widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, July 8, 2011

ஹிஜாபை காரணம் காட்டி சமூகங்களினிடையே பாரபட்சம் காட்டப்படுவதை அனுமதிக்க முடியாது – நியூசிலாந்து பிரதமர்


- செய்தி மூலம்: AFP / Yahoo News – தமிழாக்கம்: அபூ அம்றி -
ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடாத்தப்படல் கூடாது என்று நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணிந்து பயணம் செய்த இரண்டு சவுதி அரேபிய பெண்கள் பேரூந்துகளில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவங்களின் பின்னர் அவரின் இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
 அவுக்லாந்து நகரில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறான சம்பவங்களின் போது சவூதி அரேபிய நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் பேரூந்துகளில் இருந்து பலாத்காரமாக இறக்கி விடப்பட்டதை தொடர்ந்து நியூசிலாந்துக்கான சவுதி இராஜ தந்திரிகள் தமது கண்டனத்தை வெளியிட்டனர்.
பேரூந்து ஓட்டுனர் ஒருவர் ஹிஜாப் அணிந்த சவுதி பெண்ணை வெளியே போ என்று அதட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அப்பெண் அழுதுகொண்டு பேரூந்தை விட்டு இறங்கியுள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் ஹிஜாப் அணிவதை தான் தவறாக கருதவில்லை என்றும் ஹிஜாப் அணிவது அவர்களின் மத நம்பிக்கைகளோடு தொடர்புடையதாகும் எனவும் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து சகிப்புத்தன்மையுள்ள ஒரு நாடு என்றும் பிரான்சில் ஹிஜாபை தடை செய்தது போல் நியூசீலாந்தில் தடை செய்வதற்கான அவசியம் கிடையாது என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு சமூகமும் மற்றைய சமூகங்களின் கலாச்சார விழுமியங்களை மதிக்க வேண்டும் என்று கீ நிருபர்களுக்கு தெரிவித்தார்.
வங்கிகள் போன்ற ஒரு சில இடங்களில் மாத்திரமே முழுமையான புர்கா நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் சாதாரணமாக புர்கா அணிவதில் எந்த விதமமான பிரச்சினையும் இருக்காது என்று . நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் இஸ்லாமிய நிகாப் மற்றும் புர்கா மீதான தடையை விதித்தமை இங்கு நினைவூட்டத்தக்கது
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பேரூந்து ஓட்டுனர்களும் உளவள ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  நியூசிலாந்து பேரூந்து நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த சமபவங்கள் இரண்டும் மத பின்னணியை அடிப்படையாக கொண்டவை என்ற குற்றச்சாட்டை இரண்டு ஓட்டுநர்களும் மறுப்பதால் அவர்களை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ பணி நீக்கம் செய்ய முடியாதுள்ளதாக பேரூந்து நிறுவன முகாமையாளர் ஜோன் கால்டர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கான சவுதி அரேபிய தூதுவர் இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Source : Kattankudi.info

0 comments:

Post a Comment