widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, June 6, 2011

மன்னிப்பு என்பது அன்பை திறந்து வைக்கின்ற சாவி


எல்லோரையும் நேசியுங்கள்:
உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால் முதல் மந்திரம் இதுதான். எல்லோரையும் நேசியுங்கள். உங்களிடமிருந்து அன்பை மற்றவருக்கு அனுப்புங்கள். கோபம், வெறுப்பு, கடுமை என எல்லாம் மற்ற வரை என்ன செய்கிறதோ இல்லையோ உங்களை, உங்கள் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
எதற்கு மற்ற வர் மேல் கோபப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தைப் பலி கொடுக்க வேண்டும். பதிலாக ஒவ்வொருவரை யும் நேசியுங்கள். அன்பு காட்டுங்கள். எதிரில் இருக்கிறவர் கையில் இருக்கும் ஆயுதங்களை அழிக்கும் சக்தி அன்புக்கு உண்டு. அன்பை உங்களுக்காக உங்கள் மனம் மற்றும் உடல் நலனுக்காகப் பயன்படுத்துங்கள்.

யாரும் கெடுதல் செய்பவர்கள் இல்லை.
மனதில் எந்தப் பதட்டமும் ஏற்படா திருக்க திரும்பத் திரும்ப இதை உங்கள் மனதிற்குச் சொல்லுங்கள். நம்மைப் பொறுத்தவரை யாரும் கெடுதல் செய் பவர்கள் இல்லை. எங்கோ, என்றோ ஒரு கெட்ட விடயத்தை ஒருவர் செய்துவிடுவார் என்ற எண்ணத்தில் எப்போதும் நாம் கெட்டவர்களைத் தேடிக் கொண்டு இருக்கிறோம். வேண்டாம். யாரும் கெட்டவர்கள் இல்லை என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டு நாளைத் தொடங் கிப் பாருங்கள். நாள் எவ்வளவு மகிழ்ச்சியாக நகருகிறது என்று.

மனதின் குரலை கேள்
நாம் இந்த விடயத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. நமக்காக நம்மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகள் சொல்கிறது. நாம்தான் அலட்சியப்படுத்துகிறோம். "அடடா..... அப்பவே நினைச்சேன்....." என்று நாம் கை உதறும் சந்தர்ப்பங்கள் நமக்காக நம் மனம் பேசியதைக் கேட்கத் தவறிய சந்தர்ப்பங்கள்தான். எந்த விடயத்தையும் முடிவெடுக்கும் முன் இரண்டு நிமிடம் மனம் பக்கம் தள்ளி வையுங்கள். பின் கேளுங்கள் பின் முடிவெடுங்கள். உங்கள் மனம் உங்களைவிட உங்களுக்காக கவலைப்படுகிறது.

நம்பிக்கை எனும் சாவி
நன்றாக இருக்கிறோம் என்று நம்புங்கள். நல்லது நடக்கிறது என்று நம்புங்கள். நல்ல வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நம்புங்கள். நடந்த சில கசப்பான சம்பவங்களும் நல்லவற்றை அடையாளம் காட்டவே நடந்தன என்று நம்புங்கள். நம்புவது என்பது மகிழ்ச்சியின் கதவைத் திறக்க உதவும் சாவி. சந்தோஷத்தின் கதவைத் தட்டி தட்டிச் சோர்ந்து போய்விட்டதாக நினைக்கிaர்களா? சுலபமாக கதவைத் திறந்து சந்தோஷத்தை அடைய முடியும்.

உங்கள் தவறுக்கு வெட்கப்படவும்
சில நேரம் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகளை மறப்பது, வெட்கப்படுவது, அவமானப்படுவது என்று மூன்று வழிகளில் எதிர்கொள்ளலாம். மறப்பதால் திரும்ப தவறு நடக்க வாய்ப்புகள் ஏற்படும். அவமானப்பட்டால் மனம் பாதிக்கும். கோபம், வெறுப்பு, சோகம் என அந்த வழி மனிதனை அழுத்தும். மூன்றாவதாக இருக்கிற வெட்கப்படு வதுதான் நல்ல வழி. நம்மையும் அழிக்காமல், திரும்பவும் நடக்கவிடா மல் தடுக்கும் சக்தி அதற்கு உண்டு.

உங்கள் காயங்களை குணப்படுத்துங்கள்
ங்களுக்கு தியானத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது மிகப் பொறுமையாக அதன் சக்தியை அடைய முடியாமல் இருக்கலாம். பரவாயில்லை. தியானம் வேண்டாம். சில நிமிடங்கள் கண்களை மூடுங்கள். மனம் வழி உங்கள் காயங்கள் ஆறு வதாக நினைக்கத் தொடங்குகள். ஒரு இரண்டு மூன்று நிமிடம் போதும். எந்த தோல்வியின் காயத்தையும் இது ஆற்றத் தொடங்கும். உடல் காயத்தை உங்கள் மருத்துவர் பார்த்துக் கொள்வார்.

சந்தோஷம் உங்கள் உரிமை
பிறக்கும்போதே எப்படி உங்களுக்குச் சில உரிமைகள் வந்துவிடுகிறதோ அப்படியே சந்தோஷமாக இருப்பதும் வந்துவிடுகிறது. எதற்காகவும் உங்கள் உரிமைகளில் எந்த ஒன்றையும் இழக்காதீர்கள். அதுவும் சந்தோஷமாக இருக்கிற உரிமை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிற உரிமை. அதை இழப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை இழக்க வேண்டுமா என்று யோசியுங்கள்.

மன்னித்துப் பாருங்கள்
எந்தத் தவறுக்காகவும் எவரையும் ஒரு முறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேவைப்படுவது. மற்றவை மன்னிப்பது போலவே உங்களையும் நீங்கள் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.

எல்லாமே சரியாக இருக்கும்
ஆம் இது ஒரு விதத்தில் ஆன்மீக தன்மையை நோக்கி நகருகிற நிலை. மனதை நோக்கிப் பாருங்கள். எல்லாமே சரியாக இருக்கும் என்கிற அபிப்பராயம். நம்எண்ணமே நல்லதையும், கெட்டதையும் தீர்மானிக்கிறது என்று ஷேக்ஸ்பியர் சொன்னது இதுதான். நீங்கள் உங்கள் இதயத்தில் என்னவாக இருக்கிaர்களோ அதுவாகவே ஆகிaர்கள் என்று ஜீனஸ் சொன்னது.

இறைவன் அல்லது இயற்கையை நோக்கி
இந்தச் சக்தியை இறைவன் என்று நம்புகிறவர் இறைவனை நோக்கி நகரலாம். ஒரு இயற்கை சக்தி என்று ?uஞிகிறவர் அதை நோக்கி நகரலாம். பாவம், நோய், மரணம் என எல்லாம் பயம், தயக்கம், கொடுமை என அதன் நண்பர்களையே துணையிருக்க அழைக்கும். ஆனால் இயற்கையின் ஒளியின் முன் நாம் அதிலிருந்து விடுபட்டு அமைதி அடைய முடியும்.

உங்களது நாளுக்காக காத்திருங்கள்
உங்கள் துயரம் எவ்வளவு அதிகமானது அல்லது உங்கள் தோல்வி எவ்வளவு பின்னோக்கி தள்ளியிருக்கிறது என்பது முக்கியமானது அல்ல. அதிலிருந்து விடுபட்டு உங்கள் நாளுக்காக திடமுடன் காத்திருப்பதுதான் முக்கியமானது. உங்கள் நாள் வருகிறது என்று நம்புங்கள். அதற்காக காத்திருங்கள்.

0 comments:

Post a Comment