"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, June 3, 2011
தினமும் காலை, மாலையில் தொடர்ந்திட...
தினமும் காலை, மாலையில் தொடர்ந்திட...
எவர் வுளூவுடன் இரவில் உறங்குகின்றாரோ அவருடைய மேனியுடன் இணைந்தவாறு ஒரு மலக்கு இரவைக் கழிக்கின்றார். அவர் தூக்கத்திலிருந்து விழித்தவுடன் யாஅல்லாஹ் உன்னுடைய இந்த அடியானை மன்னிப்பாயாக. ஏனென்றால் இவர் வுளூவுடன் உறங்கினார் என்று மலக்கு அவருக்காக துஆச் செய்கின்றார். மேலும் இரவில் வுளூவுடன் திக்ரு செய்தவாறு உறங்கி பிறகு இரவில் ஏதேனுமொரு நேரத்தில் இடையே கண் விழிக்கும்போது அவர் அல்லா ஹுதஆலாவிடம் இம்மை, மறுமையின் நன்மையானவற்றில் எதைக் கேட்டாலும் அவருக்கு நிச்சயமாக அதை அல்லா ஹுதஆலா வழங்கி விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அப்துல் லாஹ் இப்னு உமர் (ரலி), முஆதிப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இப்னுஹிப்பான், அபூதாவூத்)நிச்சயமாக இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹுதஆலா அடியானிடம் மிக நெருக்கமாகி விடுகிறான். உம்மால் முடிந்தால் அந்த நேரத்தில் அல்லாஹுத ஆலாவை திக்ரு செய்து கொள்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும் ஒருவர் தான் வழக்கமாக ஓதிவரும் அவ்ராதுகளை அல்லது அதில் சில பகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் இரவில் தூங்கிவிட்டால் பிறகு மறுநாள் பஜ்ர், லுஹர் தொழுகைகளுக்கு இடையே அதைப் பூர்த்தி செய்துவிட்டால் அந்த அமல் இரவில் செய்த அமலாகவே அவரது அமல்களின் ஏட்டில் எழுதப்படும்.
(முஸ்லிம்)
எவர் காலையில் ‘லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தகு லாஸரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி சைஇன் கதீர்’ என்று பத்து முறை சொல்கிறாரோ அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன, பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. பத்து தகுதிகள் உயர்த்தப்படுகின்றன. நான்கு அடிமைகளை உரிமைவிட்டதற்கு சமமான நன்மைகள் கிடைக்கின்றன. மாலை வரை ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு கிடைக்கின்றது. மேலும் எவர் மஃரிபுத் தொழுகைக்குப் பின் இதேபோன்று சொல்வாரோ அவருக்கும் சுப்ஹு வரை இந்த வெகுமதிகள் அனைத்தும் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும் எவர் காலை, மாலை ‘ஸ¤ப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என நூறு முறை கூறுகின்றாரோ கியாமத் நாளன்று அவரைவிடச் சிறந்த அமலின் நன்மையைக் கொண்டு வருபவர் அவரைப் போன்று அல்லது அவரை விட அதிகமாக அமல் செய்தவரைத் தவிர வேறு யாரும் வரமாட்டார் என்றும் மேலும் அவரது பாவங்கள் கடல் நுரையைவிட அதிகமாக இருந்தாலும் மன்னிக்கப்படும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ அய்யூப், அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம், அபூதாவூத்)
எவர் காலை, மாலையில் பத்து முறை என் மீது ஸலவாத் சொல்வாரோ அவருக்கு கியாமத் நாளன்று என்னுடைய பரிந்துரை வந்தடையும். மேலும் எவர் ‘அஊது பிகலிமாதி லில்லாஹித்தாமாதி மின்சர்ரிமா ஹலக’ என்று மாலை நேரத்தில் மூன்று முறை கூறுவாரோ அன்றைய இரவில் எந்த விஷப் பிராணிகளும் அவருக்குத் தீங்கு செய்யாது (திர்மிதி)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment