widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, June 25, 2011

ரஷ்ய விஞ்ஞானிகளின் உயிரிழப்பினால் ஈரானின் அணு உலை நிர்மாண முயற்சிக்கு பின்னடைவு _


ஈரான் அணு உலை நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய விஞ்ஞானிகள் விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து இவர்களின் உயிரிழப்பு ஈரான் அணு உற்பத்திக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த இவர்கள் ஐவரும் நீண்டகாலமாக ஈரான் அணு உலை நிர்மாணப்பணியில் ஈடுபட்டுவந்துள்ளனர். 

ஐவரில் மூவர் அணு உலை வடிவமைப்பாளர்கள் என்பதுடன் மற்றைய இருவரும் அணுத் தொழிநுட்பத்தில் நிபுணர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை ரஸ்யாவின் முக்கிய அணு முகவர் நிலையமொன்று வெளியிட்டுள்ளது. ரஸ்யாவில் டியு- 134 என்ற விமானம் கடந்த திட்களன்று விபத்துக்குள்ளாகியது இவ்விமானத்தில் இந்நிபுணர்கள் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்கள் அணு உலை நிர்மாணத்திற்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மொஸ்கோவிலிருந்து புறப்பட்ட விமாத்தில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்கள் உயிரிழப்பானது ஈரானின் சர்ச்சைக்குரிய அணு உற்பத்தி முயற்சிக்கு விழுந்த பாரிய அடியென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

மேலும் ரஸ்யாவிற்கும் இதுவோர் பாரிய இழப்பாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment