"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, June 2, 2011
ரகசிய ஞானம் எனும் மூடநம்பிக்கை!
ரகசிய ஞானம் எனும் மூடநம்பிக்கை!
சில ரகசிய ஞானத்தை, சிலருக்கு மட்டும் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்தாக ஹதீஸ் உள்ளதாக முரீது
கொடுப்போர் கூறுகின்றனர். ரகசிய ஞானம் என்று கூறிப்பாமர மக்களை
ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. அதனால் இது பற்றிக் கொஞ்சம் விரிவாகவே
பார்ப்போம்.
''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து.
இரண்டு (கல்விப்)பைகளை அறிந்தேன். அதில் ஒன்றை (மக்கள் மத்தியில்)
வெளிப்படுத்திவிட்டேன். இன்னொன்றை மக்கள் மத்தியில் நான்
வெளிப்படுத்திவிட்டால் எனது குரல் வலை வெட்டப்பட்டுவிடும்'' என்று
அபூஹுறைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் (நூல்: புகாரி).
அவர்களிடமிருந்து கற்ற மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு
விஷயத்தையும் மறைக்காது பிறருக்கு எடுத்துச் சொல்லும்படி கட்டளை
இடப்பட்டிருக்கும்போது, அதற்கு மாற்றமாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் மார்க்கத்தின் ஒரு பகுதியை மக்களிடம் சொல்லாமல் எப்படி
மறைத்திருப்பார்கள்?
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment