widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, July 6, 2012


நபி வழியில் நம் தொழுகை - 2


(கடந்த மாத இதழில் தொழுகையில் நபியவர்களைப் பின்பற்றுவதன்
அவசியம் பற்றி ஆராயப்பட்டது. இவ்விதழிலிருந்து தொழும் முறை
ஆதாரங்களோடு தரப்படுகிறது)
1) கிப்லாவை முன்னோக்குதல்
2) தடுப்பு(ஸ த்றா) ஒன்றை முன்னால் வைத்தல்
தொழுகையை ஆரம்பித்ததிலிருந்து தொழுது முடியும் வரை
உடல் முழுவதும் கிப்லா திசையை முன்னோக்கி நிற்பது
அவசியமாகும். இல்லையேல் தொழுகை ஒரு போதும்
நிறைவேறாது.
தொழுகையை முறைதவறி நிறைவேற்றிய ஒருவரை
நோக்கி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : நீர்
தொழுகைக்காக ஆயத்தமானால் வுழூவை பூரணமாக செய்து
கொள், பின்னர் கிப்லா திசையை முன்னோக்கி நில்
(ஸஹீஹ{ல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்).
ஆயினும் வாகனத்தில் பயணிக்கும் ஒருவர்
ஸ{ன்னத்தான தொழுகையை தொழ விரும்பினால்,
வாகனத்தில் இருந்தவாறு ஆரம்பத் தக்பீரின் போது மாத்திரம்
கிப்லாவை முன்னோக்குவார். பின்னர் வாகனம் கிப்லா
திசையல்லாத வேறு திசைகளில் பயணித்தாலும்
தொழுகையை வாகனம் செல்லும் திசைகளில்
நிறைவேற்றுவது ஆகுமானதாகும். நபிகளார் இவ்வாறே
தொழுதிருக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் தமது
ஒட்டகத்திலிருந்தவாறு ஸ{ன்னத்தான தொழுகையை தொழ
நினைத்தால் கிப்லாவை முன்னோக்கி ஆரம்பத் தக்பீர்
சொல்வார்கள். பின்னர் வாகனம் செல்லுவதற்கேற்ப (கிப்லா
திசையல்லாத வேறு திசைகளில் வாகனம் பயணித்தாலும்)
தொழுகையை தொழுது முடிப்பார்கள் (அபூதாவூத்).
ஆனால், வாகனத்தில் இருக்கும் ஒரு பயணி பர்ழான
தொழுகையை தொழுவதாயின் வாகனத்திலிருந்து இறங்கி
தொழுகையின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கிப்லாவை
முன்னோக்கியிருக்க வேண்டும் . நபியவர ;கள்
பயணத்திலிருக்கும் போது பர்ழான தொழுகையை தொழ
நாடினால் வாகனத்திலிருந்து இறங்கி கிப்லாவை முன்னோக்கி
தொழுவார்கள் (புஹாரி , பைஹகீ ) . ஆயினும்
வாகனத்திலிருந்து இறங்குவது சாத்தியமில்லை, தொழுகை
தவறிப்போய் விடும் என்ற நிலையிருந்தால் மாத்திரம்
வாகனத்திலிருந்தவாறு பர்ழு தொழுகையை நிறைவேற்ற
முடியும்.
தனியாக தொழுபவர்களும் இமாமாக தொழுகை
நடத்துபவரும் முன்னால் தடுப்பு (ஸ{த்ரா) ஒன்றை வைத்துக்
கொள்வது அல்லது தடுப்பு ஒன்றை முன்னோக்குவது
அவசியமாகும். தடுப்பு என்பது சுவராகவோ, தூணாகவோ,

கதிரையாகவோ, ஒரு தடியாகவோ வேறு எதுவாகவும்
இருக்கலாம். இன்றிருக்கும் பலர் இது பற்றி
அறியாதிருக்கின்றனர் . அறிந்திருந்தாலும் மிக
பொடுபோக்காக இருக்கின்றனர்.
நபியவர்கள் கூறினார்கள் : தடுப்பு ஒன்றை
முன்னால் வைக்காமல் நீங்கள் தொழ வேண்டாம். (தொழும்
போது) உங்களுக்கு முன்னால் யாரும் குறுக்கே செல்ல விட
வேண்டாம். (குறுக்கே செல்பவரை நீங்கள் தடுத்தும் கூட)
அவன் மறுத்தால் அவனை கொன்று விடுங்கள். ஏனெனில்
அவனுடன் தோழன் (i~த்தான்) இருக்கிறான் (ஸஹீஹ்
இப்னு குஸைமா).
தடுப்புக்கும் தொழுபவருக்கும் இடையே மூன்று
முழம் இடைவெளி இருக்கத்தக்கதாக நெருக்கமாக நிற்க
வேண்டும்.
நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் தொழும்
போது தடுப்புக்கு நெருக்கமாக நிற்பார்கள். அவர்களுக்கும்
தடுப்புக்கும் இடையில் மூன்று முழங்கள் இடைவெளி
இருக்கும் (ஸஹீஹ{ல் புஹாரி , முஸ்னத் அஹ்மத்).
நபியவர்கள் பெருநாள் தொழுகையை திடலில்
நிறைவேற்றும் போது தமக்கு முன்னால் தடியொன்றை நட்டி
அதை த டு ப ; ப h க வைத ;து n த hழுகையை
நிறைவேற்றுவார்கள். இவ்வாறே பிரயாணத்தில் இருக்கும்
போது வழியில் தொழ நேர்ந்தால் முன்னால் ஏதாவது ஒன்றை
தடுப்பாக வைத்துவிட்டு தொழுவார்கள். சில வேளைகளில்
தான் பயணம் செய்த ஒட்டகத்தை முன்னால் நிறுத்தி விட்டு
தொழுவார்கள். அந்தளவுக்கு நபியவர்கள் (ஸ{த்ரா) தடுப்பு
ஒன்றை முன்னால் வைத்து தொழுவதில் அதிக கவனம்
செலுத்தியிருக்கிறார்கள். (புஹாரி, முஸ்லிம், அபூதாவூத்,
பைஹகீ)
இவ்வாறு தடுப்பு ஒன்றை வைப்பதால் i~த்தான்
தொழுகையில் ஆதிக்கம் செலுத்துவதிலிருந்து பாதுகாப்புப்
பெறலாம். வீட்டில் தொழும் பெண்கள் கூட சுவரையோ,
கதிரை, மேசை போன்றவற்றையோ தடுப்பாகக் கொண்டு
தனக்கும் தடுப்புக்கும் இடையில் ஸ{ஜூத் செய்வதற்கு
வசதியாக மூன்று முழம் இடைவெளிவிட்டு தொழுகையை
நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இமாமைப் பின்பற்றி மஃமூமாக தொழுபவர்களுக்கு
இமாமே தடுப்பாக இருக்கிறார் என்பதால் அவர்கள் தடுப்பு
வைக்கத் தேவையில்லை.
(இன்~h அல்லாஹ் அடுத்த இதழில்...)

0 comments:

Post a Comment