"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, June 10, 2011
மார்க்கக் உலகியற் கல்வியும்
இஸ்லாம் தீன், துன்யா- லெளகீகம் ஆன்மீகம் என மனித வாழ்வைப் பாகுபடுத்தி நோக்கும் ஒரு மார்க்கமல்ல. மனித வாழ்வின் எத்துறையையும் அது இவ்வாறு கூறுபடுத்தி, வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. கல்வித்துறையைப் பொறுத்த வரையிலும் இஸ்லாம் லெளகீகக் கல்வி, ஆன்மீகக் கல்வி, என்று வித்தியாசப்படுத்தி, ஒன்றை வலியுறுத்தி மற்றதைப் புறக்கணிப்பதில்லை. மனித சமூகத்திற்குத் தேவையான பயனுள்ள ஆக்கபூர்வமான அனைத்து அறிவு ஞானங்களும் ‘அல்- இல்முல் நாபிஃ’ எனும் பயனுள்ள அறிவின் பாற்பட்டதாகும்.
நேரடியாகச் சன்மார்க்கத்துடன் தொடர்பான அறிவைப் பெறுவது கடமையாக இருப்பது போலவே, ஏனைய பொதுவான கலைகளைக் கற்பதும் கடமையானது என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். நவீன அறிவியற் துறைகளான மருத்துவம், பொறியியல், இரசாயனவியல் பெளதிகவியல், தொழில்நுட்பக் கல்வி உட்பட அனைத்தையும் முஸ்லிம் இளைஞர்கள் கற்பதில் ஈடுபடுவது உயர்ந்த இபாதத்தும் மேலான ஜிஹாதுமாகும் என்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.
நவீன உலகின் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான மிகப் பெரும் வளமாக அறிவுப்பலம் காணப்படுகின்றது. ‘அவர்களை எதிர்ப்பதற்காகப் பலத்தை முடியுமான அளவு தயார்படுத்துங்கள்....’ (8:60) எனும் அல்குர்ஆன் வசனத்தை முஸ்லிம்கள் மனதிற்கொள்ளல் வேண்டும்.
எங்களிடம் போதிய அதி நவீன ஆயுதங்கள் இல்லாத நிலையில் எமது பூமிகளை எவ்வாறு விடுவிக்க முடியும்? துரதிர்ஷ்டவசமாக இன்றும் கூட எமது அனைத்துத் தேவைகளுக்காகவும் பிறரை நம்பி வாழும் நிலையிலேயே நாம் இருக்கின்றோம். ‘இரும்பு எனும் அல்குர்ஆன் ஸ¥ராவைப் பெற்ற சமூகம், இன்றும் இரும்புத் தொழிலைக் கற்றுக்கொள்ள வில்லை’ என்கிறார் அறிஞர் யூஸ¤ப் அல்- கர்ளாவி.
ஒரு சந்தர்ப்பத்தில் அறிஞர் கர்ளாவியிடம் ஒரு முஸ்லிம் வாலிபர் ‘தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்ப்பதற்கு ஷரீ அத்தில் அனுமதியுண்டா?’ என வினவியபோது, ‘தொலைக் காட்சிப் பெட்டி என்பது ஒரு கருவி; அதனை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பன்படுத்தலாம். அதனைப் பயன்படுத்துபவரைப் பொறுத்தே அதற்குரிய தீர்ப்பு அமையும். தொலைக்காட்சிப் பெட்டியைப் பழுது பார்க்கும் பிரச்சினையைப் பொறுத்தவரையில், நாம் இன்று அத்தகைய பழுதுபார்க்கும் முஸ்லிம் இளைஞர்களை மாத்திரமன்றி, அவற்றை உற்பத்தி செய்பவர்களையும் வேண்டி நிற்கின்றோம்’ என்று அவர் கூறிய விளக்கம் சிந்தனைக்குரியதாகும்.
உண்மையில், நவீன அறிவியற் கலைகளைக் கற்பது ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் ‘பர்ளுகிபாயா’ வாகும். மருத்துவர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்துத் துறை சார்ந்த அறிஞர்களையும் முஸ்லிம் உம்மத் போதுமான அளவு உருவார்க்காத வரை அது பாவத்தில் இருந்து தப்பிக்கொள்ள முடியாது.
பொதுவாக அறிவின் முக்கியத்தைக் குறித்து வந்துள்ள அல்-குர்ஆன், அஸ்ஸ¤ன்னா வசனங்கள் வெறும் மார்க்க அறிவை மாத்திரமன்றி, அனைத்துவகையான பயனுள்ள அறிவு ஞானங்களையும் குறிக்கும் என்பதே உண்மையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment