widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 10, 2011

5 விடயங்களை கற்றுக் கொள்ளுங்கள் !


ஒருநாள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் நாங்கள் அமர்திருந்த போது தூய வெண்ணிற ஆடை அணிந்த மிகக் கருமையான முடியை யுடைய ஒரு மனிதர் எங்களிடம் வந்தார். அவரிடம் பிரயாணத்தின் அடையாளம் ஏதும் காணப்படவில்லை. அவர் நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று அமர்ந்தார். தன் இரு முட்டுக்கால் களையும் நபியவர்களின் முட்டுக்காலுடன் இணைத்து வைத்தார். தன் இரு கரங்களையும் தன் இரு தொடைகளில் வைத்தார். பின்னர் அவர் “முஹம்மதே! இஸ்லாத்தைப் பற்றி எனக்கு அறிவித்துத்தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மத் (ஸல்) அல்லாஹுத் தாஆலாவின் திருத்தூதர் என்று சாட்சி பகர்வதும், தொழுகையை நிலைநாட்டுவதும், ஸகாத் கொடுப்பதும், றமழானில் நோன்பு நோற்பதும், ஹஜ்ஜு செய்ய சக்திபெற்றால் கஃபாவை ஹஜ் செய்வதுமாகும்” எனக்கூறினார்கள். அதற்கவர் “உண்மை உரைத்தீர்” என்றார்.
நபி(ஸல்) அவர்களிடம் அவரே கேட்டு விட்டு அவரே உண்மை, படுத்துவதை பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோ பின்னர் “ஈமானைப்பற்றி அறிவித்துத்தாருங்கள்” என்றார். அதற்கு நபி அவர்கள் நீர் அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங் களையும், அவனுடைய திருத்தூதர்களையும், மறுமை நாளையும் நம்புவதும், நலவு கெடுதி அனைத்தும் அல்லாஹ்தஆலாவின் ஏற்பாட்டைக்கொண்டு நடக்கிறது என்ற தக்தீரை நம்புவதுமாகும், எனக்கூறினார்கள். அதற்கவர் “உண்மை உரைத்தீர்” என்று கூறினார். பின்னர் அவர் இஹ்ஸானைப்பற்றி எனக்கு அறிவித்துத்தாருங்கள் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத் தஆலாவை நீ பார்ப்பது போல் அவனை நீ வணங்க வேண்டும். உண்மையில் நீ அவனை பார்க்கவில்லை என்றாலும் அவன் உன்னைப் பார்க்கிறான் என்று கூறினார்கள். பின்னர் கியாமத் நாளைப்பற்றி எனக்கு அறிவித்துத்தாருங்கள் என்று கூறினார். அதற்கு ரஸ¤ல் (ஸல்) அவர்கள் கேட்பவரைவிட கேட்கப்படுபவர் அவ்விடயத்தைப் பற்றி நன்கு அறிந்தவரல்லர். (அதாவது நாம் இருவரும் அதைப்பற்றி அறியாதவர்களாகவே இருக்கிறோம்) என பதிலளித்தார்கள். பிறகு “கியாமத் நாளின் அடையாளங்களைப்பற்றி எனக்கு அறிவித்துக்கொடுங்கள்” என்றார். அதற்கு ரஸ¤ல் (ஸல்) (அலை) அவர்கள் நூர் அடிமைப்பெண் தனது எஜமாட்டியைப் பெற்றெடுப்பதும், அணிவதற்கு செருப்பு இல்லாத, உடுப்பதற்கு ஒழுக்கான ஆடைகள் அற்ற ஆடு மேய்க்கும் ஏழைகள் கட்டடங்களை உயரமாகக் கட்டுவதில் ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொள்வதையும் நீர் காணுவதாகும் என்றார்கள். பின்னர் அவர் போய்விட்டார். உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது; சில காலம் கழித்திருப்பேன். அப்பொழுது (ஸல்) (அலை) அவர்கள் உமரே! கேள்வி கேட்டவர் யார் என்று நீர் அறிவீரா? எனக்கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹுத்தஆலாவும் அவன் திருத்தூதருமே நன்கு அறிவார்கள்” என்று கூறினேன். அதற்கு ரஸ¤ல் (ஸல்) அவர்கள் அவர்தான் ஜிப்ரீல் அலை ஆவார். உங்களது தீனின் விஷயங்களை உங்களுக்குக் கற்றுத்தருவதற்காக வந்தார் என்று கூறினார்கள்.

0 comments:

Post a Comment