widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, July 28, 2012


 மனித வாழ்வில் ''வஹி''யின் தாக்கம்
          மனித வாழ்வில் வஹியின் தாக்கம்        
''வஹி அறிவு'' போதகரின் உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும்
  எம்.எச்.எம். நாளிர் 
மேற்கத்திய உலகில் வஹியின் தாக்கத்தை அறியக்கூடியதாக உள்ளது. எனினும், கிழக்கத்திய உலகில் இதனைத் தெளிவாகக்காண முடியாது உள்ளது. இதற்கான காரணம் யாதெனக் கண்டறிய வேண்டிய தேவை உள்ளது. இது பற்றி உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கூறும் கருத்தை நோக்குவோம்.
இது சமூகத்தின் பிழையல்ல. வஹியோடு சமூகத்தைத் தொடர்பு படுத்த வேண்டியவர்கள் செய்த பிழையாகும். அவர்கள் வஹியை வெறும் போதனையாக மாற்றிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர், வஹியை வாழ்க்கையாக மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள், துன்பங்கள், சோதனைகள் அளப்பரியன.
நாம் அத்தனையையும் சுருக்கி வெறுமனே வாய்களிலிருந்து காதுகளை எட்டும் போதனைகளாக வஹியை மாற்றிவிட்டோம். இன்றைய சமூகத்தில் குறைந்த பட்சம் அந்த வஹியைப் பொருளறிந்து விளங்கிக் கற்பதற்குக் கூட ஊக்குவிப்புக்களை வழங்காத ஒரு சூழலைக் காண்கிறோம்.
கற்பவர்களும் வஹியினூடாக அல்லாஹ் அருளிய அடிப்படைகளை விட்டுவிட்டு உட்பிரிவுகளிலுள்ள கருத்து வேறுபாடுகளையும் அவற்றின் மீதான வெறியையும் வளர்க்கிறார்கள்
அல்லது பகல் காலத்திற்குத் தேவையான வஹியை விட்டு விட்டு இரவு காலத்திற்குத் தேவையானதையும், வாழும் காலத்திற்குத் தேவையானதை விட்டு விட்டு மரணத்திற்குப் பின் தேவையானதையும், நெருக்கடிமிக்க வெளிச் சூழலுக்குத் தேவையானதை விட்டு விட்டு,
அமைதிமிக்க மஸ்ஜிதிற்குள் அவசியமானதையும், வாழ்க்கை போராட்டத்தையும் வரலாற்றையும் திசை திருப்பும் வஹியை விட்டு விட்டு கட்டிடங்களையும் மிம்பர்களையும் எழுப்புகின்ற வஹியையும்,
மனிதனை உருவாக்கும் வஹியை விட்டு விட்டு அவன் செய்ய வேண்டிய ஒரு அமலை உருவாக்கும் வஹியையும், மனித சமூகத்தை வழிநடத்தும் வஹியை விட்டு விட்டு பிற சமூகங்களால் ஏற்படும் துன்ப துயரங்களை அல்லாஹ்விடம் முறையிடும் வஹியையும் நாம் போதித்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய வழிகாட்டிகள் வஹியைப் போதிக்கும் இவ்வணுகுமுறை காரணமாக வஹியின் வளர்ச்சியையும் அது வழங்குகின்ற உத்வேகத்தையும் அது உருவாக்குகின்ற எதிர்கால நம்பிக்கையையும் அது தோற்றுவிக்கின்ற இலட்சிய வேட்கையையும் குன்றச்செய்து விடுகிறார்கள். இதனால் ஏனைய தேவைகளுக்காக விடுக்கப்படும் அழைப்பிற்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம், வஹி சார்பாக விடுக் கப்படும் அழைப்பிற்குக் கொடுக்கப்படுவதில்லை.
மக்கள் இவ்வாறு நடந்து கொள்ளும்போது சகித்துக்கொள்ள முடியாத போதகர்கள் மக்களை சாடுகிறார்கள். அல்லாஹ்வின் தண்டனை வருமென எச்சரிக்கிறார்கள். கியாமம் நெருங்குவதற்கான அடையாளமாக தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள். காலம் கெட்டுவிட்டது என்று யஹூதி நஸாராக்களின் சூழ்ச்சிகளில் முஸ்லிம்கள் சிக்கி விட்டதாகவும் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இப்படிக் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் அழைப்பு விடுத்ததும் அனைவரும் வஹியை ஏற்றுக் கொண்டார்களா? வஹியின் கவர்ச்சியும், ஈர்ப்பும் அனைவரையும் இஸ்லாத்தை தழுவவைத்தனவா என்று கேள்வி எழுப்பலாம்.
இது நடக்கவில்லையென்றாலும் வஹியை ஏற்றுக் கொண்டவர்கள் உயிரே போனாலும் விட்டுவிடமாட்டோம் என உறுதியாக நின்றார்கள். வஹியை மறுத்தவர்களோ வஹியின் வருகையால் நிம்மதியின்றி, நித்திரையின்றி துன்பப்பட்டார்கள். ஆக, உடன்பாடானதும் எதிர்மறையா னதுமான ஒரு பாரிய தாக்கத்தை வஹி அனைவரிடத்திலும் ஏற் படுத்தியது. வஹியை ஏற்றவர்களதும் மறுத்தவர்களதும் பேச்சு வஹியாகவே இருந்தது. வேறு பக்கம் அவர்களது கவனமோ கவலையோ திசை திரும்ப வில்லை.
வஹியின் கவர்ச்சி, வேரில் பட்ட ஈரம் போல உறிஞ்சப்படுவதாகும். பின்னர் அது அவரது நாவு, நடத்தைகள் அனைத்தையும் வானளாவ உயர்த்துகிறது. அவனது செயல்கள் பல்வேறு சுவை கொண்ட கனிகள் போல பண்பட்டுக்கனிகின்றன. பின்னர் அவனது கருத்துக்களும், உரை களும், சிந்தனைகளும் மற்றோர் உள்ளத்தை உயிர்ப்பிக்கின்றன. (அல்-ஹஸனாத், ஜூலை 2006)
வஹி அறிவு போதகரின் உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும். அவர்கள் பெற்ற அறிவு நன்கு மென்று சுவைத்துத்தின்று உடலோடு இரத்தமாக சங்கமிக்க வேண்டும். அது உள்ளத்தில் பாய்ந்து நாவினாலும், நடத்தையாலும் வெளிப்பட வேண்டும். ஏற்கனவே சொல்லிவந்த விடயங்கள் வஹி அறிவிற்கு புலனறிவும் பகுத்தறிவும் துணை சேர்க்கின்றன என்பதை எடுத்துக்காட்டின. ஆகவே, வஹி அறிவு ஏனைய இரண்டாலும் மெய்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒரு சம்பவம் கூறப்படுகின்றது. ஒரு முறை அப்துர் காதிர் ஜீலானி அவர்களின் மகன் பள்ளி வாசலில் தொடராக பயான் செய்து வந்தார். எனினும் அது மக்களில் எதிரொலிப்பதாகத் தெரியவில்லை. இது பற்றித் தந்தையிடம் முறையிட்டார். அடுத்த நாள் தந்தை மக்கள் முன் தோன்றினார். தான் குடிப்பதற்காக தயாராக வைத்திருந்த பாலை பூனை கொட்டி விட்டது என்று ஆரம்பித்தார். மக்கள் அழத் தொடங்கிவிட்டார்கள். பின்னர் தந்தைக்கும் மகனுக்கு மிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. பங்கேற்றவர்களில் அந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை தெளிவுபடுத்த விரும்பிய தந்தை, மகனே! உள்ளத்தால் பேசவேண்டும். அதுதான் உள்ளத்தைத் தைக்கும் என்றார். இது வஹியை முன்வைப்பவர்களுக்கு சிறந்த படிப்பினையாக அமையும்.
நன்றி: மீள்பார்வை

0 comments:

Post a Comment