widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 24, 2011

பஸ் கட்டணம் 7.6 சதவீதத்தால் அதிகரிப்பு!


தனியார் பஸ்கட்டணம் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 7.6 சதவீதத்தால் அதிக ரிக்கப்பட்டிருப்பதாக தனியார் போக்கு வரத்து சேவைகள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபையும் ஜுலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 7.6 சதவீதத்தால் அதிகரிக்கவிருப்பதாக இ.போ.ச. தலைவர் நேற்று அறிவித்துள்ளார்.
இதன்படி ஆகக் குறைந்த கட்டணங்களான 6 ரூபா 7 ரூபாவாகவும்- 9 ரூபா 10ரூபாவாகவும் 12 ரூபா 13 ரூபாவாகவும் 15 ரூபா 16ரூபாவாகவும் அதிகரிப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பஸ் கட்டண கொள்கை அடிப்படையில் அதிகரிக்கப்படும் இக்கட்டண உயர்வின் படி 99 ரூபா 106 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் உரி மையாளர் சங்கங்களு டன் தேசிய போக்கு வரத்து சேவைகள் அமைச்சும்- தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவும் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தையை அடுத்தே இக்கட்டண அதிகரிப்பு நேற்று அமைச்சர் சி.பி. ரத்னாயக்கவினால் அறிவிக்கப்பட்டது. செய்தியாளர் மாநாட்டி லேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இக்கூட்டத்திற்கு சமுகமளித்திருக்காத போதிலும் 15.5 சதவீத பஸ்கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இல்லையெனில் எதிர்வரும் 27ம் திகதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாகவும் அறிவிருத்திருந்தார்.

0 comments:

Post a Comment