"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, July 15, 2011
அதிகளவு தண்ணீர் குடித்தால் ஆபத்து!
தண்ணீர் குடிப்பது தொடர்பான ஆய்வுகள் உலகம் முழுவதும் ஏராளமாக மேற்கொள்ளப்பட்டன. முந்தைய ஆய்வுகளில் முக்கியமாகத் தெரிவிக்கப்படும் விடயங்களாக அதிகளவு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும், நினைவுத்திறன் அதிகரிக்கும் போன்ற முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அதிகளவு தண்ணீர் குடிப்பது ஆபத்து என்று பிரித்தானியாவைச் சேர்ந்த உடலியல் நிபுணரான ஜி. மார்க்கரெட் தெரிவித்துள்ளார்.
அவர் அதிகளவு தண்ணீர் குடிப்பது தொடர்பாக முக்கியமாகத் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு, மனித உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்த அளவுக்கு தான் தண்ணீர் குடிக்கவேண்டும். பொதுவாக நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படும். அந்த அளவுக்கு குடித்தால் போதுமானது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment