"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, June 3, 2011
தித்திக்கும் தேன் மொழிகள் (3)
திருக்குர்ஆன் ஓதுவதின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதை ஓதுவதின்; அவசியத்தைப் பற்றியும், இம்மையிலும் மறுமையிலும் அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றியும் ஏராளமான ஹதீஸகள் உள்ளன. அவைகளையெல்லாம் ஆர்வத்தோடு தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக அதை தினசரி ஓதுவதற்கு நம்மை பழக்கப் படுத்திக் கொள்வதோடு மட்டுமின்றி, நம் குடும்பத்தார்கள், உறவினர்கள், ஊரார்கள் அனைவரையும் பழக்கப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான்.குர்ஆனை கருத்துணர்ந்து, நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் நாம் திருந்த முடியும்.
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அபூதர்ரே! நீர் காலை நேரத்தில் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் ஆயத்தை கற்றுக் கொள்வது, நூறு ரக அத்துக்கள் தொழுவதைவிடஉமக்கு சிறந்ததாகும். மேலும், நீர் காலை நேரத்தில் சென்று மார்க்க அறிவிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்வது அவ்விஷயம் அந்த நேரத்தில் அமுல் படுத்தப்பட்டாலும், படாவிட்டாலும் அது ஆயிரம் ரக் அத்து தொழுகையை விட சிறந்ததாகும்.' என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (நூல்: இப்னு மாஜா)
எனவே திருக்குர் ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் ஆழமாக ஊன்றிப்படியுங்கள், சிந்தியுங்கள்.
அல்லாஹ்வின் அருள்மொழிகள்
o உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் 3:66)
o வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. (அல்குர்ஆன் 3:69)
o வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்? (அல்குர்ஆன் 3:70)
வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)
o அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன் 3:83)
o எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள். (அல்குர்ஆன் 3:90)
o நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 3:92)
o அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து, நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் 3:106)
o எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள்அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் 3:107)
o (நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்;. மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.(அல்குர்ஆன் 3:108)
o மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்;(ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும்அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 3:110)
Source : nidur.info
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment