"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Tuesday, June 7, 2011
செக்ஸ் புகாரில் சிக்கி ஆஸியிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கைப் பூசாரி!
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் பூசகர் பெண்ணொருவரை தவறான முறையில் அணுக முயற்சித்த செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட பூசகரான பிரேம்காந்தன் ராஜரட்ணசர்மா, Carrum Downs என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் பணிபுரியும் போது, 2004, ஜூலை 12ம் திகதி 23 வயதுடைய பெண்ணொருவரை தவறான முறையில் அணுக முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த புதன்கிழமை பிராங்ஸ்டன் மஜிஸ்திரேட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த பூசகரிடம் பெண்ணொருவர் ஆசிர்வாதம் பெற சென்ற போது, பூசகர் பெண்ணை தனது பிரிவுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
எனவே குறித்த பெண் அவருடன் சென்று இராசிபலன்களை பார்த்துவிட்டு ஆசிர்வாதம் பெற முயன்றபோது பூசகர் பெண்ணை தவறான விதத்தில் நடத்த முயற்சி செய்துள்ளார் என்று பொலிஸ் அத்தியட்சகர் புரோன்வின் மார்டின் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவர் மீது மற்றுமொரு பெண் ஏப்ரல் 2009ம் ஆண்டு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அப்பெண்ணுக்கும் முன்பு நடந்த சம்பவம் போன்றே நடந்ததாகவும் ஆனால் குறித்த பெண்ணை அவர் முத்தமிட முயற்சித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூசகரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு முதல் குற்றத்துக்காக 18 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாண்டு கடந்து மற்றுமொரு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment