"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, June 3, 2011
இஸ்லாத்தின் பார்வையில் ஆடை
ஒரு முஸ்லிம் தனது வெளித் தோற்றத்தை அழகாகவும் நேர்த்தியாகவும் மரியாதைக்குரிய விதத்திலும் அமைத்துக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாத்தின் பார்வையில் உடை அணிவதன் நோக்கம், ஒன்று: மானத்தை மறைத்தல். மற்றையது அலங்கரித்துக் கொள்ள லுமாகும். இதனையே பின்வரும் அல்- குர்ஆன் வசனம், “ஆதத்தின் மக்களே! உங்களுடைய வெட்கத் தலங்களை மறைப்பதற்காகவும் உங்கள் உடலுக்கு பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம்.” (அஃராப் - 26)
உடலை ஆடையின்றி மறைக்காமல் இருப்பதும் அலங்காரம் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஷைத்தானிய வழிமுறையாகும்.
இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பின்வருமாறு அறிவிக்கிறார்கள்; “எவரிடம் அணுவளவேனும் பெருமை உள்ளதோ அவன் சுவனம் நுழையமாட்டான். இவ்வாறு நபியவர்கள் கூறியபோது ஒருவர், ஒரு மனிதன் தனது உடை அழகாக இருக்க வேண்டும்; தனது பாதணி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அது பற்றி என்ன சொல்கிaர்கள்” என்று கேட்டார். அதற்கு அண்ணலார், “அல்லாஹ் அழகானவன் அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை ஏற்க மறுப்பதும் மனிதர்களை இழிவாக நோக்குவதுமென்றார்கள். (ஆதாரம் - முஸ்லிம்)
ஒருமுறை ஒரு மனிதர் தலையை வாராமலும் தாடியை சீர் செய்யாமலும் நபிகளாரிடம் வந்தார். இதனை அவதானித்த நபியவர்கள், தலைமுடியையும் தாடியையம் வடிவாக சீர்செய்து கொள்ளுமாறு பணித்தார்கள். அவர் அவ்வாறு சீர் செய்துவிட்டு வந்தபோது ‘உங்களில் ஒருவர் சைத்தானைப் போல் தலைவிரி கோலமாக வருவதைவிட இப்படி இருப்பது நல்லதல்லவா என்றார்கள்.
(ஆதாரம்: முஅத்தா மாலிக்)
மற்றொரு சந்தர்ப்பத்தில் அழுக்கடைந்த ஆடையுடன் இருந்த ஒருவரைப் பார்த்த நபியவர்கள், ‘தனது ஆடையை கழுவிக் கொள்வதற்கு இவருக்கு எதுவும் கிடைக்கவில்லையா? என்று கூறி கண்டித்தார்கள்.’ (ஆதாரம் - அபூதாவூத்)
ஜும்ஆ, பெருநாள் தொழுகை போன்ற மக்கள் கூடுகின்ற இடங்களுக்கு சமூகம் தருவோர் தூய்மையாக அழகாக வரவேண்டும் என நபிகளார் வலியுறுத்தியுள்ளனர். முடியுமாயின் தனது தொழிலுக்காக பாவிக்கும் ஆடைகளைத் தவிர ஜும்ஆவுக்கு அணிந்து செல்வதற்கு மேலதிக இரு ஆடைகளை வைத்துக்கொள்வதில் எவ்வித தவறுமில்லை என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment