widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 17, 2011

புறம் பேச வேண்டாம்!


ஜீண்மனி நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள் திருத்தோழர்களான ஸஹாபாக்களைப் பார்த்து இவ்வாறு வினவினார்கள்:-
புறம் பேசுவது என்றால் என்ன?” அதற்கு திருத்தோழர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தோழர்களும்தான் நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர், உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் வெறுக்கின்ற விடயம் ஒன்றை கூறுவதாகும் என எடுத்தியம்பினார்கள். நான் கூறுகின்ற விடயங்கள் உண்மையாக சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது; நீங்கள் கூறுகின்ற விடயங்கள் சகோதரரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர், நீர் கூறும் விடயங்கள் அவர்களிடம் இல்லையென்றால் சிச்சயமாக நீர் அவரைப் பற்றி அவதூறு இட்டுக்கட்டிவிட்டீர் எனத் திருவாய் மலர்ந்தருளினார்கள்.
நபிகள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இதைத்தான் அல்லாஹு ஸ¤ப்ஹானஹுவத-ஆலா அல்குர்ஆனிலே மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேசவும் வேண்டாம். உங்களில் ஒருவர், தன்னுடைய சகோதரரின் மாமிசத்தை (அவர் இறந்த நிலையில்) புசிக்க விரும்புவாரா? அப்போது அந்த நேரத்தில் நீங்கள் அதை வெறுத்து விடுவீர்கள், இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹுத்தஆலா தவ்பாச் செய்து மீள்வோரின் பாவ மீட்சியை மிக அதிகமாக ஏற்பவனாகவும் மிகக் கிருபையுடையோனுமாக இருக்கிறான். மேலும் மற்றவர்களைப் பற்றி அநியாயமாக புறம் பேசுபவர்களின் சொல்லை (வார்த்தைகளை) கடலில் போட்டால் கூட இந்த புறம் பேசுவதின் சொல்லின் கடுமையின் காரணமாக கடல் நீரே அசிங்கமாகிவிடும் என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மேலும் குர்துபீ என்ற கிரந்தத்தில் யாராவது ஏழைகள் மீது அநியாயமாக அவதூறு கூறி அவர்களைத் தாக்க வேண்டுமென்று இட்டுக்கட்டி ஒரு விடயத்தை சொல்கிறாரோ அவனை அல்லாஹ் கடுமையான முறையில் நாளை மறுமையில் தண்டிப்பான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள், இரண்டு கப்றுகளுக்கு அருகாமையில் நடந்து செல்லும் போது இவ்வாறு கூறினார்கள். இந்த இரண்டு கப்றுவாசிகளும் வேதனைசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் பெரிய பாவங்களின் காரணமாக வேதனை செய்யப்படவில்லை மாறாக அவர்களில் ஒருவர் சிறுநீர் கழித்த பிறகு பூரணமான முறையில் சுத்தம் செய்யாதவராக இருந்தார். மற்றவர் கோல் சொல்லித் திரியக்கூடியவராக இருந்தார் பின்னர் நபி (ஸல்) அவர்கள் ஈச்ச மட்டையை எடுத்து இரண்டாகப் பிழந்து இரண்டு கப்றுகளுக்கு மேலால் நாட்டினார்கள். அதன் பிறகு நபித் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள், அந்த இரண்டு ஈச்சமட்டைகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவ்விருவர்களைத் தொட்டும் வேதனை லேசாக்கப்படுவதற்கு போதுமானதாயிருக்கும் எனத் திருவாய் மலர்ந்தருளினார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் (விண்ணுலக யாத்திரை) பயனத்தின் போது ஒரு கூட்டத்துக்கு அருகாமையில் கடந்து செல்லும் போது அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் பெரிய நகங்கள் இருந்தன.
அவற்றின் மூலமாக அவர்கள் தங்கள் முகங்களையும், நெஞ்சங்களையும் அவர்களாகவே பிய்த்துக்கொண்டிருந்தார்கள்.
இதைப்பார்த்து “ஜிப்ரீல்! (அலைஹிஸ்லாம்) இவர்களிடம் யார் என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் சொன்னார்கள் உலகத்திலே இவர்கள் மனிதர்களின் இறைச்சியை சாப்பிட்டவர்கள் (புறம் பேசித் திரிந்தவர்கள்) மனிதர்களின் உள்ளங்களை நோவித்து அவர்களை கேலி செய்து கொண்டிருந்தார்கள் என்ற விடை பகர்ந்தார்கள்.
யா அல்லாஹ் இவ்வுலகத்தில் நல்லோர்களாக வாழ்ந்து நல்லோர்களாக மரணித்து நாளை மறுமையில் நல்லோர்களுடன் எம்மனைவர்களையும் எழுப்புவாயாக அமீன் யாரப்பல் ஆலமீன்.

0 comments:

Post a Comment