widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, June 11, 2011

லிபியாவில் பிரிட்டிஷ் படையினர் நுழைந்தால் அங்குள்ள பெண்களின் கற்புக்களைச் சூறையாடுவார்கள்!


லிபியாவில் தரை வழியாக பிரிட்டிஷ் துருப்புக்கள் சென்றால் அவர்கள் அங்குள்ள பெண்களின் கற்புகளை சூறையாடுவார்கள் என்று 72 வயதான ஜெர்மயின் கிரீர் என்ற பெண் உரிமையாளர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

நேற்று பிபிஸியில் ஒளிபரப்பான ஒரு பகிரங்க கருத்துப் பரிமாறல் நிகழ்ச்சியில் இவர் இந்தக் கருத்தை வெளிப்படையாக முன்வைத்ததால் பிரிட்டிஷ் இராணுவ உயர் பீடம் கொதிப்படைந்துள்ளது. 

லிபிய ஜனாதிபதி தனது படை வீரர்களுக்கு வயாக்கரா மாத்திரைகளை வழங்கி தனது நாட்டுப் பெண்களையே கற்பழிக்குமாறு தூண்டி விட்டுள்ளார் என்றும், அவர் தனக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க பெண்களை மானபங்கப்படுத்துவதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுக்களின் நம்பகத் தன்மை குறித்தும் ஜெர்மயின் கிரீர் சந்தேகம் எழுப்பியுள்ளார். 





இவரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்களும் குழப்பமடைந்து விட்டனர். இவர் வேர்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவார். இவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். 

லிபியப் பெண்கள் கடாபியின் படைகளால் கற்பழிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் பிரிட்டிஷ் இராணுவம் அங்கு அனுப்பப்பட வேண்டுமா என்று இவரிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது தான், அந்த விடயத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், ஆனால் பிரிட்டிஷ் இராணுவம் அங்கு அனுப்பப்பட்டால் அவர்கள் லிபியப் பென்களின் மானத்தை சூறையாடுவது நிச்சயம் என்றும் அவர் பதில் அளித்தார். 

எந்தவொரு நாட்டுக்குள்ளும் இன்னொரு நாட்டின் இராணுவம் அனுப்பப்பட்டால், அவர்கள் அங்கு பெண்களை சூறையாடுவது தவிர்க்க முடியாத ஒன்று. இது வரலாறு முழுவதும் காணப்படும் ஒரு நிகழ்வாகும் என்று அவர் மேலும் கூறினார். 

இந்தக் கருத்துக்கள் பிரிட்டிஷ் இராணுவ உயர் மட்டத்தில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் இந்தக் கருத்தை வன்மையாகச் சாடியுள்ளனர்.


0 comments:

Post a Comment