"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, June 3, 2011
முஸ்லிம்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கியே அரசியல் தீர்வு!
முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படவில்லை என்றும் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் போது அவர்களின் அபிலாசைகளும் பிரதிபலிக்கப்பட்டே அரசியல் தீர்வு தயாரிக்கப்படும் என்றும் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
கல்முனைக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்முனை வை. எம். சீ. ஏ. மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் பா. அரியநேத்திரன் பொன். செல்வராசா உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள போதிலும் தமிழ் மக்கள் இவற்றை அதிர்ச்சி கலந்த ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் தங்களை இணைத்து கொள்ளாமை குறித்து முஸ்லிம் மக்களிடம் இருந்து சில கருத்துக்கள் வந்துள்ளன. உண்மையில் அது நியாயமான கோரிக்கை.
முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படவில்லை. இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் போது அவர்களின் அபிலாசைகளும் பிரதிபலிக்கப்பட்டே அரசியல் தீர்வு தயாரிக்கப்படும்.
அரசாங்கத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தீர்க்கமான தீர்வுகள் கிடைக்கும் போது முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொண்டதாகவே இருக்கும். முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டதாகவே அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது ஏக பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தெரிவு செய்தார்களோ அதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம் மக்கள் தெரிவு செய்துள்ளனர். இதன் காரணமாக நாங்கள் முஸ்லிம் காங்கிரஸூடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளையும் லந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றோம். அரசிடம் இருந்து தீர்வைப் பெறும் போது அதில் முஸ்லிம்களும் பங்காளியாக இருப்பார்கள். (எஸ்.டி.எம்.ஐ.09.30)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment