widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, June 28, 2011

ரிஸானாவை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ஜூன் 28, 2011 : சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கை காப்பாற்றுவதற்கு சர்வதேசத்தின் உதவழயை பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சுயுன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவிக்கின்றார்.ரிஸானாவை விடுதலை செய்யக்கோரி இன்று கொழும்பில நடைபெற்ற ஆர்ப்பாட்டித்தின் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.கொழும்பில் உள்ள சவூமி அரேபிய தூதுவராலயத்திற்கு முன்றலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உயிருக்கான இழப்பீட்டை வழங்கி இந்த ரிஸானாவை காப்பாற்ற அரசாங்த்திற்கு வலுவில்லையா? ரிஸானா நபீக் என்பவர் பாடசாலை செல்லும் மாணவி, அவருக்கு மரண தண்டனை வழங்க முடியாது. முகவர் நிலையமும் அரசாங்குமும் இணைந்து அவரின் உருவத்தையும் வயதையும் மாற்றியுள்ளனர்.அதனால் எவரோ செய்த குற்றத்துக்கு இந்தப் பிள்ளையை தண்டிக்க இடமளிக்கமுடியாது.இது தொடர்பில் அரசுக்கும் அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சுக்கும் கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி மன்னருக்கும் அவரின் மகனுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் எவ்வித பயனும் இல்லையென்றால் இலங்கை அரசாங்கத்துக்கு வலுவில்லை என்பதால் நாம் சர்வதேசத்துக்கு செல்ல தீர்மானித்துள்ளோம்.இதேவேளை இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மத்திய மாகாண  சபை உறுப்பினர் ஷாந்தினி கோங்காகே இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.


அவருக்கு சிரச்சேதம் செய்யவுள்ளதாக சவுதி அரேபிய அரசாங்கம் தீர்மானி்த்துள்ள விடயத்தை நேற்று மாலையே நான் அறிந்துகொண்டேன். றிசானா நபிக்குக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வேண்டுகோளுக்கு அமைவாக சவுதி அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு  அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் கூறினார். அப்படியென்றால் அமைச்சர் டிலான் பெரேரா எந்த அடிப்படையில் அதனைக் கூறினார்? றிசானாவுக்கு மரண தண்டனை வழங்கப்படுமாயின் அதற்கு இந்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். றிசானாவை காப்பாற்ற நாம் செயற்படுவோம். டிசம்பர் மாதம் அமைச்சர் டிலான் பெரேரா கூறியதை அடுத்து நாம்எமதுநடவடிக்ககைளை  
நிறுத்திவிட்டோம். இந்த நடவடிக்கைக  இடைநிறுத்தப்பட்டது. இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மறறும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேராவிடம் நாம் 
வினவினோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட மரண  தண்டனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வேண்டுகோளுக்கு அமைய சவுதி அரசாங்கம் நிறுத்தியது. இந்த தலையீட்டின் மூலம் றிசானாவுக்கு மன்னிப்பு 
கிடைத்துவிட்டதாக அர்த்தப்படவில்லை. இருப்பினும் அந்த நாட்டில் உள்ள ஷரியா சட்டத்துக்கு அமைய றிசானாவுக்கு முழுமையான மன்னிப்பு பெற்றுக்கொடுக்க நாம் தொடர்ந்தும் செயற்படுகின்றோம். எனினும் றிசானாவுக்கு முழுமையான மன்னிப்பை பெற்றுக்கொடுக்க ஷாந்தினி கொங்கஹவுக்கும் ரஞ்சன் ராமாநாயக்கவுக்கும் விருப்பம் இல்லை. 

அதனாலேயே எங்கேயோ உள்ள  பொய்களை கூறிவருகின்றார்கள். மீண்டும் றிசானாவுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை வழங்க நேற்று வரை 
தீர்மானித்திருக்கவில்லை.

0 comments:

Post a Comment