widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 17, 2011

ரவ்ழதுல் அப்கார் : உணவு உண்ணும் முறை


நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அன்னை ஆயிஷா (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“உங்களில் ஒருவர் உணவு உண்ண முற்பட்டால் “பிஸ்மில்லாஹ்” என்று கூறட்டும். அவ்வாறு கூற மறந்துவிட்டால், ‘பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆஹிரஹு’ என்று சொல்லட்டும்.
(ஆதாரம்: புகாரி)
நபியவர்கள் சொன்னதை தான் செவிமடுத்ததாக, ஜாபிர் (றழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்;
‘ஒருவர் தனது வீட்டினுள் நுழையும் போதும் உணவு உட்கொள்ளும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் சைத்தான் (அடுத்த சைத்தான்களை விழித்து) உங்களுக்கு இரவு தூங்குவதற்கு இடடோ, உண்ணுவதற்கு உணவோ (இன்று) இல்லையெனக் கூறுவான். அந்த மனிதன் வீட்டினுள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூரவில்லையாயின் சைத்தான் “உங்களுக்கு இரவு தூங்குவதற்கு இடம் கிடைத்துவிட்டது” என்பான். உணவு அருந்தும் போதும் அந்த மனிதன் அல்லாஹ்வை நினைவுபடுத்தவில்லையாயின், சைத்தான் “உங்களுக்கு இரவு தூங்க இடமும், இரவுச் சாப்பாடும் (இரண்டும்) கிடைத்து விட்டன” என்பான்.
(ஆதாரம்: முஸ்லிம்)
உணவு உட்கொள்ள ஆரம்பிக்கும் போது “பிஸ்மில்” சொல்வது மிக முக்கியமானதொரு ஸ¤ன்னா என்பது இமாம்களின் ஏகோபித்த முடிவாகும். இவ்வாறு பிஸ்மில் சொல்லாதவர் தனது உணவில் சைத்தானையும் சேர்த்துக் கொள்கிறார் என்று நபியவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இப்னு உமர் (றழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.
”உங்களில் ஒருவர் தனது இடது கையால் சாப்பிடக் கூடாது, இடது கையால் குடிக்கவும் கூடாது. உண்மையில் சைத்தான் இடதால் சாப்பிடுகிறான், இடதால் குடிக்கிறான்.
(ஆதாரம்: முஸ்லிம்)
அபூ ஸல்மா (றழி) அவர்கள் கூறுகிறார்கள்; “நான் சிறுவனாக இருந்த போது ஒரு முறை நபியவர்களின் மடியில் அமர்ந்திருந்தேன். எனது கை உணவுத் தட்டில் அங்குமிங்குமாக சென்றது. இதைக் கண்ட நபியவர்கள், சிறுவனே, பிஸ்மில் சொல், வலது கையால் சாப்பிடு, உனக்கு அருகே இருக்கும் உணவைச் சாப்பிடு” என்றார்கள்.

0 comments:

Post a Comment