பது, நோன்பு நோற்பது போன்ற நான்கு கடமைகளைப் போன்று ஐந்தாவதாக அல்லாஹ் விதித்த கடமைதான் 'ஹஜ்' என்கிற கடமையுமாகும். அல்லாஹ் விதித்த மற்ற கடமையான ஈமான் கொண்டவர் எவரும் தனது பெயருக்கு முன்னால் 'ஈமானி' (ஈமான் கொண்டவர்) என்கிற அடைமொழியை இட்டுக் கொள்வதில்லை. அதுபோல இறைவனை ஐவேளையும் தவறாமல் தொழுதுவரும் எவரும் தம் பெயருக்கு முன்னால் 'முஸல்லி' (தொழுகையாளி) என்கிற அடைமொழியை இட்டுக் கொள்வதில்லை. தவிர நோன்பு நோற்கும் எவரும், அல்லது ஜக்காத் கொடுக்கும் எவரும் தங்கள் பெயருக்கு முன்னால் 'ஸொம்வி' (நோன்பாளி) என்றோ, 'ஜக்காத்தி' (ஜக்காத் வங்குபவர்) என்கிற அடைமொழிகளையோ இட்டுக் கொள்வதில்லை.
ஆனால் இந்த இறுதிக்கடமையான ஹஜ்ஜை முடித்து விட்டவர்கள் மாத்திரம் (குறிப்பாக இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்ந்து வரும் ஹஜ் கடமையை முடித்துவிட்ட முஸ்லிம்கள்) தங்கள் பெயருக்கு முன்னால் ஹாஜி என்கிற அடைமொழியைச் சேர்த்து கொள்கிறார்கள். இவ்வாறு 'ஹாஜி' என்று தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழி இட்டுக் கொள்ளும் வழக்கம் அரபு நாடுகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களிடையே இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விளம்பரத்திற்காகவும், இந்த உலகில் தங்கள் புகழ் ஒங்கவேண்டும் என்ற பெருமைக்காகவும் அல்லாஹ் விதித்த கடமைகளை செய்யக் கூடியவர்களைப் பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகின்றான்:
'எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்: அவற்றில் குறைவு செய்யப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை: (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன: அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் - 11 ஸூரத்துல் ஹூது - 15 மற்றும் 16ஆம் வசனங்கள்).
அவர்கள் செய்யும் இது போன்ற நூதனமான காரியங்களுக்கான பலன்களை இவ்வுலகத்திலேயே நிறiவேற்றுவதாக வாக்களிக்கும் இறைவன், மறுமையில் அவர்களுக்கான பலன் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை என்று எச்சரிக்கையும் விடுக்கிறான். மேலும் இவ்வுலகில் அவர்கள் செய்த செயல்கள் யாவும் அழிந்துவிடும் என்றும், அவர்கள் செய்து கொண்டிருப்பவை யாவும் வீணான செயல்கள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
இவ்வாறு அல்லாஹ் விதித்த கடமைகளை நிறைவேற்றும்போது - அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கிறோம் என்கிற எண்ணம் இல்லாமல் இவ்வுலக வாழ்க்கையில் பெயரும், பெருமையும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யக் கூடிய செயல்கள் யாவும் நிராகரிக்கப்படும் என்பதை அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த கீழ்க்காணும் செய்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்:
'நமது உத்திவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்: முஸ்லிம்).
மேலே குறிப்பிட்பட்ட அருள்மறை குர்ஆன் வசனத்தை கருத்தில் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைப்படி ஹஜ் என்னும் கடமையை முடித்து விட்ட இஸ்லாமிய சகோதர, சகோதரரிகள் தங்களுடைய பெயருக்கு முன்னால் 'ஹாஜி' என்றும், 'ஹாஜிமா' என்றும் அடைமொழிகள் இடுவதை விட்டும் தவிர்ந்து கொள்வார்களாக! மனிதனை நரகிற்கு இட்டுச் செல்லும் இது போன்ற நூதனம்(பித்அத்) ஆன காரியங்களிலிருந்து வல்ல அல்லாஹ் நம்மைப் பாதுகாத்தருள்வானாக!

Friday, May 25, 2012


 இஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....!!!
இஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....!!!
  ஷர்மிளா ஹமீத் 
"சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி, கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர்."
இப்புடி பாடப்புத்தகத்துல அச்சடிச்சு சாதி இல்லன்னு குழந்தைகளுக்கு பாடம் சொல்ற அதே அரசாங்கம்தான் சாதி வாரியா உங்களை பதிஞ்சுக்கங்க அப்போதான் இட ஒதுக்கீடு கெடைக்கும்ன்னும் சொல்றாங்க...!!
சரி நம்ம மார்க்கதுலதான் சாதி இல்லையே எல்லாரையும் முஸ்லிம்ன்னு பதிய சொல்லலாம்ன்னு பார்த்தா பொருளாதாரத்தில பின் தங்கி இருக்கும் சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கிடு கிடைக்காம போயிடுமே.. சோ அரசாங்கம் பொருளாதார அடிப்படைல பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள் அவர்கள் குல தொழில் மற்றும் வம்சாவழி பெயர்களை கொண்டு பிரித்து அறிவித்து உள்ளனர்.
அத முறைப்படி பயன்படுதிக்கோங்க மக்களேன்னு நம்ம ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த பதிவு எழுதுனா..... இஸ்லாத்த பத்தி எப்போ என்ன தகவல் கெடைக்கும் அத வச்சி அவதூறு பரப்பி இஸ்லாத்த அழிச்சுடலாம்ன்னு (???!!! ) கண்ணுல வெளக்கெண்ணை ஊத்திக்கிட்டு தேடுற ஒரு சிலர் கண்ணுல இந்த விழிப்புணர்வு பிரசார பதிவுகள் பட வெறும் வாய்க்கு அவல் கிடச்ச கதையா "இஸ்லாத்துல ஜாதி இல்லன்னீங்களே? இப்போ நீங்களே சாதிப்படி பிரிச்சு பதிய சொல்ரிங்களே?" அப்புடின்னு என்னமோ உலக மகா ஆதாரம் கெடச்ச மாதிரி வானத்துக்கும் பூமிக்குமா குதிக்க ஆரம்பிச்சுட்டாங்க...!!
இப்போ கூட சொல்றேன் கேட்டுக்கோங்க மக்களே... இஸ்லாத்துல ஜாதின்னு ஒன்னு இல்லவே இல்லங்க........... !! அந்த காலத்துல அவங்க முன்னோர்கள் செஞ்ச தொழில் அடிப்படையிலும் சிலரோட பரம்பரை பெயர்களின் அடிப்படையிலுமே முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்...
உதாரணத்துக்கு...
லெப்பை பிரிவை சேர்ந்தவங்க ஹஜ்ரத் வேல செய்றவங்க ...
ராவுத்தர் பிரிவினரின் முன்னோர் குதிரை பராமரிப்பு, குதிரை வாணிபம் போன்றவற்றில் ஈடுபட்டவங்க... அவங்களோட வம்சம் ராவுத்தர் என்று சொல்லப்படுது
மரைக்காயர் என்று அழைக்கப்படும் பிரிவினரின் முன்னோர் கடல் வாணிபம் செய்தவர்கள்...
ஷேக், செய்யது போன்ற பிரிவினர் அரபு வம்சாவளிகளை சேர்ந்தவர்கள்...
மாப்பில்லா பிரிவினர் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்ட கேரளா வம்சாவளியினர்...
இந்த அடிப்படைலதான் அரசாங்கம் முஸ்லிம்களை சாதிவாரியா பிரிச்சு இருக்காங்க..... அப்புடியே தொழில் ரீதியாக வம்சாவளி அடிபடைல சில பிரிவுகள் அரசாங்கம் குறிப்பிட்டு இருந்தாலும் யாரும் யார விடவும் உயர்ந்தவங்க இல்ல...! ஒருத்தரோட சாதியசொல்லி அவங்கள கேவலமா நடத்துறதும்,அவமானப்படுதுறதும் இஸ்லாத்துல இல்ல...!! இல்ல... இல்லவே இல்ல...!!!!
இஸ்லாத்த பொறுத்த வர படைத்த இறைவன் முன் அனைவரும் சமமே...!! எப்புடின்னு கேக்க மாட்டிங்களா?
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (அல்குர்ஆன் 49:13)
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்த வழித்தோன்றல்கள்தான். நம்மில் உள்ள கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது.
எந்த பிரிவா இருந்தாலும் பள்ளிவாசல்ல தொழுக அனுமதி உண்டு..... நீ இந்த பிரிவை சேர்ந்தவன் நீ பள்ளி உள்ள வந்தா தீட்டு... அதனால நீ வெளிய நின்னுதான் தொழணும்ன்னு சொல்லி படைத்தவன் முன்னாடி கூட அவன ஒதுக்கி வைக்கிற கேவலமான செயல நாங்க ஒருக்காலும் செய்யவே மாட்டோம்.... இது புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் (தீண்டத்தகாதவர்கள் என்று நம் சமூகத்தால் கொடுமைப்படுதப்படும்)தலித்களுக்கும் சேர்த்துதான்...
நாட்டையே ஆளும் அரசரா இருந்தா கூட அவருக்குன்னு ராஜ மரியாதை எல்லாம் கெடையாது அவருக்குனு தொழுக தனி இட ஒதுக்கீடு எல்லாம் கெடையாது...
அரசனும் ஆண்டியும் அருகருகே தோளோடு தோளாக நின்று எந்த பாரபட்சமும் இல்லாமல் இறைவனை வணங்கும் சமத்துவம் இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கத்தில் உள்ளது??
இதுல ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை பார்த்த உடனே சட்டையை கழட்டி கக்கத்துல வச்சு கும்பிடு போட்டு தங்கள் மரியாதையை. (!!??) காட்ட வேண்டிய அவசியம் இல்ல....
தண்ணி கேட்டா தூரமா நின்னுக்கிட்டு ஊத்திவிடுறது இல்ல!
சபைல தான் இருக்கையிலும் தாழ்த்தப்பட்டவன் கோணிப்பை விரித்து மூலையிலும் உக்கார்ரது இல்ல!
சாக்கடை அள்ளுவது மட்டும் தான் உன் தொழில், துணி துவைக்கிறது மட்டும் தான் உன் தொழிலா இருக்கணும்னு யாரும் வற்புறுத்துவதில்ல...
ஊருக்குள்ள நீ செருப்பு போட்டு நடக்க கூடாதுன்னு சொல்ற காட்டு மிராண்டித்தனம் இஸ்லாத்தில இல்ல...
சமதர்மமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பிரிவினை பார்ப்பதில்ல!
நாங்கள் உண்ணும் பருகும் அதே பாத்திரத்தில் உண்ணவோ பருகவோ அவர்களுக்கு எந்த பிரிவினருக்கும் எந்த தடையும் இல்லை.... நீ தாழ்ந்தவன் அதனால கொட்டங்கச்சில தான் குடிக்கணும்ன்னு சொல்லி மிருகத்த விட கேவலமா ஒரு மனுசன நடத்துற காட்டுமிராண்டித்தனம் இஸ்லாத்துல இல்ல...
எல்லாத்துக்கும் மேல ஒரு மனுஷன் வாழும் போதுதான் சாதி பார்த்து ஏற்றத்தாழ்வு உண்டாக்குறாங்கன்னு பார்த்தா அவன் செத்த அப்பறம் புதைக்க கூட விடாம சாதிய காரணம் காட்டி ஆதிக்க சாதியினர் புதைக்கும் இடத்தில தலித் சமூகத்தாரை புதைக்க விடாமல் கலவரம் பண்ணிய அவலமும் தமிழ் நாட்டில் சில இடங்களில் நடந்துள்ளது..
ஆனால் ஒரு முஸ்லிம் இறந்தால் அவர் எந்த பிரிவை சார்ந்தவர் என்றாலும் புதைப்பதற்கு பொதுவான ஒரே இடம்தான்...
அவருக்கு நான் இறுதி தொழுகை வைக்க மாட்டேன் என்று எந்த இமாமும் சொல்வதில்லை..!!
இப்படி நிறைய இல்லைகள் சொல்லிக்கொண்டே போகலாம்.... !!!
தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமை கொடுமை குறித்து மதுரையில் இருந்து செயல்படும் "evidence " அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டு உள்ளது . (மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகை,சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர்) இல் 213 கிராமங்களில் நடத்திய ஆய்வு முடிவுகள்.
24 . 09 . 2009 கள்ளகுறிச்சி அருகில் தச்சூர் கிராமத்தை சேர்ந்த தலித் பெண் காசியம்மாள், ஆதிக்க சாதி பெண்ணை தொட்டதால் மானபங்க படுத்தப்பட்டார்.
02 .01 .2011 தேனீ அருகில் உள்ள கூழயநூரில் ராஜி என்கிற பெரியவரின் சடலத்தை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். 27 .01 .2011 . அன்று சின்னாயி என்கிற தலித் மூதாட்டி பெட்ரோல் வெடி குண்டு வீசி கொல்லப்பட்டார் .
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் 2009ம் ஆண்டு சந்தோஷ்குமார் என்கிற தலித் இளைஞர் பொது கிணற்றில் குளித்ததற்காக 30 பேர் கொண்ட ஆதிக்க சாதி கும்பலால் தாக்கப்பட்டார்.
மதுரை கீரிபட்டியை சேர்ந்த தலித் பெண் "வசந்த மாளிகை" என்கிற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட போது, அங்கு இருந்த ஊழியர் கொண்டை ஊசியால் குத்தி சேதப்படுத்தி இருக்கிறார். கருப்பை முற்றிலும் சிதைந்த நிலையில் அகற்றப்பட்டது. சிறுநீரக குழாயில் ஓட்டை விழுந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருகிறது.
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தலித் இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர். - இந்தியன் எக்ஸ்பிரஸ்
2.2.2008 . திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர். - தி இந்து - 10.2.2008
மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தலித் இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.
நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க உயர் சாதி அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், ‘தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்’ என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தலித் குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர். ‘எவிடன்ஸ்’ என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், "அரசு அறிக்கையின்படி தலித்துகளுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை'' என்கிறார். - தி வீக் -
13.1.2008. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார். - தி இந்து - 4.2.2008
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை. (பஞ்சாயத்து தலைவருக்கே இந்த கதின்னா??? சாதாரண மக்களுக்கு?? ) - இந்தியன் எக்ஸ்பிரஸ் - 12.1.08
இரட்டை குவளை முறை
இது போன்ற எத்தனையோ விதமான வன்கொடுமைகள் சாதியின் பெயரால் நடக்கும் போது அதை தட்டிக்கேட்காதவர்கள்....
வறியவர் நலன்கருதி உங்களை பிரிவு வாரியாக பதிந்து அரசின் உதவி தொகையை வாங்கி நீங்களும் உங்க குடும்பமும் சந்தோசமா இருங்கன்னு இஸ்லாமிய மக்களுக்கு சொல்ல வந்தா.... அதுலயுமா உங்க இஸ்லாமிய எதிர்ப்பு வெறிய காட்டுவிங்க??? (போங்க பாஸ் போயி புள்ள குட்டியல படிக்க வைக்கிற வேலைய பாருங்க அப்போதான் இனி வர்ற சமுதாயமாச்சும் உருப்படும். அப்படியும் பொழுதுபோகலன்னா நியூஸ்பேப்பர்லாம் வாங்கி படிங்க...)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது சொன்ன ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனியுங்கள்
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா 2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி 1706)
இப்புடி சொல்லி சமூகப் பிளவுக்கும், நிற வெறிக்கும் , சாதி பாகுபாடுகளுக்கும் அன்றே முடிவு தந்து விட்டு சென்றார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிச்சென்ற இந்த வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு..!!
நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை.
இஸ்லாத்தை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர்ன்னு யாருமில்லங்க யாரு இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது. .. !! இஸ்லாத்தை பத்தி நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு கொஞ்சம் டவுட்டு வரும் இல்லையா? முஸ்லிமல்லாத பலர் இஸ்லாத்தின் இந்த சமத்துவம் குறித்து சொன்னவற்றில் சிலவற்றை கீழே சேர்த்து இருக்கிறேன் பாருங்கள்.. :)
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது. - டாக்டர் அம்பேத்கார்.
இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் – அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை. - டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.]
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. - கவிக்குயில்" sarojini-naidu
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது. - அறிஞர் அண்ணா
இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது.
அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். – ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.
இஸ்லாத்துல சாதி இருக்குன்னு தவறான கருத்தை பரப்புற சில விஷமிகளோட கருத்தை படிச்சு இஸ்லாத்த பத்தி தப்பா புரிஞ்சிகிட்ட
எத்தனையோ நல்ல உள்ளம் கொண்ட சகோதரர்கள் இந்நேரம் உண்மைய புரிஞ்சிகிட்டு இருப்பாங்கன்னு நம்புறேன் .... இஸ்லாத்தில் ஜாதிகள் இருக்குன்னு கண்டுபிடிச்சுட்டோம்னு ஆஹோ..ஓஹோ...ன்னு குதுகலமா இருந்தவர்களுக்கும் மூக்குடைபட்டிருக்கும் என நம்புகிறேன் :-)
என்றும் அன்புடன்
உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத்
நன்றி- எவிடென்ஸ் அமைப்பு.

Wednesday, May 23, 2012

குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்

''உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும் (குர்ஆன்) ஞானங்களையும் (ஹிக்ம்) நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவுடையோனும் (யாவையும்) நன்கறிந்தோனுமாக இருக்கின்றான்.''  (அல்குர்ஆன் 33:34)
மேற்கண்ட இறை வசனத்தில் ‘கிதாப்’ என்ற குர்ஆனைக் குறிக்க இறைவன் கூறிய சொல்லோடு இணைத்து ‘ஹிக்ம்’ என்ற சொல் ஸுன்னாவையே குறிக்கும் என்று எல்லா அறிஞர்களின் முடிவாகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந்துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்தில் அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் வசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு தூதர் மூலமாகவே அருளப்பட்டது. குர்ஆனின் கருத்துக்கள் அந்த இறைத்தூதரின் வாழ்விலும், செயலிலும் நடைமுறைப் படுத்தப்பட்டன.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை பற்றி வினவப்பட்ட போது "அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே விளங்கியது" என அவர்கள் கூறிய பதிலில் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் உள்ள பிணைப்பு தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே குர்ஆனும், ஹதீஸும் ஒன்றில் ஒன்று தங்கி நிற்கும் ஒரு முழுமையான அங்கமாகும்.
''நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுள்ள வேதமும் உங்களிடம் வந்திருக்கிறது.'' (அல்குர்ஆன் 5:15)
மேற்கண்ட இறை வசனத்தின் பிரகாரம் கூறுவதானால் குர்ஆனை வாசிக்க விளங்க ஒளியான ஸுன்னா தேவை என்பது விளங்குகிறது. ஹதீஸ்களின் துணையின்றி விளங்க முயல்வது ஒரு இருட்டில் வாசிக்க முயல்வது போலாகும். இறைவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ மூலமாக எவ்வாறு அறிவிக்கப்பட்டதோ அவ்வாறே அவர்கள் அதற்காக கூறும் மார்க்க விளக்கங்களும் வஹீயின் அடிப்படையில் அமைந்தவையாகும். இதையே பின்வரும் வசனம் நமக்கு கூறுகிறது.
''அவர் தம் இச்சைப்படி (எதனையும்) கூறுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டேயன்றி வேறில்லை..'' (அல்குர்ஆன் 53:3,4)
இன்று ஒரு சிலர் மேலோட்ட எண்ணத்தில் குர்ஆனில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதுவே போதும், ஹதீஸ்கள் பல மாதிரி இருக்கின்றன. பலகீனமான ஹதீஸ்கள் என்கிறார்கள், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்கிறார்கள், எனவே குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்றதா? நான் கட்டுப்படுகிறேன். ஹதீஸைப் பற்றி எனக்கு அக்கறை இல்லைஸ ஆகவே குர்ஆன் மட்டுமே போதும் என்கிறார்கள். அவர்களது சிந்தனைக்கு சிலவற்றை எடுத்துக் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
''(மூமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்.'' (அல்குர்ஆன் 24:56)
மேற்கண்ட இறை வசனத்தின் மூலமும் இது போன்ற வேறு வசனங்கள் மூலமும் இறைவன் தொழச் சொல்கிறான். ஜகாத்தைக் கொடுக்கச் சொல்கிறான். ஆனால் குர்ஆனில் எந்த இடத்திலும் எப்படி, எத்தனை ரக்அத்துகள் தொழவேண்டும் என்றோ எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டுமென்றோ விளக்கவில்லை. அதை விளக்கும் கடமையை தன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுத்துள்ளான். இதைத்தான் அந்த வசனத்தின் பிற்பகுதியில் "அவனுடைய தூதருக்கு முற்றிலும் வழிபடுங்கள்" என்று இறைவன் கூறுகின்றான். எனவே, நாம் தொழ வேண்டுமென்றால், ஜகாத் கொடுக்க வேண்டுமென்றால் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னா அடங்கிய ஹதீஸ்களைக் கண்டிப்பாகக் கடை பிடிக்க வேண்டும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
''(நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.'' (அல்குர்ஆன் 16:44)
என்ற இறைக் கட்டளைக்கேற்ப குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தொழுகை, ஜகாத், ஆண் பெண் உறவு, திருமணம், வியாபாரத் தஒடர்பு, சமூக உறவுகள், வாழ்க்கை நெறி முறைகள் போன்ற பலவற்றையும் வார்த்தைகளால் விளக்கியும், செயல்படுத்தி காட்டியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். குர்ஆன் பொதுவாக "தொழுகையை நிறைவேற்றுவீர்களாக!" என்று கட்டளை பிறப்பிக்கிறது. அந்த தொழுகையை நிறைவேற்றும் நேரங்கள், முறைகள், அதன் ரக்அத்துகள், ருகூவு, சுஜூது போன்றவைகள் ஸுன்னாவிலேயே விளக்கப்படுகிறது. அவற்றை ஹதீஸ்களே நமக்கு விளக்கமளிக்கிறது; குர்ஆனல்ல.
நோன்போடு தொடர்புடைய (அல்பகரா 187) திருவசனம் அருளப்பட்ட போது அதீபின்ஹாதிம் ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழர் இதில் குறிப்பிடப்படும் கய்துள் அப்யழு (வெள்ளை நூல்) கய்தில் அஸ்வதி (கறுப்பு நூல்) என்பது இரண்டு நூல்களைக் குறிக்கிறது என்ற கருத்தைக் கொண்டிருக்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுவது இரவின் இருட்டையும், பகலின் வெளிச்சத்தையுமே என்று விளக்கமளித்தார்கள். (அதாரம்: ஸஹீஹ் புகாரி, கிதாபுத் தஃப்ஸீர்) குர்ஆனில் ஜகாத் வசனம் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கூறப்படுகிறது. ஒவ்வொரு பொருளிலும் ஜகாத் அளவிடப்படும் முறை, அதன் பங்கீடு பற்றிய விரிவான விளக்கங்களை ஹதீஸ்களிலேயே காண முடிகிறது.
"உங்களுக்கு வியாபாரத்தை அல்லாஹ் அனுமதித்து வட்டியை ஹராமாக்கினான்" என குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் எல்லா வகையான வியாபாரத்தையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதையும் மதுபானம், பன்றி இறைச்சி, ஏமாற்றி விற்கும் வியாபார முயற்சிகள் ஆகியவைகளை அனுமதிக்கப்படாத வியாபாரங்கள் என்று ஹதீஸ்களே தெளிவு படுத்துகின்றன.
''திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்.'' (அல்குர்ஆன் 5:38)
திருட்டுக் குற்றத்திற்காக திருடியவர்களின் கரத்தைத் துண்டித்து விடும்படி குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஆனால் இதில் வலக்கரம்தான் முதலில் வெட்டப்பட வேண்டும் என்ற விளக்கத்தை ஹதீஸ்களிலேதான் காணப்படுகிறது. ஒரு கவசத்தின் பெருமதியை விட குறைந்த பெறுமதியுள்ள ஒரு பொருளைத் திருடியதற்காக ஒருவரின் கரம் வெட்டப்படக்கூடாது; புத்தி சுவாதீனமற்றவர்கள்; குழந்தைகள் மேலும் பழங்கள், உணவுப் பண்டங்களைத் திருடிய குற்றத்திற்காக ஒருவரின் கரம் துண்டிக்கப்படக்கூடாது. ஒருவரின் கை மணிக்கட்டு வரைதான் துண்டிக்கப்பட வேண்டும்; முழங்கை வரை அல்ல என்ற விவரங்களை ஹதீஸ்களிலே காண முடிகிறது.
குர்ஆனில் அந்நிஸா சூராவில் 11,12,176 வசனங்களில் வாரிசுரிமை பற்றிய விதிகளையும், சூரா பகராவில் 226 முதல் 237 வரையிலும் ஸூரா அத்தலாக்கின் 1 முதல் 5 வரை உள்ள வசனம் விவாகரத்து பற்றிய சட்டங்களை ஹதீஸ்களின் துணையின்றி முறையாக விளங்குவதோ செயல்படுவதோ எந்த வகையிலும் முடியாத ஒன்றாகும். குர்ஆனில் பொதுவாக கூறப்படும் இது போன்ற சட்டங்களையும் கடமைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விளக்கம் நிறைந்த ஹதீஸ்கள் அல்லவா நமக்கு விரிவாக விளக்குகின்றன.
ஃபர்ளு தொழுகைக்கு முன் பின் சுன்னத் தொழுகைகள், தஹிய்யதுல் மஸ்ஜித், பெருநாள் தொழுகை, ஜனாஸா தொழுகை, இஸ்திகாரா, லுஹா போன்ற தொழுகைகளின் குறிப்புகள் குர்ஆனில் இல்லை. இவையெல்லாம் ஹதீஸ்களிலே காணப்படுகிறது. இப்படிஸ குர்ஆனை விளங்க குர்ஆனில் கூறப்பட்ட இறைக்கட்டளையை நிறைவேற்ற ஹதீஸ்களே மிக முக்கியம் என்பதை எடுத்துக் கூறுவதானால் இக்கட்டுரை மிகமிக நீண்டு விடும்.
''(நபியே!) நீர் கூறுவீராக நீங்கள் எனக்கு வழிப்பட்டு நடப்பீர்களேயானால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான்.'' (அல்குர்ஆன் 48:16)
''அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் வழிபடுங்கள், அன்றியும் நீங்கள் செய்பவற்றை யெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனே.'' (அல்குர்ஆன் 58:13, 3:33)
''(மூஃமீன்களே) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜக்காத்தை கொடுங்கள்; மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.'' (அல்குர்ஆன் 24:56)
''எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள்.'' (அல்குர்ஆன் 24:52)
மேலும் மார்க்கத்தை விளங்க குர்ஆன் மட்டும் போதும் என்பவர்கள் உண்மையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பல குர்ஆன் வசனங்களை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை உணர வேண்டும். மேலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் குர்ஆனையே மறுக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
மேலும் ஹதீஸ்களில் பலவீனமானை; இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நுழைந்து விட்டன; யூதர்கள் சதி செய்து நுழைத்து விட்டார்கள்; ஆகவே ஹதீஸ்களை எடுக்க முடியாது என்று கூறி அவற்றை மறுப்பதும் அறிவுக்கு பொருத்தமற்றச் செயலாகும். இறைவனின் பெயரால் பல மூட நம்பிக்கைகளும், அனாச்சாரங்களும், ஏமாற்று வேலைகளும் நுழைந்து விட்டன; இடத்தரகர்களான ஒரு சிரு கூட்டம் பெருங்கூட்டமான மக்களை ஏய்த்துப் பிழைக்க வழி ஏற்பட்டு விட்டது; அதனால் அந்த இறைவனே இல்லை என்று கூறி ஒரே இறைவனையும் மறுக்கும் நாஸ்திகம் பேசும் அரைக் கிணறு தாண்டுகிறவர்களுக்கும், பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் காரணம் காட்டி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லை. இவர்களும் அரைக்கிணறு தாண்டுபவர்களே என்பதை உணர வேண்டும்.
இடைத்தரகர்களை ஒழித்துக்கட்டி சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் அமையப் பாடுபடுவது எந்த அளவு அவசியமோ அதே போல் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தெளிவாக அடையாளம் கண்டு அவற்றை நிராகரிப்பதோடு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை எடுத்து நடக்க முன்வர வேண்டும்.

Tuesday, May 22, 2012


மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது!

வயதில்பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.
மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை.
எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'அமருங்கள்' என்றனர். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, கூறினார்கள். (நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552)
மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.
உலகத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678)
தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.
ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்' என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 701)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு.
அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.
ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக் கூடாது.
பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வரவேற்றுள்ளனர். (திர்மிதீ 3807)
நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.
ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.
  காலில் விழக் கூடாது 

ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?' எனக் கேட்டார்கள். 'மாட்டேன்'என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால்கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு நூல்: அபூதாவூத் 1828)
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது 'எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.
காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
'உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே' என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள்.'எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள்' என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர். எனவே தமது கால் விழுமாறு மக்களுக்கு வழி காட்டுவோர் கயவர்களாவர்.

Friday, May 18, 2012


மார்க்கத் தீர்ப்புகள் – கப்றுகளை தரிசித்தல்


வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு சவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும், சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள், குடும்பத்தினர்கள், அனைவர் மீதும் உண்டாவதாக!
கேள்வி : மரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்க்காகுமா?
பதில் : மரணித்தவர்களிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்கில் சேரும், எவர் இப்படியான பெரும் பாவங்களில் ஈடுபடுவாரோ அவர் இஸ்லாமீய வட்டத்தை விட்டு வெளியேறிவராவார்.
அல்லாஹ் கூறுகிறான்:
‘எவர் அல்லாஹ்வுடன் வேறு எவரையும் இணைத்து அழைப்பாரோ அவருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நிச்சயமாக அவரது தீர்ப்பு அல்லாஹ்வின் முன்னிலையிலாகும். நிச்யமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்’
மற்றுமோர் இடத்தில்:
இன்னும் அவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள், ஒரு வித்தின் (மேலிருக்கும்) தொலி அளவும் அதிகாரம் பெறமாட்டார்கள்’ (பாதிர்: 14).
கேள்வி : நபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிக்கும் நோக்கில் பிரயாணம் மேற்கொள்ள முடியுமா? இப்படியாக தரிசிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில் : கப்றுகளைத் தரிசிக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்ள முடியாது. அது நபிமார்களுடையதாக இருக்கலாம், அவ்லியாக்களுடையதாக இருக்கலாம். அவை வழிகெட்ட பித்அத்தாகும்.
‘மார்க்கத்தின் பெயரால் நன்மையை நாடி மூன்று இடங்களைத் தவிர பயணிக்க முடியாது, புனித மிக்க மஸ்ஜிதுல் ஹராம், எனது மஸ்ஜித் (மஸ்ஜிதுன் நபவி), மஸ்ஜிதுல் அக்ஸா’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘எவர் நாம் கட்டளையிடாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துவார்களோ அது நிராகறிக்கப்படும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மண்ணறைகளை தரிசிப்பது நபிவழியாகும். அதை தரிசிக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்வது தான் தடுக்கப்பட்டுள்ளது.
‘மண்ணறைகளை தரிசியுங்கள் நிச்சயமாக அது உங்களுக்கு மறுமை சிந்தனையை ஏற்படுத்தும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
கேள்வி : அவ்லியாக்களின் கப்றுகளுக்குச் சென்று அவைகளை வலம் வருவது, அவர்களிடம் உதவி தேடுவது, பரக்கத்துக்காக அதைத் தொடுவது, அவைகளிடம் நேர்ச்சை செய்வது, அவைகளைக் கட்டுவது, அல்லாஹ்விடத்தில் வாங்கித் தரும் இடைத்தரகர்களாக அவர்களை நினைப்பது ஆகியவைப் பற்றிய இஸ்லாமீய தீர்ப்பு என்ன?
பதில் : அவ்லியாக்களின் கப்றுகளுக்குச் சென்று அவர்களிடம் உதவி தேடுவது, அவர்களிடம் நேர்ச்சை செய்வது, அல்லாஹ்வின் முன்னிலையில் அவர்களை இடைத்தரகர்களாக எண்ணுவது இந்த அனைத்து செயல்களும் இஸ்லாமிய வட்டத்திலிருந்து ஒருவரைவெளியேற்றுவதும் மற்றும் மரணத்திற்குப் பின் நிரந்தர நரகத்தைப் பெற்றுத்தரும் பெரும் ஷிர்க்காகும்.
கப்றுகளை வலம் வருவதும், அவைகளைக் கட்டுவதும் வழிகெட்ட பித்அத்தாகும். அவர்களது (மரணித்தவரது) திருப்தியை நாடி இவ்வாறு செய்வது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஷிர்கில் சேரும் செயல்களாகும். அக்கப்றுகளை சுற்றி வலம் வருவதன் மூலம் அவர்களது (மரணித்தவரது) திருப்தி, அவர்கள் அருள் புரிவார்கள், நமக்கு துன்பங்கள் வருவதை விட்டுத் தடுப்பார்கள் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.  எனவே இது தடை செய்யப்பட்ட ஷிர்க்காகும்.
கேள்வி : அவ்லியாக்களுக்காக நேர்ச்சைசெய்து, அவர்களுக்காக பிராணிகளை அறுத்து, அச்செயல்களின் மூலம் அவர்களிடம் நன்மையை எதிர்ப்பார்த்து துன்பங்களிலிருந்து நீங்கியிருப்பதற்கு பிரார்த்தப்பது பற்றிய இஸ்லாமீய தீர்ப்பென்ன?
பதில் : அங்கு அடக்கப்பட்டிருக்கும் நல்லடியார்களின் பெயரில் அறுத்துப் பலியிடுவது மிகப் பெரும் ஷிர்க்காகும். எவர் அப்படிச் செய்வாரோ அவர் அல்லாஹ்வுடைய சாபத்திற்கு உட்படுவார்.
‘எவர் அல்லாஹ் அல்லாத ஒன்றின் பெயரில் அறுத்துப் பலியிடுவாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கேள்வி : நல்லடியார்களின் கப்றுகளின் மீது மஸ்ஜித்கள் கட்டுவது,; அம் மஸ்ஜித்களில் தொழுவது. இதைபற்றிய இஸ்லாமீய சட்டமென்ன?
பதில் : அவ்லியாக்களின் கப்றுகளின் மீதோ அதன் அருகிலோ மஸ்ஜித்கள் அமைப்பது முழுமையாக தடுக்கப்பட்டதாகும். அவ்வாறான மஸ்ஜித்களில் தொழுவதும் கூடாது.
‘நபிமார்களின் கப்றுகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
‘அறிந்து கொள்ளுங்கள் இதற்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள் நபிமார்களின், நல்லடியார்களின் கப்றுகளை மஸ்ஜித்களாக ஆக்கிக்கொண்டனர், கப்றுகளை மஸ்ஜித்களாக ஆக்கிவிடாதீர்கள் அதை நான் உங்களுக்கு முழுமையாக தடை செய்கிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஓர் அறிவிப்பில்,
“நபி (ஸல்) அவர்கள் கப்றுகள் பூசப்படுவதை, அவைகள் மீது அமருவதை, அவைகள் கட்டப்படுவதை தடை செய்தார்கள்” என கூறினார்கள்.
கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெயரில் நடைபெறும் மவ்லூத் நிகழ்ச்சிகளில், அது அல்லாத மவ்லூத் நிகழ்ச்சிகளில் அறுக்கப்பட்ட இறைச்சிகளை சாப்பிடலாமா?
பதில் : நபி (ஸல்) அவர்களின் பெயரில் நடைபெறும் மவ்லூத் நிகழ்ச்சியாக இருக்கலாம், வேறு எந்த அவ்லியாவுடைய பெயரில் நடைபெறும் மவ்லூத் நிகழ்ச்சியாக இருக்கலாம், அது அல்லாஹ் அல்லாத ஒருவரின் பெயரில் அறுக்கப்படக் கூடியதாகும்.
இது தெளிவான ஷிர்க். அதை சாப்பிடுவது அனுமதிக்கப்பட மாட்டாது.
‘எவர் அல்லாஹ் அல்லாத ஒருவனின் பெயரில் அறுத்துப் பலியிடுகிறானோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கேள்வி: மரணித்தவரை நல்லடக்கம் செய்து விட்டு அங்கு அல்குர்ஆன் ஓதுவது, மரித்தோரின் வீட்டில் கூலிக்கு அல்குர்ஆனை ஓதுவதின் சட்டமென்ன? நாம் அவர்களை மரித்தோருக்கு கருணைக் காட்டுபவர்கள் என்று தான் அழைப்போம்!
பதில் : மார்க்க அறிஞர்களின் தீர்ப்பு ஒருவரின் ஜனாஸாவை அடக்கியதன் பின் அங்கு அல்குர்ஆனை ஓதுவது தெளிவான வழிகேடான பித்அத்தாகும். இவ்வாறான நடைமுறைகள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. அன்னார் அவ்வாறு செய்வதற்கு ஏவவோ, அல்லது அவர்களோ செய்யவில்லை.
நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் ஜனாஸாவை அடக்கிவிட்டு அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து ‘உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்புத் தேடுங்கள், அவரது உள்ளம் உறுதியுடன் இருப்பதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், ஏனெனில் அவர் இப்பொழுது விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.”
மண்னறையில் அல்குர்ஆன் ஓதப்படுவது நன்மையாக இருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் அதற்கு வழிகாட்டியிருப்பார்கள். மரணித்தவரின் வீட்டில் கூடி அல்குர்ஆனை ஓதுவதற்கு, நபி (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ, தாபிஈன்களிடமோ, அதைத் தொடர்ந்து வந்தவர்களிடமோ எந்த முன்மாதிரியுமில்லை.
ஒரு முஸ்லிம் அவனுக்கு கவலைதரும் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்தால் அவன் பொருமையை மேற்கொள்ள வேண்டும், இன்னும் அவன் அல்லாஹ்வின் திருப்தியை எதிர்ப் பார்த்து செயல்பட வேண்டும். பொருமையாளனின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள்: ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்; அல்லாஹும்ம ஃஜுர்னி பீ முஸீபதி வஹ்லுப் லீ ஹய்ரன் மின்ஹா’.
மரணம் நடைபெற்ற அவ்வீட்டில் கூடி அல்குர்ஆன் ஓதுவது, உணவு வகைகள் செய்து பரிமாறுவது அனைத்தும் வழிகெட்ட பித்அத்தாகும்.
கேள்வி: பெண்கள் கப்றுகளை தரிசிப்பது பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?
பதில் : பெண்களுக்கு கப்றுகளை தரிசிப்பது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறும் போது,
“கப்றுகளை தரிசிக்கும் பெண்களுக்கு சாபம் உண்டாவதாக!”அவர்களுக்கு அது குழப்பமாகும், அவர்களுள் பொறுமையுடன் இருப்பவர்கள் ஒரு சிலரே. அவர்களுக்கு கப்றுகளைத் தரிசிப்பதை தடை செய்தது அல்லாஹ்வின் கருணையை பிரஸ்தாபிக்கும் ஒரு செயலாகும். அவர்கள் குழப்பம் செய்வதிலிருந்தும், குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதை விட்டும் இது தடுக்கும். அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக.
கேள்வி : ஒருவரின் ஜனாஸாவை அடக்கிவிட்டு அவரது கப்ரின் (சமாதியின்) மீது அல்குர்ஆனீய வசனங்களை எழுதி அல்லது அங்கு அடக்கப்பட்டவரின் பெயர், ஊர், திகதி ஆகியவை எழுதுவதற்கு அனுமதி இருக்கிறதா?
பதில் : சமாதியின் மேல் அல்குர்ஆனீய வசனங்களை எழுதுவதற்கோ அல்லது வேறு எதையும் பலகையின் மீதோ, தகட்டின் மீதோ எழுதுவதற்கு அனுமதி இல்லை. ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஓர் அறிவிப்பில்,
“நபிகளார் (ஸல்) அவர்கள் கப்ருகளின் மீது பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதை கட்டுவதையும் தடை செய்தார்கள்’ (முஸ்லிம், திர்மிதி)
நஸாயியின் ஓர் அறிவிப்பில் ‘அதன் மீது எழுதுவதையும்’ என்று இடம்பெற்றுள்ளது.
கேள்வி : சாஸ்த்திரக்காரர்கள், ஜோசியம் பார்ப்பவர்களிடம் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
பதில் : சூனியக்காரர்கள், சாஸ்த்திரக்காரர்கள், ஜோசியம் பார்ப்பவர்களிடம் செல்வதும், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதும் குற்றமாகும்.
‘எவர் எதிர் காலத்தை கணித்துச் சொல்லக்கூடிய ஜோசியக்காரனிடம் போய் ஏதாவது கேட்பானானால் அவனது நாற்பது நாட்களுடைய தொழுகை ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
‘எவன் எதிர் காலத்தைக் கணித்துச் சொல்லக்கூடிய ஜோசியக்காரனிடம் போய் அவன் சொல்வதை உண்மைப்படுத்துவானானால் அவன் முஹம்மத் நபியின் மீது அருளப்பட்டதை நிராகறித்தவனாவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அஹ்லுஸ்ஸுனன்).
கேள்வி : அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதற்கு அனுமதி இருக்கிறதா?
பதில் : அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது அனுமதிக்கப்பட மாட்டாது.
‘அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ் உங்கள் பெற்றோர்கள் மீது சத்தியம் செய்வதை தடை செய்கிறான். உங்களில் ஒருவர் சத்தியம்செய்வாராக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஓர் அறிவிப்பில்,
‘உங்கள் பெற்றோர்கள் மீது சத்தியமிடவேண்டாம். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதேயன்றி சத்தியமிடவேண்டாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், நஸாஈ).
‘எவன் அல்லாஹ் அல்லாத ஒன்றின் மீது சத்தியம் செய்வாரோ அவன் நிராகறித்துவிட்டான், அல்லது ஷிர்க் எனும் பெரும் பாவத்தை செய்து விட்டான்’ (அபூதாவுத், திர்மிதி).

நன்றி: சுவனத்தென்றல்

Friday, May 11, 2012


நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா? கேள்வி :திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா? தயவு செய்து பதில் தரவும் - ரோஷன் பதில் : ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' 
என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். புகாரி (5141) எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் (30 : 21) எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத)நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) முஸ்லிம் 2611 தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான். தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும். தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (6612) நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம். அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம். எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா? என்று பார்க்க வேண்டும். நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது. இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.

Thursday, May 10, 2012


அர்த்தமுள்ள அரபிப் பொன்மொழிகள் (1)

அர்த்தமுள்ள அரபிப் பொன்மொழிகள் (1)
01. லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்.
02. அறிவுத்துறை ஆயிரமானாலும் ஆண்டவன் ஒருவனே.
03. அவனவன் புத்திசாலித்தனத்தில் அவனவனை திருப்திப்பட வைத்த ஆண்டவனுக்கே புகழனைத்தும்.
04. அறிவைத் தேடுபவனும் செல்வத்தைத் தேடுபவனும் திருப்திப்படமாட்டான்.
05. அடிமையின் ஆசை பூர்த்தியானால் சுதந்திர மனிதனாவான். சுதந்திர மனிதனோ ஆசைகளுக்கு அடிமை.
06. அறிஞன் தான் பார்த்தைச் சொல்வான். அறிவுகெட்டவன் தான் கேட்டதைச் சொல்வான்.
07. அதிக மிருதுவாய் இருந்தால் பிழிந்து விடுவார்கள். கடினமாய் இருந்தால் உடைத்து விடுவார்கள்.
08. அதிகாலையில் கிடைக்கும் ஒரு கோப்பை தேநீர் நூறு ஒட்டகைகளுக்குச் சமம்.
09. அரபு மான்களை அலங்கரிக்க ஆபரணங்கள் தேவையில்லை.
10. அறிவுடையோனின் ஒரு நாளைய வாழ்க்கை முட்டாளின் முழு வாழ்க்கைக்குச் சமம்.

11. அன்பான வரவேற்பு அருமையான விருந்தைவிட உயர்வானது.
12. அந்நியரோடு கைகுலுக்கினால் விரல்களைச் சரிபார்த்துக்கொள்.
13. அந்நியனின் உபசரிப்பு அவனுக்கு கடன்பட்டது போல.
14. அந்நியனோடு மலர்த்தோட்டத்தில் இருப்பதைவிட நண்பனோடு சிறையிலிருப்பது மேல்.
15. அரண்மனையில் அடிமையாய் இருப்பதைவிட சிறு குடிசையில் சுதந்திரமாய் இருப்பது மேல்.
16. அதிர்ஷ்டம் தேடுபவரிடம் போகாது. ஏற்கனவே அது உள்ளவரிடமே தேடிப்போகும்.
17. அதிகப் பணமே அதிக பாவத்தின் அஸ்திவாரம்.
18. அதிக ஆலோசனை விரோதத்தை வளர்க்கும்.
19. அடிக்கடி பாதை மாற்றுபவன் சந்தோஷத்தை இழப்பான்.
20. அடுப்பை ஊதுவதை வைத்து அவன் சமைப்பதாக நினைக்கக் கூடாது.

21. அஸர் (மாலை) பொழுதைக்கொண்டு இஷா (இரவு) பொழுது எப்படி எனலாம்.
22. அலை கடலையே விழுங்குபவனுக்கு ஆற்றைக் கண்டால் பயமாம்.
23. அவசரத் தேவையின்போதுதான் மனிதரின் உண்மை நிறம் புரியும்..
24. அவனுக்கு அரண்மனையைக் கட்ட இவனுடைய குடிசையையா இடிப்பது.
25. அவனுடைய ஒரு ஜாடியை நீ உடைத்தால் உன் நூறு ஜாடிகளை உடைத்துத்தான் வஞ்சம் தீர்ப்பான்.
26. அழகிய பணியாட்கள் ஆபத்தானவர்கள்.
27. அளவுக்கு மிஞ்சிய வினாக்கள் பிரிவினைக்கு வித்திடும்.
28. அளவுக்கு மிஞ்சியிருப்பதும் ஒன்றுமே இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.
29. அடுத்த வீட்டுக்காரனுக்காக புதைகுழி வெட்டும்போது உனது உருவ அளவை உள்ளத்தில் கொள்.
30. அருமையான ஆரோக்கியமான வீடு எதுவென்றால் அகலமான முற்றம், உயரமான அறைகள், பெரிய நுழைவாயில், தூரத்திலுள்ள கழிப்பறை ஆகியவற்றைக் கொண்டதே.