widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, June 11, 2011

இந்திய தூதுக்குழு இன்று இலங்கை விஜயம்

இந்தியாவின் உயர் மட்டத் தூதுக்குழுவினர் இன்று நாட்டிற்கு வருகைதரவுள்ளனர்.


இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இவர்கள் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பிரிவுப் பணிப்பாளர் சரத் திசாநாயக்க குறிப்பிட்டார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன், இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ், உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரீஸை இன்று சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பிரிவுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று நண்பகல் 12 மணியளவில் இலங்கையை வந்தடைந்தனர்.

இந்தக் குழுவினர் விசேட விமானமொன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டார்.


இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய விசேட பிரதிநிதிகள் குழு, நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜூன் 11, 2011 :உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியாவின் உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்று சந்தித்தனர்.


இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார், மற்றும் வெளிவிவகார செயலாளர் நிரூபமாராவ் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அலரிமாளிகையில் சந்தித்தனர்.

இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பை இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளதாக இந்திய உயர்மட்டக் குழுவினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரச தலைவர் ஒருவரினால் விடுக்கப்பட்ட அழைப்பை 14 வருடங்களின் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும். 


ஜெயலலிதாவுக்கு தலையைக் காட்டி மஹிந்தருக்கு வாலைக் காட்டிய மேனன்

இலங்கையில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளுக்கு விரைவானதொரு தீர்வை எட்ட வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஸ அரசிற்கு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது. 

தமிழ் மக்களுடன் இலங்கை அரசாங்கம் விரைவாக சிறந்ததொரு அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். 

இந்திய உயர்மட்டக்குழு இன்று பிற்பகல் அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினூடாக 13 ஆவது அரசியல்யாப்பு சீர்திருத்தத்தை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை முன்னரே வாக்குறுதியளித்திருந்தது. 


ஆனால் இலங்கை அதனை செய்யத் தவறிவிட்டது என்று சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எனினும், இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டதை இந்திய தூதுக்குழு தெரிவித்தது. 

இருதரப்புக்கும் இடையிலான சந்திப்புக்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 

மீனவர் பிரச்சினை குறித்து இரு நாடுகளின் மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடிய தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எனவும் சிவசங்கர் மேனன் மேலும் தெரிவித்துள்ளார்.

சிவசங்கர் மேனனின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் மேனனை சந்தித்த ஜெயலலிதா, 

இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மற்றும் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பாக குழப்பமான தகவல்கள் வெளியாகின்ற நிலையில், 

இது தொடர்பாக சரியான தகவல்களை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிவசங்கர் மேனனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதுடன் , அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் சரியான விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். 

அரசியல் ரீதியாக சிங்களவர்களுக்கு இணையான உரிமைகள் தமிழருக்கும் கிடைக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் சிவ்சங்கர் மேனனிடம் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த காலங்களில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பின்பற்றப்படாது குறித்தும் சிவசங்கர் மேனனிடம் கூறியுள்ளார். 









இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ஸவிடம் எடுத்துரைப்பதாக சிவசங்கர் மேனன் தெரிவித்திருந்தார். 

எனினும் இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.


"விரைவான அரசியல் தீர்வே இலங்கைக்கு நல்லது"







சிவசங்கர் மேனன்இலங்கை அரசு இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வை கூடிய விரைவில் எட்டுவதே நல்லது என இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வந்துள்ள இந்தியாவின் மூத்த அதிகாரிகள் குழு இலங்கை ஜனாதிபதையை சனிக்கிழமையன்று அவரின் உத்யோகபூர்வ இல்லத்தில் சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசரக் சிவசங்கர் மேனன், வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இலங்கை வந்துள்ளனர்.
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கொழும்பில் உள்ள இந்திய ஊடகங்களின் நிருபர்களை மட்டும் அழைத்து இந்திய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒரு உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்திய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
அதேநேரம் இலங்கை தொடர்பில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேசப்படவில்லை என்று சிவசங்கர் மேனன் கூறியதாகவும் பி.டி.ஐ. தெரிவிக்கிறது.
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் இலங்கை வர சம்மதித்துள்ளார் என்ற தகவல் மட்டுமே இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய அதிகாரிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளனர். அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசோடு தாம் இதுவரை நடத்தியுள்ள ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் உரிய திசையில் செல்லாமல் இருப்பதாக தாம் இந்திய அதிகாரிகளிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இனப் பிரச்சனை தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை தாம் இந்திய அதிகாரிகளிடம் முன்வைத்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
முஸ்லிம் தரப்பில் இருந்து எவரையும் இந்திய அதிகாரிகள் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்மட்ட குழுவினர் தமிழ்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை : இலங்கை வரும் இந்தியப் பிரதமர்
இலங்கை சென்றுள்ள இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தை இலங்கை நேரப்படி இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு, தமிழ் மக்களின் மீள்குடியேற்றம்,  இராணுவத்தினரின் அத்துமீறிய குடியேற்றங்கள், விகாரைகள் அமைத்தல் உட்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளின் மதிப்பீடுகளும் இதன்போது ஆராயப்பட்டன.
இந்திய உயர்மட்டக்குழுவில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அங்கம் பெற்றுள்ளனர்.
தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது.
இந்தநிலையில் இந்திய உயர்மட்டக்குழு மூன்றுகட்சி தமிழ் கூட்டணியையும் இன்று முற்பகல் சந்தித்தது.
புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்ரீதரன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இதன்போது வடக்கு கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவ கெடுபிடிகள் குறித்து இந்திய குழுவினரின் கவனத்துக்கு கொண்டு வந்தாக சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஈ.பி.டி.பி என்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியக்குழுவினருடன் தொலைபேசியில் கலந்துரையாடிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியக்குழு நேற்று வெள்ளிக்கிழமை, இலங்கையின் மூவர் அடங்கிய குழுவை சந்தித்தது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் ஆகியோர் இந்தக்குழுவில் அடங்கியிருந்தனர்.
எனினும் ஏற்கனவே இலங்கையின் உயர்மட்டக் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சசருமான பசில் ராஜபக்ச இந்த மூவர் குழுவில் இடம்பெறவில்லை. இதற்கான காரணமும் அறிவிக்கப்படவில்லை.
பசில் ராஜபக்ச கடந்த வாரத்தில் இந்தியாவுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்பியபோதும் அதற்கான வாய்பபு கிட்டாமல் இலங்கை திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை தவிர இந்திய உயர்மட்டக் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தக்குழுவினர் இன்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்தனர். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும் இலங்கை வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டதாக சிவ்சங்கர் மேனன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தெரிவித்ததாக மாத்திரம் இலங்கையின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்தியா திரும்பவுள்ள அவர்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமையும் சந்திக்கவுள்ளனர்.
ஏற்கனவே இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் இந்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், ஜெயலலிதாவை சந்தித்தார்.
பின்னர் இலங்கை சென்று வந்ததும் மீண்டும் அவரை சந்திப்பதாக சிவ்சங்கர் மேனன் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.



அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா தலையிடதாம்!




தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா தலையிடாது என இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசாங்கத்தின் தூதுக்குழு தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலேசாகர் சிவ சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரடங்கிய இந்திய தூதுக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது வடக்கு இராணுவ மயப்படுத்தப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இக்கலந்துரையாடல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்களிடம் சிவசங்கர் மேனன் கூறுகையில்,  இறுதிக் கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வழங்குவதும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதுமே உடனடி இலக்காகும் எனக்கூறினார்.

காணாமல் போனோர் தொடர்பாக விபரங்களை வெளியிடுவது குறித்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீள்குடியேற்ற விடயத்தில் பணிகள் நடைபெறுகின்ற போதிலும் இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டியிருப்பதாக சிவ சங்கர் மேனன் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடனான இரு மணித்தியால பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டதை இந்திய தூதுக்குழு தெரிவித்தது. 

இருதரப்புக்கும் சௌகரியமான வேளையில் இந்த விஜயம் இடம்பெறும் எனவும் இதற்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் சிவ சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை குறித்து இரு நாடுகளின் மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்  இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடிய தீர்மானங்களை அவர்கள் மேற்கொள்வார்கள் எனவும் மேனன் தெரிவித்தார். 

எனினும் இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.






இந்திய உயர்மட்டக் குழு நாடு திரும்பியது
[ சனிக்கிழமை, 11 யூன் 2011, 01:51.42 PM GMT ]
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்மட்டக் குழு இன்று பிற்பகல் இந்தியா சென்றடைந்தது.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான இந்த குழுவில், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் மற்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் இலங்கை வந்திருந்தனர்.
அவர்கள் இலங்கையில் இருந்த காலப்பகுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடனும், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய உயர்மட்டங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் போது வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கான உடனடி அரசியல் தீர்வு குறித்து வலியுறுத்தப்பட்டது.




0 comments:

Post a Comment