"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Monday, June 6, 2011
தேசிய பெண்கள் ஆணையம்' அமைக்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நடைவடிக்கை!
இலங்கையில் பெண்களின் தேவைகளை கவனிப்பதற்காக ஆண்- பெண்- இருபாலாரையும்
உள்ளடக்கிய "தேசிய பெண்கள் ஆணையம்" ஒன்றை அமைக்கவுள்ளதாக மகளிர் மற்றும்
சிறுவர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார்.
சட்டம்- ஆரோக்கியம்- கல்வி- விஞ்ஞானம்- சுற்றுச்சூழல்- தொழில் உறவு-
உளவியல் உட்பட 10 விடயங்களை கவனிப்பதற்காக அமைக்கப்படவிருக்கும் இந்த
ஆணைக்குழு 5 பெண்களும் 4 ஆண்களும் என மொத்தம் 9 பேர் அங்கம் வகிக்கத்தக்க
வகையில் அமையவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
ஏற்கனவே பெண்கள் தொடர்பான
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பெண்களை மட்டும் கொண்ட தேசிய மகளிர்
செயலகம்- இலங்கை மகளிர் பணியகம் ஆகியன இருக்கின்ற போதிலும் அவற்றில்
பெண்கள் மட்டுமே அங்கம் வகிப்பதால் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்
நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே உத்தேச ஆணைக்குழு
ஆண்- பெண் இருபாலாரையும் உள்ளடக்கியதாக அமையவிருக்கின்றது என்றும் அவர்
தெரிவித்தார்.
ஏற்கனவே நடை முறையிலுள்ள இலங்கை மகளிர் பணியகத்தின்
அதிகாரங்களை பறிப்பதாகவோ அல்லது குறைப்பதாகவோ இந்த ஆணைக்குழு அமைய மாட்டாது
என்றும்- போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் விடயத்தைப் பொறுத்த வரை தனது
அமைச்சு இந்த அரசாங்கத்துடன் இணைந்து விசேட வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்த
விருப்பதால் உத்தேச ஆணைக்குழுவின் நோக்கத்தில் அது உள்ளடக்கப்படக் கூடிய
வாயப்பகள் இல்லை என்றும் அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment