"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, June 23, 2011
இலங்கையில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களின் நிகழ்ச்சி!
இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) இன்று வியாழக்கிழமை இலங்கை வந்தடைந்துள்ளார். கடந்த வருடம் இஸ்லாதை ஏற்றிருந்த இவர் தற்போது இஸ்லாமிய பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
‘மஸ்ஜித் தௌஹீத் சிறிலங்கா’ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை வந்துள்ள போராசியர் அப்துல்லாஹ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் மார்க்கச் சொற்பொழிவுகளை நடத்தவுள்ளார்.
பெரியார்தாசன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மா என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். இவர் 12-3-2010 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.
தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
“நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது” என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment