widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, July 2, 2012


அல்லாஹ்வின் அன்பைப் பெறும் வழிகள. 

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு
நடத்தல்

“நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்
கட்டுப்படுங்கள். நீங்கள் அன்பு காட்டப்படுவீர்கள்” (3:132)
“அல்லாஹ்வை விசுவாசித்து, அவனைப் பலமாக
பற்றிப்பிடித்துக் கொள்பவர்களை அவன் தனது அன்பிலும்
பேரருளிலும் பிரவேசிக்கச் செய்வான். மேலும் தன்பக்கமுள்ள
நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்” (4:175)
2. பாவ மன்னிப்புக் கோருதல்:
ஓர் அடியான் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும் தனது
குற்றத்தை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக்
கோரினால் நிச்சயம் அல்லாஹ் தனது அன்பின் விசாலத்தால்
இ ணைi வ த ; த i ல த ; த வ p ர வு ள ; ள அ i ன த ; து க ;
குற்றங்களையும் மன்னித்துவிடுவான். புஹாரி, முஸ்லிம்
ஆகிய ஹதீஸ் நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள, 99
பேரைக் கொலை செய்த மனிதர் தனது தவ்பாவினால்
மன்னிக்கப்பட்டார் என்ற சம்பவம் சான்றாக அமைகிறது.
ஆயினும் பாவங்களுக்கான தவ்பாவைச் செய்யாமலே ஒருவர்
மரணித்து விட்டால் அவரது ஒதுங்குமிடம் நரகம்தான்.
இதனை பின்வரும் இறைவசனம் தெளிவுபடுத்துகிறது:
மேலும் தீயவற்றை செய்துகொண்டிருப்போரில் ஒருவருக்கு
முடிவில் மரணம் வந்தபோது, இப்போது நான் “பாவமீட்சி
பெறுகிறேன் என்று கூறுகின்றாரே அவருக்கும் மற்றும்
இறைவனை நிராகரித்த நிலையில் மரணிப்பவர்களுக்கும்
பாவமன்னிப்பு கிடையாது. அத்தகையோருக்கு துன்புறுத்தும்
வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்” (4:18)
3. கஷ்டங்கள், துன்பங்களின் போது பொறுமை கொள்ளல்:
“பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும்
செல்வங்கள், உயிர்கள், கனிகள் ஆகியவற்றில் குறைவை
ஏற்படுத்துவதன் மூலமாகவும் நிச்சயமாக நாம் உங்களை
சோதிப்போம். இவற்றைப் பொறுத்துக்கொள்பவர்களுக்கு
(நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக” (2:155)
4. முரண்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில்
சமாதானத்தை ஏற்படுத்தல்:
“நிச்சயமாக விசுவாசிகள் ஒருவருக்கொருவர் சகோதரர்களே.
ஆகவே (சண்டையிட்டுக்கொள்ளும்) உங்களுடைய இரு
சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்.
நீங்கள் அருள் செய்யப்படுவதற்காக அல்லாஹ்வைப்
பயந்தும் கொள்ளுங்கள்” (49:10)
5.அல்லாஹ்விடம் நமது தேவைகளை முறையிடல்:
“ஒரு சில இளைஞர்கள் ஒரு குகையினுள் (அபயம் நாடி)
ஒதுங்கியபோது அவர்கள் எங்கள் இரட்சகனே!
உன்னிடமிருந்து அருளை எமக்கு அருளை எங்களுக்கு
அளிப்பாயாக. நீ எங்களுக்கு எங்கள் விடயத்தில்
நேர்வழியை அமைத்துத் தருவாயாக என்று பிரார்த்தனை
செய்து கூறினார்கள்”(18:10)
“அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உண்டு. அவற்றைக்
கொண்டு அவனை அழையுங்கள்” (7:180)
6. அல்லாஹ்வின் படைப்புகள் மீது இரக்கம் காட்டுதல்:
நபியவர்கள் கூறினார்கள்: “அன்பு காட்டுபவர்களுக்கு
அல்லாஹ்வும் அன்பு காட்டுவான். நீங்கள் பூமியில்
உள்ளவர்களுக்கு அன்பு காட்டுங்கள். வானத்தில்
உள்ளவன் உங்கள் மீது அன்புகாட்டுவான” திர்மிதி)
7. அல்குர்ஆன் ஓதப்படும் போது அதனை செவிமடுத்துக்
கேட்டல்:
“அல ; கு ர ;ஆன ; ஓ த ப ; ப ட ; ட h ல ; ந P ங ; க ள ; அன ; பு
க h ட ; ட ப ; ப டு வ த ற ; க h க அத i ன n ச வ p ம டு ங ; க ள ; ,
மௌனமாகவும் இருங்கள்” (7: 204)
8. நல்லமல்களை அதிகம் செய்தல்:
“உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சுவர்க்கத்துக்கும்
முந்திக்கொள்ளுங்கள். அச்சுவர்க்கத்தின் பரப்பு வானம்,
பூமியின் பரப்பைப் போன்றதாகும். எவர் அல்லாஹ்வின் மீதும்
அவனது தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ
அவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டிருக்கிறது” ( 57: 21)
எனவே, நன்மைகள் விடயத்தில் முடிந்தவரை
மு ந ; த p க ; n க h ள ; ள N வ ண ; டு ம ; . அ வ ற ; i ற த ;
தள்ளி ப ; N ப h டலா க hது. இறைவனின் அன்பையும ;
மஃபிரத்தையும் பெற மேற்கூறப்பட்ட விடயங்களைக்
கடைப்பிடித்து எமது வாழ்வை ஒளிமயமாக்குவோமாக.

0 comments:

Post a Comment