widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 3, 2011

போதைப் பொருள் பாவனையை இஸ்லாம் முற்றாக தடுக்கிறது


ஹிஜ்ரி 1000 (கி.பியின் 1590) ஆம் ஆண்டு காலப்பகுதியில் போதைப்பொருட்கள் பாவனை எனும் தீய பழக்கம் யூதர்களினால் இஸ்லாமிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
போதைப் பொருள் பாவனை ஒரு மனிதனிடத்தில் பல வகையான தீங்குகளை எதிர்நோக்கச் செய்கிறது.
1. மார்க்கத்துக்கு முரணாகச் செயற்படல்
2. பொருளாதாரச் சிக்கல்களுக்கு உள்ளாக்கல்
3. உடலில் பாரிய நோய்களை உண்டாக்கல்.
4. தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தல்.
இக்கொடிய போதைப் பொருட்கள் பாவனை பற்றியும் அதனால் ஏற்படும் பாரிய பாதிப்புக்கள் பற்றியும் அல்குர்ஆன், ஹதீஸ், மற்றும் முக்கிய கிரந்தங்களிலிருந்தும் குறிப்பிடப்பட்ட முக்கிய அறிவிப்புக்கள் வருமாறு.
வீ நீங்கள் உங்கள் கைகளால் உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:15)
வீ உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுள்ளவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:29)
வீ போதை தரக்கூடியவைகளையும் இன்னும் சோர்வை ஏற்படுத்தக் கூடியவைகளையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)
வீ உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்பமாட்டான். அல்குர்ஆன் 7:31
வீ விசுவாசங்கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் வணக்கத்துக்காக நடப்பட்ட சிலைகளும், அம்பு எறிந்து குறிப்பார்த்தலும் (இவையாவும்) ஷைத்தானுடைய செயலிலுள்ள அருவருக்கத்தக்கவைகளாகும். ஆகவே இவைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றி வெறுவீர்கள்.
- அல்குர்ஆன் 5:90
வீ அல்லாஹுத்தஆலா மதுபானத்தையும் அதனைக் குடிப்பவனையும், குடிக்கச் செய்பவனையும் விற்பனை செய்பவனையும், வாங்குபவனையும் அதனைச் சுமப்பவனையும், சுமக்க வைப்பவனையும் சபித்துள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூதாவூத்
வீ நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 10:44)
வீ நபி (ஸல்) கூறியுள்ளார்கள் மனிதனின் சுய புத்தியை மாற்றக்கூடிய அனைத்து மதுபானங்கள் போதைப் பொருட்கள் அருந்துவதை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. - புகாரி முஸ்லிம்
வீ இஸ்லாமிய சட்டவல்லுனர் இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்கள் கூறினார்கள் வீண் செலவு என்பது நன்மையான விடயத்துக்கு செலவு செய்வது அல்ல மாறாக இஸ்லாம் அனுமதிக்கப்படாத விடயத்துக்கு செலவு செய்வதாகும். - தப்kர் குத்தூஸ்
வீ முகம்மது நபி (ஸல்) கூறினார்கள் நிச்சயமாக மனிதன் துன்பத்தினை அடையும்போது அவனை மலக்குகளும் சபிக்கிறார்கள். - புகாரி முஸ்லிம்
வீ நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? - அல்-குர்ஆன்
வீ மறுமையில் நகரவாசியின் வாயிலிருந்து புகை வெளியாகும். - அல் ஹதீஸ்

0 comments:

Post a Comment