widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, June 6, 2011

முருங்கை மருத்துவம்


வீட்டுத்தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருக்கிறதெனில், எப்போதும் நம்முடன் நல்லதொரு மருத்துவர் இருப்பதாக அர்த்தம். முருங்கைக்காய் பசியை அதிகரிக்கும். 

வயிற்றுப் புண்ணை ஆற்றும், தலைவலியைப் போக்கும், கடும் இரத்தபேதியைக் குணப்படுத்தும், இரத்தத்தை, சிறுநீரைச் சுத்தப்படுத்தும். உஷ்ணம், பித்தம், வாயு தொல்லையுடையவர்கள் மட்டும் முருங்கைக்காயைக் குறைப்பது நல்லது. 

நீரழிவு நோயைத் தீர்க்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு. இலையுடன், எள் சேர்த்து தொடர்ந்து சமைத்துச் சாப்பிட்டால் கடும் நீரழிவு நோயும் கட்டுப்படும்.

காய்ச்சல், உடல் அங்கங்கள் உணர்ச்சியற்றிருத்தல், நரம்புத்தளர்ச்சி இவற்றிற்கு முருங்கைமர வேரை நீர் விடாமல் அரைத்து சிறிதளவு பசும்பாலில் கலந்து காலை, மாலை அருந்தினால் நன்கு குணம் தெரியும்.

இதயத்துக்கு வலுவூட்டும் சக்தி முருங்கைப் பூவுக்கு உண்டு. முருங்கைப்பூவை அவித்து தொடர்ந்து உணவோடு சேர்த்து வந்தால் இதயம் பலப்படும்.

0 comments:

Post a Comment