widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, July 2, 2012


ஐயமும் தெளிவும்

ஐயம் :ஆணும் பெண்ணும் முஸாபஹாச் செய்யலாமா? - . 

தெளிவு :ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமை சந்திக்கும் போது முஸாபஹா (கைலாகு கைகுலுக்குதல்) செய்வது
இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு நடைமுறையாகும். நபியவர்கள் கூறினார்கள்: இரு முஸ்லிம்கள் சந்தித்துக்கொள்ளும்
போது இருவரும் முஸாபஹா செய்து கொண்டால் அல்லாஹ் அவ்விருவரும் பிரிந்துசெல்வதற்கு முன்பே அவர்களது
பாவங்களை மன்னித்துவிடுவான் (திர்மிதி, இப்னு மாஜஹ்)
இவ்வகையில் ஒரு ஆண் மற்றுமொரு ஆணோடு முஸாபஹா செய்வதிலோ, ஒரு பெண் மற்றுமொரு பெண்ணோடு முஸாபஹா
செய்வதிலோ எந்தத் தவறுமில்லை. அது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறே ஒரு ஆண் அல்லது பெண் தாம்
திருமணம் முடிக்க ஹறாமானவர்களுடன் ( உ-ம் : தாய் - மகன், தந்தை - மகள், உடன்பிறந்த சகோதரன் - உடன் பிறந்த
சகோதரி, பெரியம்மா - மகன் போன்றோர்) முஸாபஹா செய்துகொள்வதிலும் எந்தத் தவறுமில்லை.
ஆனால், திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களுடன் (அஜ்னபி) ஓர் ஆணோ, பெண்ணோ முஸாபஹா செய்வது
ஹறாமான செயலாகும். இவ்வாறே மாற்று மதப் பெண்களுடன் ஒரு முஸ்லிமான ஆணோ, அல்லது மாற்று மத ஆண்களுடன்
ஒரு முஸ்லிமான பெண்ணோ கைகுலுக்குவதும் ஹறாமான காரியமாகும்.
நபியவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரின் தலையில் இரும்புச் சம்மட்டியால் அடிப்பது அவர் தனக்கு அனுமதியில்லாத
(அஜ்னபி) பெண்ணைத் தொடுவதை விடச் சிறந்ததாகும் (தபரானி)
இஸ்லாத்தை ஏற்க வரும் ஆண்களோடு நபியவர்கள் கைகளைப் பற்றி முஸாபஹா செய்வார்கள். ஆனால் பெண்களோடு
முஸாபஹா செய்ய மாட்டார்கள். ஆஇ~h றழியல்லாஹ{அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: பெண்கள் நபியவர்களிடம்
வந்து பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள். அவ்வேளையில் அல்லாஹ்வின் மீது ஆணையாக நபியவர்களின்
கை எந்தவொரு பெண்ணின் கையையும் தொட்டது கிடையாது. வார்த்தைகளினால் மட்டுமே பைஅத் செய்துகொள்வார்கள்
(ஸஹீஹ் முஸ்லிம்). இஸ்லாத்தை ஏற்க வரும் பெண்களுக்கு நபியவர்கள் வார்த்தைகளைக் கொண்டே பைஅத் செய்வார்கள்.
ஒரு தடவை நபியவர்களிடம் ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எங்களுடன் நீங்கள் முஸாபஹா செய்ய
மாட்டீர்களா? என்று கேட்ட போது நான் பெண்களுடன் முஸாபஹா செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். (முஸ்னத்
அஹ்மத், நஸாஈ, தபரானி)
இன்று பரவலாக நடைபெறும் ஒரு தவறு என்னவெனில், ஆண்களும் பெண்களும் ஒன்றாக தொழில் புரியும் இடங்களில்
ஏதாவது நிகழ்வுகளின் போது ஆண்களும் பெண்களும் கைகுலுக்கிக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. இ;வ்வாறே
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் கற்கும் மாணவ, மாணவிகளும் பிரியாவிடை வைபவங்களின் போது
ஆண்களும் பெண்களும் சர்வ சாதாரணமாக கைகுலுக்கிக் கொள்கிறார்கள். இது இஸ்லாம் ஹறாமாக்கிய ஒரு செயல் என்ற
விடயத்தை பலர் அறியாதிருக்கிறார்கள். பலர் அறிந்திருந்தாலும் பிறர் ஏதும் நினைத்துவிடுவார்கள் என்பதற்காக இவ்வாறு
செய்துவிடுகிறார்கள். ஆனால் இந்த ஹறாமான காரியத்தை செய்தால் அல்லாஹ் கோபித்துவிடுவானே என்பதை வசதியாக
மறந்துவிடுகிறார்கள். மார்க்கத்தை நல்ல முறையில் பேணி நடப்பவர்கள் கூட தங்களது வேலைத் தளங்களில் இவ்வாறான
சந்தர்ப்பங்களில் தவறிழைத்து விடுகிறார்கள். மாற்று மதத்தினர் ஏதும் நினைத்துவிடுவார்கள் என்று கருதினால் அவர்களிடம்
இது எங்கள் மார்க்கம் கூறும் விதிமுறை என்பதை நல்ல முறையில் தெளிவுபடுத்தி விட்டால் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
சமூகத்தில் காணப்படும் மற்றுமொரு தவறு என்னவெனில், ஹஜ் காலங்களில் ஹஜ்ஜுக்குச் செல்வோரை வழியனுப்பும்
நிகழ்வுகளின் போது திருமணம் முடிக்கத் தகுந்த (அஜ்னபியான) ஆண்களும் பெண்களும் முஸாபஹா செய்துகொள்ளும்
நிலை சில இடங்களில் காணப்படுகிறது. இது கட்டாயம் தவிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.
முஸாபஹா செய்வது தொடர்பான சில மார்க்க வரையறைகளை தெளிவுபடுத்துவது இவ்விடத்தில் பொருத்தமாகும்.
நபியவர்களும் ஸஹாபாக்களும் முஸாபஹா செய்தமை தொடர்பான பல்வேறு ஹதீஸ்கள் பல ஹதீஸ் நூல்களில்
இடம்பெற்றுள்ளன. இவற்றை தொகுத்து நோக்கும் போது நாம் தெரிந்துகொள்ளும் ஒரு விடயம் என்னவெனில், முஸாபஹா
செய்யும் போது ஓதுவதற்கென்று எந்தவொரு வாசகத்தையும் நபியவர்கள் நமக்கு கற்றுத் தரவில்லை. ஸஹாபாக்கள் ஒருவரை
ஒருவர் முஸாபஹா செய்தமை தொடர்பான ஹதீஸ்களிலும் எந்தவொன்றையும் ஓதியதாக எந்தக் குறிப்பும் இல்லை.
ஏனெனில் நபிகளார் அவ்வாறு கற்றுக்கொடுக்கவில்லை. ஆயினும் பெருநாள் தினங்களில் மாத்திரம் ஸஹாபாக்கள் ஒருவரை
ஒருவர் சந்தித்து முஸாபஹா செய்யும் போது தகப்பலல்லாஹ{மின்னா வமின்கும் என்று சொல்லிக்கொள்வார்கள். இவ்வாறு
ஸஹாபாக்கள் பெருநாள் தினங்களில் மாத்திரமே சொல்லிக்கொள்வார்கள். ஏனைய தினங்களில் அல்ல.
இவ்வாறே, முஸாபஹா பற்றிய ஹதீஸ்களை நோக்கும் போது இரு கைகளையும் பற்றி முஸாபஹா செய்ததாக
காணப்படவில்லை. ஒரு கை என்ற வாசகத்தையே ஹதீஸ்களில் காண முடியும்.
ஒரு கையை பிடித்து முஸாபஹா செய்வது யூத, கிறிஸ்தவர்களின் செயல் என்று சிலர் அர்த்தம் கொடுக்கின்றனர்.
முஸ்லிம்களாகிய நாம் பார்க்க வேண்டியது நபியவர்களின் நடைமுறையையே அன்றி, யூத, கிறிஸ்தவர்களின் நடைமுறையை
அல்ல. யூத, கிறிஸ்தவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்றால், சிலவேளை அவர்கள் ஆரம்பகால முஸ்லிம்களிடமிருந்து
அல்லது ஹதீஸ்களிலிருந்து இதை பிரதிபண்ணியிருக்கக் கூடும். ஏனெனில், யூதர்களும் கிறிஸ்தவர்களும் நாகரிகம், பண்பாடு
பற்றி எதுவுமே அறியாதிருந்த முன்னைய காலகட்டத்தில் பல பண்பாடுகள், நடைமுறைகளை ஆரம்பகால
முஸ்லிம்களிடமிருந்தும் அல்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்துமே கற்றுக்கொண்டார்கள் என்று வரலாறு எடுத்தியம்புகிறது. யூத,
கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நபியவர்களின் நடைமுறையென்று தெட்டத்தெளிவாக தெரிகின்ற ஒரு விடயத்தை
விட்டுவிடுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

0 comments:

Post a Comment