widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, June 12, 2011

உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு


உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது. இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம். இந்த தளம் சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்வது மிக மிக சுலபம் என்று சொல்கிறது.
இணையதளத்தை அமைப்பதற்கு தேவையான கோடிங் எல்லாம் அறியாமலேயே நிமிடத்தில் உங்களுக்கென சொந்த தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது இந்த தளம்.
இப்படி துணிச்சலாக உறுதிமொழி அளிப்பதாலோ என்னவோ வீரமிகு(பிரேவ்சைட்ஸ்)தளங்கள் என பெயர் வைத்துள்ளனர் போலும். முன் போல இணையதளம் அமைப்பது இல்லாமல் இப்போது மிகவும் எளிதாகி விட்டாலும் கூட இணைய சாமன்யர்களுக்கு ஒரு இணையதளத்தை தாங்களே உருவாக்கி கொள்வது என்பது கொஞ்சம் மிரட்சி அளிக்கலாம்.
ஓரளவுக்கேனும் எச்.டி.எம்.எல் போன்றவையும் குறித்த பரிட்சயம் இருந்தால் தான் இணையத்தில் உள்ள கருவிகளை கொண்டு இணையதளத்தை அமைப்பது சாத்தியம். இவையெல்லாம் தேவையேயில்லை. இணையதளம் தேவை என்ற விருப்பம் இருந்தால் போதும் புதிய தளத்தை உருவாக்கி கொள்ள வழி காட்டுகிறோம் என உற்சாகம் அளிக்கிறது பிரேவ்சைட்ஸ்.
வடிவமைப்பு போன்றவற்றையும் இந்த தளமே பார்த்து கொள்கிறது. பிரவுசரிலிருந்தே தளத்தில் தகவல்களை இடம் பெற வைக்கும் வசதி, மின்னஞ்சல், வலைப்பதிவு வசதி போன்றவரை உள்ளடக்கிய இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்று இந்த தளம் உறுதி அளிக்கிறது.
தனி நபர்கள், இசை கலைஞரகள், வர்த்தக பிரிவினர் என அனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிற‌து. உங்கள் தளத்தை இன்றே உருவாக்கி கொள்ளுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதை நிறைவேற்றி தருகிறது என்றாலும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான சேவைகளை போலவே இந்த தளமும் அடிப்படையான தளத்தை மட்டுமே இலவசமாக உருவாகி கொள்ள உதவுகிறது. அந்த இலவச தளத்தில் இட வசதி மற்றும் கூடுதல் அம்சங்களும் குறைவு என்று தான் சொல்ல‌ வேண்டும். முழு வீச்சிலான‌ இணைய‌த‌ளம் தேவை என்றால் க‌ட்ட‌ண‌ சேவைக்கு தான் செல்ல‌ வேண்டும். ஆனால் எளிதான‌து விரைவான‌து என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

0 comments:

Post a Comment