"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Sunday, July 1, 2012
தவ்ஹீத் ஜமாஅத் சொல்வதென்ன ?
- அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்ற கொடியின் கீழ் முழு முஸ்லிம் சமூகமும் ஒற்றுமைப்படவேண்டும் என்று அழைப்பு விடுப்பதோடு, அந்தஒற்றுமையை எட்டுவதற்காக சமூக மட்டத்திலும் தனிநபர் மட்டத்திலும் அயராது உழைக்கிறோம்.
- அனைத்து நபிமார்களினதும் பிரதான பணியாக இருந்த ஓரிறைக்கொள்கையை அழுத்தமாக வலியுறுத்தி,அதற்கெதிரான இணை வைத்தல் எனப்படும் கொடியபாவம் எந்த வடிவில் இருந்தாலும் அதை இல்லாதொழிக்க பாடுபடுகிறோம்.
- பித்அத் எனப்படும் நூதன அனுஷ்டானங்கள்,இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குகள், இஸ்லாத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்,கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்க்கிறோம்.
- வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அல்லாஹ்வினதும்அவனது தூதரினதும் கட்டளைகள் மிளிரவும்,அல்லாஹ்வுடைய மார்க்கத்தை இப் புவியில்நிலைநிறுத்துகின்ற ஓர் உன்னத சமூகத்தைஉருவாக்கவும் பாடுபடுகிறோம்.
- அனைத்து வகையான பாவங்களும் தீமைகளும் அகன்று,இஸ்லாம் வலியுறுத்துகின்ற அழகிய பண்பாடுகள்,ஒழுக்க விழுமியங்கள் சமூகத்தில் தழைத்தோங்க அழைப்பு விடுக்கிறோம்.
- யாரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர்கள். யார்எதைச் சொன்னாலும் அதை அல்குர்ஆனோடும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களோடும் சரிபார்த்து விளங்கிப் பின்பற்ற வேண்டுகிறோம்
- .
- முஸ்லிம்களிடம் காணப்படுகின்ற அறிவு ரீதியான தேக்க நிலை நீங்கி, சிறந்த கல்விப் பின்புலமும் சிந்தனை முதிர்ச்சியும் ஆற்றலும் நிறைந்த தனிநபர்கள் உருவாக பாடுபடுகிறோம்.
- இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தருகின்ற இவ்உன்னதமான பணியில் அனைவரும் சேர்ந்து உளத்தூய்மையோடு பணியாற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment