widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, June 16, 2011

இலங்கையில் எயிட்ஸை நோக்கி 1இலட்சத்து 13 ஆயிரம் பேர்!

  விஷேட ஆய்வில் தகவல்
இலங்கையில் எயிட்ஸ் நோய் தொற்றக் கூடிய ஆபத்தான நிலையில்  ஒரு இலட்சத்து 13 ஆயிரம் பேர் வாழ்வதாக விஷேட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சின் கீழுள்ள எச். ஐ. வைரஸ்  எயிட்ஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் நிமல் எதிரிசிங்க இந்தத் தகவலை தெரிவித்தார்.
கனடா மெனிட்டோபா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்திய ஆய்வின் அடிப்படையிலேயே இம்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருப் பதாக அவர் குறிப்பிட்டார்.
பாலியல் மற்றும் இனவிருத்தி ஆரோக்கியம் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கவனம் என்ற தொனிப்பொருளில் இலங்கை குடும்பத் திட்டம் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்.
இலங்கையில் வியாபார நோக்கில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் 40 ஆயிரம் பேரும்  தன்னினச் சேர்க்கையாளர் 33 ஆயிரம் பேரும்  ஹெரோயின் போதைப் பொருள் பாவனையாளர்கள் 40 ஆயிரம் பேரும் இருப்பது இந்த ஆய்வின் மூலம் இனங்காணப் பட்டுள்ளது.
அதன்படி ஒரு இலட்சத்து 13 ஆயிரம் பேர் எயிட்ஸ் நோய் தொற்றக் கூடிய ஆபத்தான நிலையை எதிர்நோக்கியவாறு  வாழ்கின்றனர்.
ஆண் பெண் தவறான பாலியல் தொடர்பு  தன்னினச் சேர்க்கை  போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்றனவே எச். ஐ. வி. பரவுவதற்கான பிரதான வழிகளாக விளங்குகின்றன. அதனால் எச். ஐ. விஃ எயிட்ஸின் பேராபத்திலிருந்து இலங்கையரைப் பாதுகாக்க விசேட கவனம் செலுத்துவது மிக முக்கியமான பணியாகும்.
எச். ஐ. விஃ எயிட்ஸ் பரவுதல் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கி வருகின்றது. என்றாலும்  இந்நிலைமையைத் தொடர்ந்தும் பேண முடியுமா? என்ற ஐயம் இப்போது மேலெழுந்திருக்கின்றது.
இந்நாட்டில் எச். ஐ. வி. தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர் 1987 ஆம் ஆண்டில் தான் கண்டு பிடிக்கப்பட்டார். அன்று முதல் இவ்வருடம் மார்ச் மாதம் வரையும் 1350 பேர் இத் தொற்றுக்குள்ளானவர்களாக எமது சிகிச்சை நிலையங்களில் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் 221 பேர் எயிட்ஸாகி உயிரிழந்து உள்ளனர். 313 பேர் எயிட்ஸூடன் உயிர் வாழுகின்றனர். என்றாலும்  இந்நாட்டில் மூவாயிரம் பேர் எச். ஐ. வி. தொற்றுக்கு உள்ளானவர்களாக இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment