"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, June 30, 2011
மட்டக்களப்பில் அரச வங்கி ஆயுதமுனையில் கொள்ளை
- அபூ ஜுமைல் -
மட்டக்களப்பு மாநகர புறநகர்ப்பிரதேசமான புதூர் மக்கள் வங்கி கிளை இனந்தெரியாத ஆயுத தாரிகளினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்ஜித் வனராஜா தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் மக்கள் வங்கி என்ற பெயர்ப்பலகையை மாட்டிய வேனொன்றில் வந்த 5 பேரடங்கிய துப்பாக்கி நபர்கள் வங்கியில் ஆயுதத்துடனிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை வங்கி அறையொன்றினுள் பூட்டிவிட்டு அங்கிருந்த இலட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகளின் விபரங்கள் வங்கி அதிகாரிகளினால் சேகரிக்கப்பட்டுவருகின்றன.
1985ம் ஆண்டு காத்தான்குடியில் வங்கியொன்று விடுதலைப் புலிகளால் ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டதை ஒத்த பாரிய வங்கிக் கொள்ளை ஒன்றாக இச்சம்பவம் நோக்கப்படுகின்றது.
Source: Kattankudi.info
Wednesday, June 29, 2011
மீண்டும் கண்நோய் அபாயம்!
சுகாதார அமைச்சு எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் கண்நோய் பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைரஸ் காரணமாக கண் நோய் பரவுவதாகவும் நாளாந்தம் 100க்கும் மேற்பட்ட கண்நோயாளர்கள் சிகிச்சைக்காக கண் வைத்தியசாலைக்கு வருகை தருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் எஸ். ஏ. எச். லியனகே தெரிவித்தார்.
கண் சிவப்பாதல் கண்ணீர் கொட்டுதல் கண் வீக்கம் வெளிச்சத்தை பார் க்க முடியாமை என்பஇவ இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.
கண் நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு கைக்குட்டை டவல் உடைகள் என்பவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறும் கைகளை சவர்க்காரத்தினால் கழுவ வேண்டும் எனவும் வலியுறுத்திய லியனகே கண் நோயாளர்கள் பொது மக்கள் நடமாடும் இடங்களைவிட்டு ஒதுங்கி இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
பளு தூக்கும் போட்டியில் ஹிஜாப் அணிந்து புரட்சி செய்யும் முஸ்லிம் கண்மனி!
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
‘
முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே தூய முகத்திற்கு எழில் தரும் முஸ்லிம் பெண்ணே’ என்று இசை முரசு நாகூர் ஹனிஃபா பாடிய பாடல் இஸ்லாமிய பட்டி தொட்டிகளில்லாம் இன்னும் இனிமையாக ஒளித்துக் கொண்டுள்ளது என்று மகிழ்ந்து இருக்கும் நாம்; அந்தப் பாடல் நவ நாகரீக அமெரிக்காவிலும் புரட்சி செய்கிறது என்றால் சற்று ஆச்சரியமாகத் தானே இருக்குமல்லவா அனைத்து ஈமான்தார்களுக்கும்?
அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தினினைச் சார்ந்த 35 வயதான குல்சூன் அப்துல்லாஹ் (Kulsoom Abdullaah) பொறியியல் துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் பளு தூக்கும் போட்டி நேராக தூக்கும் (டெட்லிப்ட்) 111 கிலோ பிரிவிலும், மற்றும் தாங்கிப் பிடித்து தூக்கும்(ஸ்நேச்) 47.5 கிலோ பிரிவிலும் சாதனை செய்துள்ளார். ஆனால் அந்த சாதனையாளருக்கு வந்ததே சோதனை! அது என்ன என்று கேட்கிறீர்களா?
குமாரி குல்சூன் அப்துல்லாஹ் மற்ற பழுதூக்கும் பெண்மணிகள் போன்று அரைக்கால் கால் கட்டை, மேல் ஆடை அணிந்து வராது முக்காடுடன் கூடிய ஹிஜாப் அணிந்து பந்தயத்தில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். பொறுப்பாளர்களோ மேலை நாட்டு பொய்யான நாகரீக வாதிகள்.
அமெரிக்காவின் பளு தூக்கும் சங்கத்தினர் உலக பழுதூக்கும் சட்டத்தினை மேற்கோள் காட்டி பழுதூக்குபவர்கள் கைகளையும், கால் முட்டிகளையும் முடக்குவதினை வெளிப்படையாக காட்ட வேண்டுமென்றும், ஆனால் ஹிஜாப் அணிந்திருந்தால் அவ்வாறு பார்க்க முடியாது. ஆகவே அவர் இனிமேல் ஹிஜாப் அணிந்திருந்தால் பழு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என அறிவித்திருக்கிறார்கள். ஏனென்றால் உலக டென்னிஸ் பந்தயங்களில் விளையாடும் வீனஸ் வில்லியம் சகோதரிகள் போல அனைத்து அங்கங்களும் ஆண்கள் தெரிய உடை அணிய வேண்டுமென்று விரும்புகின்றனர். என்னே கேவலம்.
ஒரு ஓட்ட வீரர் ஓடும் வேகத்தினையும், காற்றின் வேகத்தினையும் தூரத்திலிருந்தே கணிக்கக் கூடிய ஸகேனுடன் இணைந்த நவீன கருவிகள் இருக்கும் போது ஒரு பழு தூக்கும் வீரர் கால், கை முட்டிகள் தெரிந்தால் தான் அவர் கலந்து கொள்ள முடியுமென்பது நவீன உலக விஞ்;ஞானத்திற்கு சவாலாகவும், விளையாட்டு வீரர்களுக்கு கேலிக் கூத்தாகவும் தெரியவில்லையா? அதற்கு அந்த விளையாட்டு வீராங்கணை என்ன சொல்கிறார் தெரியுமா? ‘நான் அப்படிப்பட்ட சட்டத்தினை அறவே வெறுக்கின்றேன். இது போன்ற முனை மழுங்கிய சட்டங்களால் மற்ற விளையாட்டு வீரர்களும் உட்சாகமிழந்து போட்டிகளில் விளையாடுவதிற்கான ஆர்வம் குறைந்து விடுமே எனக் கவலையடைந்துள்ளார்.
செல்வி. குல்சூனுக்கு ஆதரவாக அமெரிக்க முஸ்லிம் நல்லுறவு கவுன்ஸிலின் செயல் இயக்குனர் நிகாட் அவாட் குரல் கொடுத்துள்ளார். அமெரிக்க ஒலிம்பிக் கவுன்ஸிலுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ‘அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் அமெரிக்க வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் பங்கு பெற்றுள்ளனர். அவர்களின் மத உணர்வுகளை செயற்கையான உடையினைக் கொண்டு வேறு படுத்த வேண்டாம்’ என கேட்டுள்ளார். அவருடைய கோரிக்கைக்கு பல் வேறு அமெரிக்கரிடையே ஆதரவு பெருகிக் கொண்டுள்ளது.
அதனையறிந்து மகிழ்வு அடைந்த செல்வி, ‘என்னுடைய மத உணர்வுகளை மதித்து எனக்கு ஆதரவு பெருகுவதினை அறிந்து சந்தோசத்தில் மிதக்கிறேன். அதுவும் தான் ஹிஜாப் அணிந்து பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வவதற்கு அனுமதியளிக்க உலக குத்துச் சண்டை கழகம் மலேசியாவில் விவாதிக்க உள்ளது என்பதே என் மதக் குறிக்கோளில் பாதிக் கிணறு தாண்டியது போல உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஈரான் நாட்டின் பெண்கள் கால் பந்தாட்டக் குழு முழுக் கால் சட்டையணிந்து கொண்டு விளையாடுவதினை அனுமதிக்க முடியாது என உலக பெண்கள் கால் பந்தாட்ட சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் உலக பளு தூக்கும் போட்டியில் செல்வி குல்சூனுக்கு அனுமதி கிடைத்து விட்டால் ஈரான் பெண்கள் கால் பந்தாட்ட குழுவினுக்கும் இன்னும் மற்ற விளையாட்டுப் போட்டிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கலந்து கொள்ள எந்த தங்கு தடையும் இருக்காது.
செல்வி. குல்சூனின் இறை நம்பிக்கைக்கு எந்தளவு உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது என்று ஒரு ஆராய்ச்சி மூலம் தெரிவிக்கலாம் என எண்ணுகிறேன். அமெரிக்காவின் பென்சில்வேனியா பலகலைக் கழக சமூக ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஸ்கெய்டில் ஓர் ஆய்வினை 1972ஆம் ஆண்டு முதல் 2006 வரை மேற்கொண்டார்.
அந்த ஆய்வினுக்கு 423 நபர்களை ஆராய்ந்தார். அதில் 96 பேர் மதமாற்றம் செய்து கொண்டனர். 54பேர் இறை வழிபாட்டிலிருந்து விலகி விட்டனர். ஆனால் மீதியுள்ளோர் தங்களை முழுமையான இறை வழிப்பட்டிலும், இறைறை சொன்னபடி நடந்ததால் சமூக நலம், உடல் நலம், மற்றும் நன்னடத்தையுடன் சிறந்து விளங்கினர். விளையாட்டுப் போட்டிகளில் போதை ஊக்க மருந்து சாப்பிட்டு அவமானப்பட்டு ஒலிம்பிக் மெடல்களைக் கூட பறி கொடுக்கும் இந்தக் காலத்தில் மத கோட்பாடுடன் ஹிஜாப் அணிந்து போட்டிகளில் பெண்கள் பங்கு பெறுவதின் மூலம் விளையாட்டுப் போட்டிகளில் ஒழுக்கங்களை கடைப் பிடித்து நல்ல உடல் நலத்தோடு வாழ வழி வகுக்க செல்வி குல்சூன் முயற்சி வெற்றி பெற அல்லாஹு ஸுப்ஹானவுத்தஆலா அருள் புரிய வேண்டிக்கொள்வோமா சகோதர சகோதரிகளே.
பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா?
[ அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள், பூரியான் ஃபாத்திஹாவுடன் சேர்ந்த 'விறகு வெட்டி கிஸ்ஸா'வை விடிய விடியப் படிப்பதும், கேட்பதும்கூட வணக்கம் என்று எண்ணி, அதைக் கேட்பதற்காக பக்தி பரவசத்துடன் இரவெல்லாம் கண்விழித்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?
இவையனைத்தும் தங்களைப் பணக்காரர்களாக ஆக்கிவிடும் என்ற எண்ணத்தில் செய்யும் இந்த மூடப்பழக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் சகோதர, சகோதரிகளே!
என்னருமை இஸ்லாமிய சொந்தங்களே! திருக்குர்ஆனும் ஏராளமான நபிமொழிகளும் தமிழ் மொழியில் எப்போதோ வந்துவிட்டன. தயவுசெய்து அதைப் படித்துப் பாருங்கள்.அவற்றைப் படித்து, நீங்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டால், பூரியானுக்காக ஃபாத்திஹா ஓத வருபவர்களுக்கு இனி பூசைதான் கொடுப்பீர்கள்.]
இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறும் மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களிடம் தெளிவாக்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தை உண்மையான இஸ்லாத்தின் வழியில் வாழவைக்க, ஏகத்துவக் கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சியில் இறைவன் உதவியால் மிகப்பெரிய மாற்றம் இஸ்லாமியர்களிடையே ஏற்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்! ஆயினும் எல்லா இஸ்லாமிய மக்களையும் அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளிலிருந்து இன்னும் முழுமையான அளவில் வென்றெடுக்கவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மைதான்.
இஸ்லாமிய மாதங்களில் இப்போது நடந்துக் கொண்டிருக்கும் மாதம் 'ரஜப்' மாதமாகும். இந்த மாதத்தில் சில இஸ்லாமியர்கள் மூட நம்பிக்கைகளை வணக்கமாக செய்துவருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் தங்களுக்கு செல்வம் கொழிக்கவேண்டும் என்பதற்காக மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வணக்கமான(?) 'பூரியான் ஃபாத்திஹா' என்று சொல்லப்படும் ஒன்றாகும்.
ஷியாக்களின் 12 இமாம்களில் ஒருவரான 'ஜாஃபர் சாதிக்' என்பவரின் பெயரை முன்னிறுத்தி, இந்த ரஜப் மாதம் 22 வது பிறையில் 'பூரியான் ஃபாத்திஹா'வை ஓதுவதற்காக வீட்டின் ஒரு அறையை பிரத்தியேகமாக கழுவி சுத்தம் செய்து, மேலே வெள்ளைத் துணியினால் பந்தல் அமைத்து, அதில் பூக்களைத் தொங்கவிட்டு அலங்கரித்தவுடன் அந்த அறைக்கே ஒரு புனிதம் வந்துவிட்டதாக எண்ணி, ஃபாத்திஹா ஓதி முடிக்கும்வரை யாரையும் உள்ளேகூட அனுமதிக்கமாட்டார்கள்! (ஓதுபவர்கள் மட்டும் உள்ளே செல்லலாம்). தயாரித்து வைத்துள்ள பூரியான்களில் 22 பூரியான்கள் மட்டும் ஓதுவதற்காக (படைப்பதற்காக) வைக்கப்படும்.
வணக்கம் என்ற பெயரில் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களும் காட்டித்தராத ஒன்றை சிந்தித்து சுயமாக உருவாக்கிக் கொண்டு, அதன்மூலம் நன்மையை அடைந்து விடலாம் என்ற தவறான எண்ணத்தில் இவ்வாறு ஏதேனும் ஒரு புதுமையை மக்கள் அவ்வப்போது நிறைவேற்றுகிறார்கள். அதிலும் 'சீரணி/நார்ஸா' என்ற பெயரில் அதற்கு வகை வகையான காம்பினேஷன் கொண்ட உணவு வகைகளும், பதார்த்தங்களும் வேறு! ஃபாத்திஹா முடிந்தவுடன் அவற்றை ஓதியவர்களுக்கும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கும் (பயபக்தியுடன்) 'ரவா கஞ்சி' என்ற பாயசத்துடன் பூரியான் பரிமாறப்படும்.
சில பகுதிகளில் இவற்றிற்கு பதிலாக 'கீர் பூரி'யும் 'கோடா கஞ்சி'யும் படைப்பதற்கு வைத்திருப்பார்கள். (ஒருவேளை 'இவற்றில் நன்மை' என்று சொல்வதில் 'நாவிற்கும் நன்மை' என்று அர்த்தமும் உள்ளதோ? இந்த ஃபாத்திஹாவில் பூரியான் மட்டும் இல்லாவிட்டால் அதை ஓதுவதற்கு ஆலிம்கள் யாரும் வருவார்களா பாருங்கள்? 'பூரியானைப் பாத்தியா?' என்று தனக்குள் முதலில் கேட்டுக்கொண்டுதான் வந்து ஓதுவார்கள்.)
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள், பூரியான் ஃபாத்திஹாவுடன் சேர்ந்த 'விறகு வெட்டி கிஸ்ஸா'வை விடிய விடியப் படிப்பதும், கேட்பதும்கூட வணக்கம் என்று எண்ணி, அதைக் கேட்பதற்காக பக்தி பரவசத்துடன் இரவெல்லாம் கண்விழித்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? இவையனைத்தும் தங்களைப் பணக்காரர்களாக ஆக்கிவிடும் என்ற எண்ணத்தில் செய்யும் இந்த மூடப்பழக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் சகோதர, சகோதரிகளே!
நீங்கள் உண்மை இஸ்லாத்தை சிந்திக்காமலும் உங்களை திருத்திக் கொள்ளாமலும் இருந்தால் அதனால் யாருக்கு நஷ்டம்... உங்களுக்குதானே? பூரியான் பாத்திஹா செய்வதால் உண்மையிலேயே ஒருவருக்கு செல்வம் வரும் என்றிருந்தால் ஏன் உங்கள் வீட்டு ஆண்களை வேலைக்கு அனுப்புகிறீர்கள்? பல ஆயிரங்கள் செலவு செய்து, உங்களைப் பிரிந்து ஏன் வெளிநாடுகளுக்கு அவர்கள் செல்லவேண்டும்? நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் பூரியான் தயாரித்து, பாத்திஹா ஓதி செல்வத்தை தலைவழிய கொட்டச் செய்யலாமே? ஆனால், பூரியான் பாத்திஹாவிற்காக கடன்பட்டும், கஷ்டப்பட்டும் அதை நிறைவேற்றுபவர்கள் எத்தனையோ பேர்!
காலமெல்லாம் ஓதிவிட்டோமே என்பதற்காகவும், இதை விட்டால் இன்னும் மோசமான நிலைக்கு ஆகிவிடுவோமோ என்று அஞ்சியும் கடன் வாங்கியாவது தொடர்ந்து ஓதிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. அதேபோல், இதை நடத்தாமலேயே பணக்காரர்களாக ஆனவர்களும் உண்டு. இல்லையென்று சொல்லமுடியுமா? ஆக, பணக்காரர்களாக ஆகவேண்டுமென்று இந்த பூரியான் பாத்திஹாவுக்காக பணத்தை செலவு செய்தவர்களும், அதை ஓதவென்று வீடு வீடாகச் சென்றவர்களும் அதனால் பணக்காரர்களாக ஆகவில்லை. அப்படியே அவர்களுக்கு எப்படியோ வசதி வாய்ப்பு ஏற்பட்டு செல்வந்தர்களாக ஆகியிருந்தாலும் அது பூரியான் ஃபாத்திஹாவின் புண்ணியத்தால்தான் என்று யாரேனும் நம்பிக்கை வைத்தால், அவர்களின் 'ஈமான்' என்ற இறைநம்பிக்கையே பாழாகி, இஸ்லாத்தை விட்டும் அவர்கள் வெளியேறிவர்களாக ஆகிறார்கள். ஏனெனில், செல்வத்தைத் தருபவனும் அல்லாஹ்தான், அதை தடுத்து வைத்திருப்பவனும் அல்லாஹ்தான். அல்லாஹ் மீது வைக்கவேண்டிய இந்த நம்பிக்கை தடம் மாறினால்..?(அல்லாஹ்தான் நம்மை காப்பாற்றணும்!) தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தை கொடுக்கிறான். தான் நாடியோருக்குக் குறைக்கிறான். இதுபற்றி அல்லாஹ்தஆலா, திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் 'தான் நாடியோருக்கு செல்வத்தை வழங்குவதாக' கூறுகிறான்.
"அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான்.எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை". (அல்குர்ஆன் 13:26)
"நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்தபோதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான். மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39)
ஆனால் இந்த 'பூரியான் ஃபாத்திஹா'வைப் பொருத்தவரை குறுகிய காலத்தில் செல்வந்தராவதற்காக மாற்று மதத்தவர்கள் செய்யும் 'லட்சுமி பூஜை'யைக் காப்பி அடித்ததாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மூட நம்பிக்கையையும், கண்மூடிப் பின்பற்றும் மடமையையும் ஒழிக்க வந்த பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துக்கொண்டு, 'முன்னோர்கள் சொன்ன வழிமுறை' என்று அதே இஸ்லாத்தின் பெயராலேயே நாம் அத்தகைய மூடச்செயல்களை செய்துக் கொண்டிருக்கலாமா? இது உங்களுக்கு கைசேதமில்லையா? இதுபோன்ற ஒரு வணக்கத்தை அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளானா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள்தான் இதுபோன்று நமக்குக் கற்றுத்தந்தார்களா? அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த வழிமுறை அல்லாமல் முன்னோர்கள் செய்தவைகள் என்றோ, காலம் காலமாக நடைமுறையில் வந்தவை என்றோ நாம் ஒன்றை செய்வோமேயானால் நாளை மறுமையில் அவற்றிற்கு எந்த பலனும் கிடைக்காது என்பது மட்டுமல்ல, மார்க்கத்தில் சொல்லாத புதுமையை ஏற்படுத்திய குற்றத்திற்காக தண்டனைதான் கிடைக்கும்.
இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ''வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்)அவர்களின் நடைமுறை; காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்); பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: புகாரி)
ஆகவே என்னருமை இஸ்லாமிய சொந்தங்களே! திருக்குர்ஆனும் ஏராளமான நபிமொழிகளும் தமிழ் மொழியில் எப்போதோ வந்துவிட்டன. தயவுசெய்து அதைப் படித்துப் பாருங்கள். அவற்றைப் படித்து, நீங்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டால், பூரியானுக்காக பாத்திஹா ஓத வருபவர்களுக்கு இனி பூசைதான் கொடுப்பீர்கள்.
வணக்கம் என்று சொல்லி இன்னும் இதுபோன்ற ஏராளமான மூட நம்பிக்கைகளாலும் வழிகேடுகளாலும் உங்கள் பணத்தை சாப்பிட்டு பொருளாதார சுரண்டல் பண்ணியவர்களை/உங்கள் மறுமை வாழ்வை பாழாக்க வருபவர்களை நீங்களே திருத்த முன்வாருங்கள்.
இத்தகைய வழிகேடுகள், தான் காணும் கட்டுக் கதைகளை எல்லாம் தங்கள் இஷ்டம்போலக் கூறி, மக்களை வழக்கம்போல் நம்பவைத்து ஏமாற்றி, ஓசியில் தங்கள் வயிறு வளர்க்க சிலர் உருவாக்கியவைதான் என்பதை புரிந்துக் கொண்டு, சிறிதும் தாமதிக்காமல் உங்களை நபிவழியின் பக்கம் மாற்றிக்கொண்டு நேரான வழியில் செல்லுங்கள். ஏனெனில் மரணம் என்பது எப்போது, எந்த நொடியில் நம்மை வந்தடையும் என்பது நம் யாருக்குமே தெரியாது. அதற்குமுன் நாம் திருந்திக் கொண்டாலே தவிர, வழிதவறி வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் மரணம் சம்பவித்தால் வல்ல இறைவனின் தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக! நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! நேர்வழியில் இருப்போரை அதைவிட்டும் தடம் புரண்டுவிடாமல் காப்பானாக
உள்ளாடையின் தூய்மையில் மனதை பரிகொடுத்து இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கிலேயப்பெண்
உள்ளாடையின் தூய்மையில் மனதை பரிகொடுத்து இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கிலேயப்பெண்
லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப்படிக்கும் கல்லூரி அது. அதில் முஸ்லிம் மாணவர் ஒருவரும் படிக்கிறார். அதில் பணி புரியும் ஒரு ஆங்கிலப் பெண், மாணவர்களின் உணவு பரிமாற்றம் மற்றும் அவர்களின் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதும் ஆகிய வேலையில் பணிபுரிகிறார்.
ஒரு தடவை இப்பெண், அந்த முஸ்லிம் வாலிபரிடம் ‘நான் துணி துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதில் உங்களக்கு திருப்தி இல்லையா?’என்று தனது பலநாள் சந்தேகத்தை மனம் திறந்து கேட்கிறார்.
‘ஏன் இல்லை? எனக்கு முழு திருப்தி உள்ளது. நீங்கள் மிக நன்றாகத்தானே துணியை சுத்தமாக துவைத்துத் தருகிறீர்கள்’ என்று பதிலளிக்கிறார் அந்த முஸ்லிம் மாணவர்.
‘அப்படியெனில் ஏன் உங்களது ஆடையை, ஒருதடவை நீங்களே சுத்தம் செய்து விட்டு இரண்டாவது தடவை மீண்டும் என்னிடம் துவைக்கத்தருகிறீர்கள்?’ என்று தனது சந்தேகத்தைக் கேட்கிறார் அந்த ஆங்கிலப் பணிப்பெண்.
‘இதென்ன வேடிக்கை! எனது ஆடையை நானே சுத்தம் செய்கிறேன் என்றால் எதற்காக உங்களிடம் அதை நான் தரவேண்டும்? உண்மையில் நான் உடுத்திய ஆடையை துவைக்காமல் அப்படியே தான் உங்களிடம் தருகிறேன்’ என்று எதார்த்த நிலையை அப்பெண்ணிடம் சொன்னார் மாணவர்.
இந்த பதில் அந்த ஆங்கிலப் பணிப்பெண்ணை வியப்பின் உச்சிக்கே இழுத்துச்சென்றது. ‘உண்மை நிலை நீங்கள் சொல்வது எனில் மற்ற மாணவர்களுடைய உள்ளாடையில் நான் காணும்; ஒருவித கறையும், துர்வாடையும் உங்களது ஆடையில் மட்டும் காண முடிவதில்லையே! ஏன்?’ என்று ஆச்சரியத்துடன் வினவினார்.
அந்த மாணவர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக சொன்னார், ‘சகோதரியே! நான் ஒரு முஸ்லிம். எனது மார்க்கம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று என்னை பணிக்கின்றது. எனது ஆடையில் ஒரு துளி சிறுநீர் பட்டுவிட்டாலும் கூட அதை உடனே கழுகி சுத்தம் செய்யாத நிலையில் என் இறைவனை நான் வணங்க முடியாது. எனது ஆடையில் துர்வாடையோ, அசுத்தமோ காணப்படாமல், உடுத்தி களைந்த ஆடைகூட துவைத்து சுத்தம் செய்யப்பட்ட ஆடைபோல் சுத்தமாக இருப்பதன் ரகசியம் இதுதான்!’ என்று விளக்கமளித்தார்.
இதைக்கேட்ட மாத்திரத்தில் அப்பெண், ‘இஸ்லாம் இவ்வளவு சிறிய விஷயத்தில் கூட கற்றுத்தருகிறதா?’ என்று ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினார்.
அப்பணிப்பெண்ணுக்கு அவ்வாலிபரின் பேச்சு பேராச்சிரியத்தை ஏற்படுத்தியதுடன் அவரது உள்ளுணர்வையும் தட்டி எழுப்பியது. இதன்பின் அந்த ஆங்கிலப்பெண், அந்த முஸ்லிம் மாணவரின் எல்லா நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தார். அவ்வாலிபரின் எளிமை, தூய்மை, பத்தினித்தனம், கலாச்சாரம், வீணான பேச்சுக்களைவிட்டும் ஒதுங்கியிருக்கும் பண்பு இவையணைத்தும் அப்பெண்ணின் உள்ளத்தில் இஸ்லாத்தின் ஒளி குடியேறக் காரணமாயிற்று.
படிப்படியாக அவ்வாலிபரிடம் இஸ்லாத்தைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். இதனால் அப்பெண்ணின் உள்ளத்தில் உண்மையான ஈமானிய ஒளிக்கதிர் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது.
இறுதியில் தனது குடும்ப அங்கத்தினர் பலருடன் இஸ்லாத்தின் அரவணைப்பில் வந்துவிட்டடார். (ஆதாரம்: ‘அத்தளாமுனில் இஸ்லாமி’ எனும் அரபி நாளேடு)
Tuesday, June 28, 2011
காத்தான்குடி சம்பவம் குறித்து விசாரணை
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த திங்கள் கிழமை 17 வயது பள்ளி மாணவியொருவரும் அதே வயதான மற்றுமொரு பெண்ணும் வீதியில் வைத்துகடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு செவ்வாய்க்கிழமையன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடை பெற்றது.
சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை குறிப்பிட்ட இருவரும் அடையாளம் காட்டினர்.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக் கிழமை கைதான பெண் நீதிமன்ற உத்தரவின் பேரில் செவ்வாய்க் கிழமைவரை விளக்கமறியலில் அடையாள அணிவகுப்பிற்காக வைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் பலவந்தமாக ஆட்டோவில் கடத்தி வீடொன்றில் தடுத்து வைத்து கைகளாலும் துடைப்பான் தடிகளினாலும் தாக்கி காயம் விளைவித்ததாகவும், அவமானப் படுத்தியதாகவும் குற்றவியல் கோவைச் சட்டத்தின் கீழ சந்தேக நபருக்கு எதிராக குறிப்பிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி நகர் முஸ்லிம்களை மட்டும் வாழும் பிரதேசம். இங்கு சமீப காலமாக மத அடிப்படைவாதம் தலை தூக்கி வருகிறது என்பது போன்ற கவலைகள் சில மட்டத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
குறித்த மாணவியும் மற்றப் பெணணும் மட்டக்களப்பு நகருக்கு சென்று காத்தான்குடிககு திரும்பிய வேளை வீதியில் வைத்து ஆட்டோ ஒன்றில் சிலரால் கடத்தப்பட்டுள்ளனர்.
வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பின்னரே இம்மாணவிகள் பள்ளிவாசல்கள் சம்மேளனத்திடம் அந் நபர்களினால் ஒப்படைக்கப்பட்டதாக ஒரு மாணவியின் தந்தையான முகமது யுசுப் அப்துல் ரசாக் பிபிசியிடம் தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பிறகு தனது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் பிறகு காப்பகம் ஒன்றில் அவர் இருந்ததாகவும் குறிப்பிட்ட அவர் செவ்வாய்க்கிழமைதான் தன் மகள் வீடு திரும்பியதாகவும் குறிப்பிட்டார்.
தனது மகளும் மற்றொறு பெண்ணும் தவறு செய்ததாக பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததன் காரணமாகத்தான் அன்று அங்கே பெரும் கூட்டம் கூடியது என்றும் தன் மகள் எவ்வித தவறும் செய்யவில்லை - ஆபாசப் படங்களைப் பார்க்கவில்லை என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் ரசாக் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தப் பெண்கள் மீது எவ்விதத் தவறும் இல்லை என்று ஒலி பெருக்கிகள் மூலம் பொது அறிவிப்பு செய்ய வேண்டும் என்று ரசாக் கோருகிறார்.
ஆனால் இந்தப் பெண்கள் ஆபாசப் படங்கள் பார்த்ததாக எவ்வித அறிவிப்பும் செய்யப் படவில்லை என்று காத்தான் குடி பள்ளிவாசல் சம்மேளனம் கூறுகிறது. பெண்கள் பள்ளிவாசல் அலுவலகத்தில் தாக்கப்படவில்லை என்றும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.
சம்மேளனத்தில் தலைவரான முகமது இப்ராஹிம் முகமது சுபேர் இஸ்லாமிய இளைஞர்கள் சட்டத்தை தமது கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தப் பெண்கள் பள்ளிவாசல் சம்மேளன அலுவலகத்தில் வைத்துத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதும் தவறு என்று அவர் கூறினார்.
இதே வேளை இச் சம்பவம் தொடர்பாக மேலும் பலரை கைது செய்ய தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source:http://www.bbc.co.uk/tamil
ரிஸானா நபீக்குக்கு தண்டனை என்ற செய்தியில் உண்மையில்லை- சவூதி அரசாங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 06:46.35 AM GMT ]
சவூதியில் பணியாற்றிய மூதூரை சேர்ந்த பணிப்பெண்ணான ரிஸானா நபீக்குக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்தியை சவூதி அரசாங்கத் தரப்பு மறுத்துள்ளது. இதனை இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2005 ம் ஆண்டில் குழந்தை ஒன்றுக்கு உணவு வழங்கிய வேளையில் அந்த குழந்தை இறந்து விட்டது. இதனையடுத்து ரிஸானா நபீக் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தநிலையில் அவரை மன்னித்து விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் ரிஸானா நபீக்குக்கு 17 வயதாக இருந்தமையால் அவரை தண்டிக்கக்கூடாது என்றும் சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில நேற்று சில இணையத்தளங்கள் ரிசானா நபீக்,சிரத்சேதம் செய்யப்படும் ஆபத்து உள்ளதாக தகவலை வெளியிட்டிருந்தன.
எனினும் இந்த செய்தியை சவூதி அரசாங்கத் தரப்பு மறுத்துள்ளது.
எனினும் இந்த செய்தியை சவூதி அரசாங்கத் தரப்பு மறுத்துள்ளது.
SL denies Public execution reports
The Foreign Employment Bureau (FEB) while dismissing media speculation of the public execution of Rizana Nafeek in Saudi Arabia said they are working hard together with Saudi authorities for her release.
FEB Chairman Kingsley Ranawaka speaking to Daily Mirror Online today said that the speculation of her execution is most probably triggered by the recent execution of an Indonesian maid who was beheaded for murdering her employer who had repeatedly abused her. “We are working hard to get Rizana released and we are expecting a positive outcome to our efforts,” he added.
|
Source: http://www.dailymirror.lk
ரிஸானாவை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ஜூன் 28, 2011 : சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கை காப்பாற்றுவதற்கு சர்வதேசத்தின் உதவழயை பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சுயுன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவிக்கின்றார்.ரிஸானாவை விடுதலை செய்யக்கோரி இன்று கொழும்பில நடைபெற்ற ஆர்ப்பாட்டித்தின் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.கொழும்பில் உள்ள சவூமி அரேபிய தூதுவராலயத்திற்கு முன்றலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உயிருக்கான இழப்பீட்டை வழங்கி இந்த ரிஸானாவை காப்பாற்ற அரசாங்த்திற்கு வலுவில்லையா? ரிஸானா நபீக் என்பவர் பாடசாலை செல்லும் மாணவி, அவருக்கு மரண தண்டனை வழங்க முடியாது. முகவர் நிலையமும் அரசாங்குமும் இணைந்து அவரின் உருவத்தையும் வயதையும் மாற்றியுள்ளனர்.அதனால் எவரோ செய்த குற்றத்துக்கு இந்தப் பிள்ளையை தண்டிக்க இடமளிக்கமுடியாது.இது தொடர்பில் அரசுக்கும் அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சுக்கும் கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி மன்னருக்கும் அவரின் மகனுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் எவ்வித பயனும் இல்லையென்றால் இலங்கை அரசாங்கத்துக்கு வலுவில்லை என்பதால் நாம் சர்வதேசத்துக்கு செல்ல தீர்மானித்துள்ளோம்.இதேவேளை இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மத்திய மாகாண சபை உறுப்பினர் ஷாந்தினி கோங்காகே இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவருக்கு சிரச்சேதம் செய்யவுள்ளதாக சவுதி அரேபிய அரசாங்கம் தீர்மானி்த்துள்ள விடயத்தை நேற்று மாலையே நான் அறிந்துகொண்டேன். றிசானா நபிக்குக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வேண்டுகோளுக்கு அமைவாக சவுதி அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் கூறினார். அப்படியென்றால் அமைச்சர் டிலான் பெரேரா எந்த அடிப்படையில் அதனைக் கூறினார்? றிசானாவுக்கு மரண தண்டனை வழங்கப்படுமாயின் அதற்கு இந்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். றிசானாவை காப்பாற்ற நாம் செயற்படுவோம். டிசம்பர் மாதம் அமைச்சர் டிலான் பெரேரா கூறியதை அடுத்து நாம்எமதுநடவடிக்ககைளை
நிறுத்திவிட்டோம். இந்த நடவடிக்கைக இடைநிறுத்தப்பட்டது. இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மறறும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேராவிடம் நாம்
வினவினோம்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வேண்டுகோளுக்கு அமைய சவுதி அரசாங்கம் நிறுத்தியது. இந்த தலையீட்டின் மூலம் றிசானாவுக்கு மன்னிப்பு
கிடைத்துவிட்டதாக அர்த்தப்படவில்லை. இருப்பினும் அந்த நாட்டில் உள்ள ஷரியா சட்டத்துக்கு அமைய றிசானாவுக்கு முழுமையான மன்னிப்பு பெற்றுக்கொடுக்க நாம் தொடர்ந்தும் செயற்படுகின்றோம். எனினும் றிசானாவுக்கு முழுமையான மன்னிப்பை பெற்றுக்கொடுக்க ஷாந்தினி கொங்கஹவுக்கும் ரஞ்சன் ராமாநாயக்கவுக்கும் விருப்பம் இல்லை.
அதனாலேயே எங்கேயோ உள்ள பொய்களை கூறிவருகின்றார்கள். மீண்டும் றிசானாவுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை வழங்க நேற்று வரை
தீர்மானித்திருக்கவில்லை.
கட்டாரில் பெண்களுக்கு மட்டுமான திரையரங்கம் _
பெண்களை மட்டுமே அனுமதிக்கும் விசேட திரையரங்கமொன்று கட்டாரின் டோஹா நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது.
குறித்த திரையரங்கமானது எஸ்பயர் சோன் பவுண்டேசனினால் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் விளையாட்டு வளாகத்தின் பெண்களுக்கான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இத்திரையரங்கிற்கான அனைத்து திரைப்படங்களும் கட்டார் சினிமா மற்றும் திரைப்பட விநியோக நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வார இறுதியிலும் 3 படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் சனிக்கிழமைகளில் பெண்களுடன் சமூகமளிக்கும் சிறுவர்களை கருத்தில்கொண்டு மேலதிகமாக 1 படம் காண்பிக்கப்படவுள்ளது.
குறித்த திரையரங்கில் 154 ஆசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திரையிடப்பட்டுள்ள படங்கள் குறித்த விபரம் 3 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படுமென அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் டிக்கெட் விலைகள் டோஹாவில் உள்ள மற்றைய முக்கிய திரையரங்குகளின் வி.ஐ.பி. டிக்கெட் விலையை ஒத்ததாக இருக்குமென்பதுடன் இடைவேளையின் போது சத்தான உணவு மற்றும் பானங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். __
Monday, June 27, 2011
கையடக்கத் தொலைபேசிகளின் கட்டணத்தை குறைக்க தீர்மானம்
கையடக்கத் தொலைபேசிக்கான ஆகக் குறைந்த கட்டணத்தை மேலும் குறைப்பதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அனுமதி பெறுவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் அனூஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போதுள்ள கையடக்க தொலைபேசிக்காக தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணமானது 2 ரூபா எனவும் எதிர்வரும் மாதம் முதல் நிமிடம் ஒன்றுக்கு ஒரு ரூபா 50 சதம் (1.50) வரை குறைக்குமாறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிரந்தர தொலைபேசி இணைப்புக்களுக்கு சமாந்திரமாக கையடக்க தொலைபேசி இணைப்புக்களிலும் பாரிய வளர்ச்சியொன்றைக் காணக்கூடியதாக உள்ளது எனவும் நாட்டில் தற்போது தொலைபேசி பாவனையானது 20 மில்லியனுக்கும் 17 மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் காணப்படுவது டன் அதில் அதிகமானவை கையடக்கத் தொலைபேசி பாவனை என பணிப்பாளர் நாய கம் அனூஷ பெல்பிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.
றிசானா நபீக் மரணதண்டனைக்கு உட்படுவார் ?
தனது பராமரிப்பில் இருந்த குழந்தை ஒன்றைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 2005ம் ஆண்டு சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட இலங்கையைச் சேர்ந்த றிசானா நபீக் மரணதண்டனையை எதிர்கொள்வதாக ஐக்கிய ராச்சியத்திலிருந்து இயங்கும் டெய்லி மெயில் பத்திரிகையின் இணையத்தளமும் இந்தியச் செய்தியொன்றை ஆதாரம் காட்டி இலங்கையின் சூரியன் செய்திச் சேவையும் செய்தி வெளியிட்டுள்ளன.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்திருந்த றிசானா மூச்சுத் திணறலுக்கு உட்பட்டிருந்த குழந்தையைக் காப்பாற்ற தான் பெரிதும் முயன்றதாகக் கூறியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் இந்தோனேசியாவைச் சேர்ந்த றுயாதி சபுப் என்ற பணிப்பெண் தனது முதலாளியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்திற்காக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசியா சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடைசெய்ய உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் றிசானா நபீக்கின் மரணதண்டனை தொடர்பான இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலாளியால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குறித்த இந்தோனேசியப் பணிப்பெண் விசாரணையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
றிசானா நபீக் பிறந்த வருடம் 1982 என அவரது கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அவரது உண்மையான பிறந்த வருடம் 1988 ஆகும். சம்பவம் நடக்கும் போது றிசானாவுக்கு வயது 17 மாத்திரமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரினால் போலியான முறையில் பெறப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தியே இவர் பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
சவூதி அரேபியா இந்த மரண தண்டனையை நிறைவேற்றுமாக இருந்தால், அது தான் ஏற்றுக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைச் சாசனத்தை மீறும் செயற்பாடாகும்.
மனித உரிமை அமைப்புகள் றிசானா வழக்குக்கு முன்னரும் வழக்கின் போதும் முறையான சட்டப் பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளன.
தனது குடும்பச் செலவுகளுக்காக குறிப்பாக தனது சகோதரர்கள் மூவரின் கல்விச் செலவுகளுக்காக உழைக்கும் முகமாகவே றிசானா இவ்வேலைக்கு சென்றதாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்.
நயிப் அல் குதாபி என்ற சிறு குழந்தை ஒன்றை பராமரிக்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. குழந்தையைப் பராமரிக்கும் திறன்கள் அற்றிருந்த றிசானா வேலைக்குச் சேர்ந்து ஒரு சில வாரங்களுக்குள் குழந்தைக்கு உணவு வழங்கும் போதே அது மூச்சுத் திணறலுக்கு உட்பட்டது.
இத்தண்டனையை கண்டித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, மேன்முறையீட்டு வழக்கின் போது தனது உண்மையான வயதை நிரூபிக்கும் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க றிசானாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
மூதூர் றிஸானா நபீக்கு சிறைச் சேதம்
சற்று முன் எமக்குக் கிடைத்த செய்தி ஒன்று: குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக மூதூர் றிஸானா நபீக்கு சிறைச் சேதம் செய்யுமாறு சஊதி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
Source: www.zajilfm.com
Source: www.zajilfm.com
Sunday, June 26, 2011
மாநபியின் விண்ணுலகப்பயணமும் மானுடர்கள் பெறவேண்டிய படிப்பினைகளும்!
م
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)
இந்த வசனத்தில் அல்லாஹ் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக பயணத்தை மேற்கோள் காட்டி, அந்த பயணம் 'நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காக' என்று சொல்லிக்காட்டுகிறான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த பயணம் விரிவான செய்திகளை அடக்கியது எனவே, அதை சுருக்கமாக பார்த்துவிட்டு இந்த பயணத்தின் மூலம் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகளை விரிவாக பார்ப்போம்.
ஸம் ஸம் நீரால் கழுவப்பட்ட இதயம்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்" நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது.
பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்.
முதல் வானத்தில்:
'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள்.
இரண்டாவது வானத்தில்:
பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள்.
மூன்றாவது வானத்தில்:
பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
நான்காவது வானத்தில்:
பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
ஐந்தாவது வானத்தில்:
பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்.
ஆறாவது வானத்தில்:
பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
ஏழாவது வானத்தில்:
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள்.
''அல் பைத்துல் மஃமூர்''
பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்" என்றார்.
''சித்ரத்துல் முன்தஹா''
பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
ஐந்து வேலைத்தொழுகை கடமையாக்கப்பட்டது
பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. (நூல்: புகாரி, எண் 3207)
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் காபாவில் இருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற விபரங்கள் கூடுதலாக கிடைக்கின்றன.
எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், 'புராக்' எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று ஜிப்ரீல் கூறினார். (நூல்: முஸ்லிம்)
இந்த பொன்மொழியிலிருந்து அறியவேண்டியவைகள்:
ஒவ்வொரு வானத்திற்கும் பிரத்தியேகமான காவலர்களை (வானவர்களை) அல்லாஹ் நியமித்துள்ளான்.
அல்லாஹ்வால் அழைக்கப்பட்டவர் மட்டுமே வின்னிற்குள் நுழையமுடியும்.
ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
அல்-பைத்துல் மஃமூர் (பூமியில் புனித பள்ளியாக காஃபா இருப்பதுபோல்) வானத்தில் உள்ள புனித பள்ளியாகும். இங்கு வானவர்கள் மட்டுமே தொழுவார்கள். ஒருமுறை தொழும் வானவர்களின் எண்ணிக்கை 70 ,000 பேர் ஆகும். ஒரு முறை அங்கு வணங்கியவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.
ஒரு முறை தொழும் வானவர் 70,000 பேர். அவர்கள் மீண்டும் அங்கு வரமாட்டார்கள் எனில், அல்லாஹ் கணக்கிலடங்கா வானவர்களை படைத்திருக்க கூடும்.
படிப்பினைகள்:
அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை கடமையாக்கினான். பின்பு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவுரையின் பேரில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன் பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு நற் செயலுக்கு பத்து மடங்கு கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான். இந்த அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில் பெரும்பாலோர் பாழடித்து வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள் மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை காட்டிஐம்பதை மாற்றி ஐந்தாக தந்தானே, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஐவேளை தொழுபவர்களாகவும், சுன்னத்தான-நபிலான தொழுகையை நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். (நூல்: புகாரி, எண் 3241)
படிப்பினைகள்:
எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், 'என்ன வாழ்க்கை இது; அல்லாஹ்வை நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ' என்று அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள் வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு தெளிவாக்குகிறது.'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள்.
'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர்.
'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி, எண் 304)
இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற முன்வரவேண்டும்.
மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். "இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861)
படிப்பினைகள்:
புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் விதிவிலக்கானவர்கள் 'மைக்ரோ பாய்ண்ட்'அளவே தேறுவர். இந்த மாபாதக செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!
அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 'அல்கவ்ஸர்' எனும் தடாகத்தை மறுமையில் வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். நூல்;புஹாரி ]
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர் அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர் தடுக்கப்படுவார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' நான் (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என் சமுதாயத்தார்' என்பேன். அதற்கு 'உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்' என்று கூறப்படும். (நூல்: புகாரி, எண் 7048)
இந்த பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு நீரருந்த வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும் என்று பொருளல்ல. மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த ஒரு தீய செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும் வந்தவழியே செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு எவரிடமும் உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தர்காக்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை தேடுகின்றனர்.
அதோடு இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஒரு குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, முதுமையடைந்து இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதை காணலாம். இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி செல்வதாகும். எனவே மார்க்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு முற்று பெற்று விட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் எவர் எதை சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து விட்டு குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி சொர்க்கம் செல்லவும் முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக பயணத்தை எந்த படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!
- உங்கள் சகோதரன், முகவை எஸ்.அப்பாஸ்,
மண்ணறை வாழ்க்கையை மறவோம்!
மண்ணறை வாழ்க்கையை மறவோம்!
o இறை நம்பிக்கையாளரின் மண்ணறை
o இறை நிராகரிப்பாளனின் மண்ணறை
o இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கை
o மண்ணறையில் கேட்கப்படும் கேள்வியும் விடையும்
o மண்ணறைப் பற்றிய சில நபி மொழிகள்
o மண்ணறையின் வேதனைக்குக் காரணம் என்ன?
o மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி?
உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.
அதாவது, "மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென" அவர்கள் கூறுகின்றார்கள் நாமோ, "மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது" என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சரியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.
ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள்.
இறை நம்பிக்கையாளரின் மண்ணறை
இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார்.
அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.
அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர்.
அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை 'இல்லிய்யீனிலே' (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்) அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து, உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார்.
அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்? எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.
இறை நிராகரிப்பாளனின் மண்ணறை
நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர். அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ
நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் - அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)
ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள "ஸிஜ்ஜீன்" (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ
இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)
இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன் பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.
(நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)
அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நல்லடியாரின் உயிரும், கெட்ட அடியானின் உயிரும் எப்படி பிரிகின்றது? அவ்விருவரின் கப்ருகளின் நிலை எப்படி அமைகின்றன என்பதை அறிந்தீர்கள். நமது மண்ணறையும் சுவர்க்கப் பூங்காவாக அமைய வேண்டுமானால் மரணிப்பதற்கு முன்பே அதற்குரிய அமல்களை அவசியம் செய்ய வேண்டும். அமல்கள் செய்யாமல் மரணிப்பவர், தன்னுடைய மரண நேரத்தில் இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ்வதற்கு அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார். ஆனால், அவருக்கு கொஞ்ச நேரம் கூட கொடுக்கப்படமாட்டாது என்பதை அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்.
حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். "நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)
இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கை
மரணித்தவுடன் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பொருட்கள் மட்டும் பங்கு வைக்கப்படுவதில்லை நமது மனைவியையும் யாராவது மறுமணம் முடித்துக் கொள்வார்கள். நமது உடலை விட்டு உயிர் பிரிந்ததும், இவ்வுடலை எப்போது அடக்கம் செய்வது என்பதைப்பற்றித்தான் மக்கள் முதலில் பேசிக் கொள்வார்கள். இவ்வுளவுதான் இவ்வுலக வாழ்க்கை. நமது சொந்த பந்த உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.
கப்ரில் கேட்கப்படும் கேள்வியும் விடையும்
மனிதன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை இவ்வுலகில் அமைத்துக் கொண்டானோ, அதற்கேற்ற பதிலை மலக்குகளிடம் கப்ரில் கூறுவான். கப்ரில் கேட்கப்படும் கேள்விகளின் விடைகளை வைத்தே சுவர்க்கமும், நரகமும் முடிவு செய்யப்படுகிறது. அப்படியானால், கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த கேள்விகளையும் விடைகளையும் நாம் எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கின்றோம். அதனால் அக்கேள்விகளுக்கான விடைகளை கப்ரில் அனைவராலும் சொல்லிவிட முடியுமா? நிச்சயம் முடியாது.
யார் இவ்வுலகில் அல்லாஹ்விற்கு, கட்டுப்பட்டு நடந்தாரோ அவர்தான் "என் இறைவன் அல்லாஹ்" என்று கூறுவார். யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் காட்டித்தந்த வழியில் நடந்தாரோ அவர்தான் எனது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் என்று கூறுவார். யார் இஸ்லாத்தை மார்க்கமாகப் பின்பற்றினாரோ அவர்தான் "என் மார்க்கம் இஸ்லாம்" என்று கூறுவார். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவு படுத்துகின்றது.
(சரியான விடை சொன்ன அம்மனிதரைப்பார்த்து, நீ இப்படி சரியான விடை சொல்வாய் என்பது எங்களுக்குத் தெரியும், காரணம்) நீ அப்படித்தான் வாழ்ந்தாய், அப்படியே மரணித்தாய், அப்படியே எழுப்பப்படவும் போகிறாய் என அம்மலக்குகள் கூறுவார்கள். (முஸன்னஃப் இப்னு அபீஷைபா)
இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இம்மூன்று கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக உங்களின் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
கப்ரைப்பற்றிய சில நபி மொழிகள்
நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
மண்ணறையில் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவனது இடம் அவனுக்குக் காட்டப்படும். 'மறுமை நாளில் இறைவன் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம்' என்று அவர்களிடம் கூறப்படும். (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஒரு ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) மனிதர்கள் சுமந்து செல்லும் போது அவர் ஒரு நல்லடியாராக இருந்தால், "(நான் தங்குமிடத்துக்கு அவசரமாக) என்னை எடுத்துச் செல்லுங்கள்" எனக்கூறும். அவன் பாவியாக இருந்தால், "(எனக்கு) என்ன கேடுதான் பிடித்து விட்டதோ!" என்று கூறியவாறு அலறும். இந்த ஓசையை மனிதர்கள், ஜின்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவிமடுக்கும். மனிதன் அச்சத்தத்தைக் கேட்டால் மயங்கிக் கீழே விழுந்து விடுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
ஜனாஸாவை பின் தொடர்வதின் சிறப்புகள்
யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று, ஜனாஸா தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு "கீராத்" நன்மைகளைப் பெற்றுத் திரும்புகிறார். ஓவ்வொரு கீராத்தும் உஹது மலையைப் போன்றதாகும். யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டுவிட்டு (நல்லடக்கத்துக்கு முன்) திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு "கீராத்" நன்மையைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
கப்ரின் வேதனைக்குக் காரணம் என்ன?
கப்ரின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.
கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி?
1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும்.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும்.
கப்ரின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கிவைப்பானாக!.
நன்றி: ICCGSL
Subscribe to:
Posts (Atom)