"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, June 3, 2011
உழைப்பின் மூலம் பெறப்படும் பொருளை ஸதகாவினால் பரிசுத்தமாக்கிக் கொள்வோம்
மேலும் தீர்ப்பு நாளில் அவர்கள் எவ்வித பயமும் இன்றி சந்தோசமாக இருப்பார்கள்
(அல்பகரா - 262)
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் சில மனிதர்கள் சுவர்க்கம் செல்ல மாட்டார்கள். எந்த மனிதன் தான் கொடுத்த தர்மத்தை பிறரிடம் எடுத்துக் கூறுபவன் என சொல்லிக் காட்டியுள்ளார்கள்.
ஒரு மனிதன் தர்மம் அல்லது அல்லாஹ்வின் பாதையில் செலவிடும் போது மன மகிழ்வுடன் செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையிலேயே இறைவனின் முழுமையான கூலியை மறுமை நாளில் அனுபவிக்க முடியும்.
மேலும் இவ்வுலகத்தில் மற்றவர்கள் என்னை போற்ற வேண்டும். பெரிய கொடையாள் என்று புகழ்ச்சிக்காக மேற் கொள்ளும் போது மறுமை நாளில் அவன் செய்த காரியம் முகத்தில் தூக்கி எறியப்படும்.
எவன் ஒருவன் உபகாரம் செய்கின்றானோ, அவன் மீதுள்ள பொறுப்பு நீங்கவும், தனது பொருளை பரிசுத்தமாக்கிக் கொள்வதற்கும் சிறந்த சந்தர்ப்பமாக அமைகிறது.
அத்துடன் ஸகாத்தை நிறுத்தி வைப்பதால் ஏற்படும் குற்றத்திற்கு பரிகாரம் தேடுவதாகவும் நரக வேதனையில் இருந்து விமோசனம் பெறுவதற்காகவும் அல்லாஹ்வின் பாதையில் ஏழை எளியவர்களுக்கு உபகாரம் செய்வதும் மாபெரும் நற்கூலியை பெற்றுக் கொடுக்கிறது.
ஒரு பக்கீருக்கு தன் ஸதகாப் பொருள் எந்தளவு தேவையானது என ஒருவன் கருதுகிறானோ அதை விட நன்மை அதிகம் என நினைக்கவில்லையோ அவன் தனது ஸதகாவின் நன்மையை இழந்து விட்டார் என இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
எனவே இறுதி நாள் தீர்ப்பு மிகவும் கடினமான துக்கமும், மனவேதனையும், அச்சமும் சூழ்ந்துள்ள நாளாகும். அந்நாளில் அச்சமின்றி, கவலையின்றி இருப்பதற்கு இறைவனின் பாதையில் உபகாரம் செய்வதற்கு முயற்சி செய்வோமாக.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment