widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, June 11, 2011

லஞ்சம் வாங்கும் நெத்தலிகளை அல்ல சுறாக்களை தண்டிக்க வேண்டும்


லஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு மீண்டும் நியமிக்கப்பட்ட பின்னர், இப்போது நிலுவையிலிருந்த பல முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இப்போதைக்கு 40 முறைப்பாடுகள் பற்றிய விசாரணைக்கு ஆணைக்குழு முன்னு ரிமை அளித்துள்ளது. இதில், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மீதான முறைப்பாடுகள் பல இருப்பதாக லஞ்ச ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்த விசாரணையை மேற்கொள்ளும் போது, லஞ்ச ஊழல் மோசடி ஆணைக் குழுவின் அதிகாரிகள், சட்டவிரோதமாக சேர்த்துள்ள கறுப்பு பணத்தை கணக்குக் காட்ட முடியாமல், பதுக்கி வைத்தி ருப்பது பற்றிய விசாரணைகளையும் மேற்கொள்வார்கள். இம்மா தம் 30ம் திகதிக்கு முன் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், பாரா ளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், நீதித்துறை உத்தியோ கஸ்தர்கள் போன்ற பலதரப்பட்ட உயர் மட்டத்திலுள்ளவர்கள் தங் களுக்கு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் அசைக்கும், அசைக்க முடியாத சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்து விபரங்களை தெரிவிக்கும் போது, எவராவது போலி யான ஆவணங்களை தயாரித்து, தவறான விபரங்களை வெளியி டுவது தெரிய வந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் குற்றமிழைத்து விட்டார்கள் என்பது ஊர்ஜிதம் செய்யப்படும் பட்சத்தில் நீதிமன் றத்தின் மூலம், அவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண் டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் ஏககாலத்தில் பெற் றுக் கொடுக்கக்கூடிய சட்ட அதிகாரமும், இவ்வாணைக்குழுவிற்கு இருக்கின்றது.
லஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு பொதுவாக சாதாரண நிலையி லுள்ளவர்கள் மீதான லஞ்ச ஊழல் அல்லது மோசடி பற்றிய விசா ரணைகளை நடத்தி, அவர்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் கடுமை யான தண்டனைகளை கொடுக்கின்றது என்ற அபிப்பிராயம் மக் கள் மத்தியில் நிலைகொண்டிருப்பதையும் நாம் இங்கு ஞாபகப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
சுமார், 40 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி யில் காவலாளியாக இருந்த வறுமை நிலையில் வாழ்ந்து கொண் டிருந்த ஒருவர், இரண்டு ரூபா 50 சதத்தை கைலஞ்சமாக வாங்கி நோயாளி ஒருவரை பார்க்க வந்த ஒருவரை ஆஸ்பத்திரிக்குள் செல்வதற்கு அனுமதித்த போது, லஞ்ச ஒழிப்பு உத்தியோகஸ்தர்க ளினால் அந்த காவலாளி கைது செய்யப்பட்டார். அதையடுத்து, ஓரிரு வருடங்களுக்குபின் அவருக்கு எதிரான வழக்கு விசா ரணை முடிந்த பின்னர், அந்த காவலாளிக்கு ஓராண்டு கால சிறை த்தண்டனை விதிக்கப்பட்டது. தான் செய்த ஒரு சிறிய குற்றத்திற் காக அந்த மனிதர் தனது தொழிலையும் இழந்து, தன் பிள்ளைக ளையும், குடும்பத்தையும் பராமரிக்க முடியாத நிலையில் மன முடைந்து தற்கொலை செய்த சம்பவம் ஒன்றும் நடந்திருக்கிறது.
இந்த நிகழ்வு லஞ்ச ஊழல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் உத் தியோகஸ்தர்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு மனிதாபிமான செயற்பாடாக இருப்பது அவசியமாகும். இதைத் தான் பெரிய சுறாமீன்கள் சுதந்திரமாக ஆழ்கடலில் இருக்கும் போது, சிறிய நெத்தலி மீன்களை மாத்திரம் பிடிக்கிறார்கள் என்று கிண்டல் செய்யுமளவுக்கு வாழ்க்கையில் அடிமட்டத்திலுள்ளவர் கள் மீது லஞ்ச விசாரணைகளை நடத்தும்போது, மக்கள் ஆத்திர மடைவதை நாம் அவதானித்திருக்கிறோம்.
அத்தாட்சிப் பத்திரங்களை கொண்டுவந்தால் மட்டுமே அரச திணைக் களங்களில் ஏதாவது ஒரு சிறிய செயற்பாட்டிற்கு அனுமதி அளிப் பது போன்ற பொருத்தமற்ற விதிகளை அமுலில் வைத்திருப்பதும் இந்த கைலஞ்ச ஊழல்கள் நாட்டில் அதிகரிப்பதற்கு ஒரு காரண மாகும். தொலைந்து போன தேசிய அடையாள அட்டையை அல் லது கடவுச்சீட்டு ஒன்றை மீளப் பெறுவதற்கு ஒரு ஆவணத்தில் கிராம சேவக உத்தியோகஸ்தர் அல்லது அரச திணைக்களத்தின் நடுத்தர மட்டத்திலுள்ள ஒரு உத்தியோகஸ்தர் அங்கீகார ஒப்பம் இடவேண்டும் என்ற அனாவசியமான நடைமுறை ஒன்று கடைப் பிடிக்கப்படும் போது, இத்தகைய கைலஞ்ச குற்றச்சாட்டுக்களில் சம் பந்தப்பட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஈடுபடுவதற்கு நாம் அவர்களுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுத்து, அவர்களுக்கு கேடு விளைவிப்பதும் உண்டு.
எனவே, அரசாங்க நிர்வாக சேவையில் உள்ள சில அனாவசியமான நடைமுறைகளை உயர் அதிகாரிகள் தவிர்த்துக் கொண்டால் இத்த கைய கைலஞ்ச ஊழல்களில் அரச அதிகாரிகள் ஈடுபடுவதை பெருமளவில் தவிர்த்துக் கொள்ளலாம். அதேவேளை, லஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு கூடியவரையில் உயரதிகாரிகள் லட் சக் கணக்கான பணத்தை லஞ்ச மற்றும் ஊழல்கள் மூலம் சேர் த்துக் கொள்ளும் பாரிய குற்றங்களுக்கு எதிராக கடுமையான விசா ரணைகளை மேற்கொண்டு அவர்களை சட்டப்படி தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

0 comments:

Post a Comment