"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, June 2, 2011
வெள்ளரிக்காய் ஏற்படுத்திவரும் பக்டீரியா தொற்று: உலகநாடுகள் அதிர்ச்சி _
வெள்ளரிக்காய் மூலம் பரவிவரும் வரும் இ-கோலி பக்டீரியாவானது எப்போது
முடிவுக்கு வருமென தெரியாதெனவும் இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும்
ஜேர்மனியின் ரொபர்ட் கொச் நிலைய தலைவர் ரினார்ட் பேர்கர் தெரிவிக்கின்றார்.
இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஸ்பெயின் நாட்டு வெள்ளரிக்காய் உற்பத்தியாளர் மீது குற்றம்; சுமத்தியமைக்காக தனது வருத்ததையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலர் இப் பக்டீரியா தொற்றினால் உயிரிழந்துள்னர். இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதிக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது. இதேவேளை ஜேர்மனியின் ஹம்பேர்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கர்கள் இருவருக்கும் இ-கோலி தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவீடனிலும் இத்தொற்று பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
||
|
||
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment