"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, June 10, 2011
ரவ்ழதுல் அப்கார் அல்குர்ஆனின் சிறப்புகள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“எவரேனும் அல்-குர்ஆனின் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படும். ஒரு நன்மை பத்து மடங்காக இருக்கும். அலிப், லாம், மீம் என்பது ஓர் எழுத்து, என்று நான் கூறமாட்டேன். மாறாக அவை மூன்றும் மூன்று எழுத்துக்களாகும்.”
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி), ஆதாரம் : திர்மிதி
இன்னொரு அறிவிப்பின் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்,
“எவருடைய உள்ளத்தில் அல்-குர்ஆனின் ஒரு சிறிய பகுதியாவது இல்லையோ, அவரது உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகும்.
அறிபிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழி), ஆதாரம் : திர்மிதி
சூறா அல் பகராவின் சிறப்பு
“உங்களது வீடுகளை அடக்கஸ்தலங்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் சூறதுல் பகரா ஓதுகின்ற வீடுகளை விட்டும் வெருண்டோடுகின்றான்”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (றழி)
ஆதாரம் : முஸ்லிம்
சூறா அல் கஹ்பின் சிறப்பு:
“யார் சூறதுல் கஹ்பின் ஆரம்ப பத்து வசனங்களை மனனமிட்டிருகிறாரோ அவர் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பளிக்கப்பட்டவர் ஆவார்”
அறிவிப்பவர் : அபூதர்தா (றழி)
ஆதாரம் : முஸ்லிம்
சூறா அல் முல்கின் சிறப்பு:
“அல்குர்ஆனில் 30 வசனங்களைக் கொண்ட ஒரு சூறா இருக்கிறது. அது தன்னை ஓதிவருபவர்களுக்காக (மறுமையில்) அவருக்கு பாவ மன்னிப்பளிக்கப்படும் வரை பரிந்து பேசும். அதுதான் (தபாரகல்லதி.... எனும் வசனங்களுடன் ஆரம்பிக்கும் சூரா ஆகும்.)
ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி)
சூறா அல் பலக், அந்நாஸ் இன் சிறப்பு:
“ஜஹ்பர்” மற்றும் ‘அப்வா’ ஆகிய இரு இடங்களுக்கிடையில் நான் நபியவர்களுடன் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பலத்த காற்று வீசத்தொடங்கியது. கும்மிருட்டும் எம்மைச் சூழ்ந்து கொண்டது. அவ்வேளை நபியவர்கள் சூறதுல்பலக், சூறதுந்நாஸ் ஆகிய இரு சூறாக்களையும் ஓதலானார்கள். பிறகு என்னைப்பார்த்து, “உக்பாவே! இந்த இரண்டு சூறாக்களையும் கொண்டு நீ பாதுகாப்புத் தேடிக்கொள். பாதுகாப்புத் தேடுபவர்களுக்கு இவ்விரண்டையும் தவிர வேறெதுவும் தேவையில்லை..”
அறிவிப்பவர்: உக்பாபின் ஆமிர் (றழி) ஆதாரம்: அபூதாவூத்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment