"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Sunday, July 1, 2012
இணைவைத்தல்
மிகப்பெரும் பாவம்
அல்லாஹ்வுக்கு இணைவைப்பது எவ்வளவு பெரும் பாவம்
என்பதை உணர்த்த பின்வரும் மூன்று அல்குர்ஆன்
வசனங்கள் போதுமானவை:
“யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு
அல்லாஹ் சுவர்க்கத்தை ஹராமாக்கி விடுவான்”
(5: 72)
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை
ஒரு போதும் மன்னிக்கமாட்டான் அதைத் தவிரவுள்ள ஏனைய
பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னித்து விடுவான்”
(4 : 116)
“(நபியே) நீர் இணைவைத்தாலும் உம்முடைய அமல்கள்
அழிந்து விடும் நீர் ந~;டவாளர்களில் ஒருவராக ஆகிவிடுவீர்”
(39 : 65)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment