"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, June 3, 2011
விமானத்தில் நடுவானில் இரு பயணிகள் சண்டை
வானில் பறந்து கொண்டிருந்த விமா னத்தில் பயணிகள் இருவர் திடீரென சண்டைபோட்டதால் நிலைமையை சமாளிக்க உடனடியாக 2 போர் விமா னங்கள் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டன. இவற்றின் துணையுடன் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் டல்லஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கானா நாட்டுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 990 ரக விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஒரு பயணி தனது இருக்கையை சற்று சாய்த்துள்ளார். இதற்குப் பின் பக்கம் அமர்ந்திருந்த சக பயணி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு நடந்தது. இதனால் கூச்சல் நிலவியதால் விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.
விமானத்தின் பாதுகாப்புக்காக அண்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து எப் 16 ரக இரண்டு போர் விமானங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. மீண்டும் டல்லஸ் விமான நிலையத்துக்கு திரும்பி வருமாறு பயணிகள் விமானத்துக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. "நடுவானில் விமானம் பறக்கும்போது இடையூறு ஏதேனும் ஏற்பட்டால் அவற்றின் பாதுகாப்புக்காக போர் விமானங்களை அனுப்புவது மரபு" என அமெரிக்க கடற்படை லெப்டினன்ட் கவர்னர் வில்லியம் லெவிஸ் தெரிவித்தார்.
"சண்டை செய்த இருவரால் பயணிகளுக்கு நேர்ந்த சிரமங்கள் குறித்து அறிவுரை கூறினோம். அவர்களை கைது செய்யவில்லை" என டல்லஸ் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ரொப் இங்லிங் தெரிவித்தார்.

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment