widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, June 5, 2011

கலாநிதி அஹ்மத் அஷ்ரப் இணைப் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றார்


- அபூ றப்தான் -
சவூதி அரேபியா, அப்ஹாவில் அமைந்துள்ள மன்னர் காலித் பல்கலைக்கழகம், உதவிப் பேராசிரியர் கலாநிதி U. L. அஹ்மத் அஷ்ரப் அவர்களுக்கு ‘இணைப் பேராசிரியர்’ (Associate Professor) பதவியை வழங்கியுள்ளது.
எகிப்தின் அல்-அஸ்ஹர், அல்-ப(கு)ய்யூம் பல்கலைக்கழகங்களின் வருடாந்த ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்த கலாநிதி அஷ்ரப் அவர்களின் 4 ஆய்வுக் கட்டுரைகள் இப்பதவியைவழங்குவதில் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.
பின்பு, இவை ஷரீஆ பீட அவை மற்றும் ஹதீஸ் திணைக்களம், பல்கலைக்கழகக் கவுன்ஸில் ஆகியவற்றின் அங்கீகாரத்தைப் பெற்றன. பின்னர் அகடமி கவுன்ஸில் மேற்படி ஆய்வுகளை சவூதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்களுக்கு இரகசிய பரிசீலனைக்கு அனுப்பியது.
அப்பேராசிரியர்கள், ஆய்வுகளைப் பரிசீலித்து தங்களது அறிக்கையை சமர்ப்பித்ததன் பின்பு, மன்னர் காலித் பல்கலைக்கழகம் இணைப்பேராசிரியர் தரத்தை வழங்கியுள்ளது.
கலாநிதி அஷ்ரப் அவர்கள், 1962 இல் காத்தான்குடியில் பிறந்தவர். மாப்பிள்ளை ஹாஜியார் என அழைக்கப்படும் மர்ஹும் உமர்லெப்பை ஹாஜியார் தம்பதிகளின் மகனாவார். 2000 ஆம் ஆண்டு எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர், காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம், மத்திய மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியை கற்றபின் அட்டாளைச்சேனை ஷர்கிய்யா அரபுக் கல்லூரியில் தனது மார்க்கக் கல்வியை மேற்கொண்டு, உயர் கல்விக்காக எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் சென்று ஹதீஸ் துறையில் முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார். ஹதீஸ் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொழும்பு தாருல் ஹதீஸ், காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரி ஆகியவற்றின் தலைவராக இருந்து, தனது முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
முன்னதாக கலாந்தி அஷ்ரப் அவர்கள் இதே பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Source: Kattankudy.imfo

0 comments:

Post a Comment