"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, July 19, 2012
ஏறாவூரில் சவூதிப் பெண்மணி மர்ஹுமா நூறாஹ் ஹமெத் இன் நன்கொடையில் அழகிய மஸ்ஜித் !
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத்தின் இஸ்லாமிய மாநாடும் மஸ்ஜித் ஆயிஷா பள்ளிவாசல் புதிய கட்டிடத் திறப்பு விழாவும் இன்று வியாழக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. இஷாத் தொழுகைவரை தர்பியா நிகழ்வும் இடம்பெற்றது.
ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மௌலவி அல் ஹாபிழ் ஏ.ஆர்.எம். றிஸ்வான் ஷர்கி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அல்கிம்மா பொதுப்பணி மன்றத்தின் பிரதம தவிசாளரும் அரபு தேச கொடைவள்ளலுமான அஷ்ஷேஹ் முத்தீப் அஷ்செய்யபி அபூஹுஸ்ஸாம், அல்கிம்மா பொதுப்பணி மன்றப் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன், மௌலவி எம்.எஸ்.எம். அஸ்பர் ஹஸன் பலாஹி, ஏறாவூர் தௌஹீத் ஜமா அத்தின் செயலாளர் அஸனார் முஹைதீன் உட்பட ஏராளமான தௌஹீத் ஜமாஅத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சவூதி அரேபிய தேசத்தைச் சேர்ந்த கொடைவள்ளலான மர்ஹுமா நூறாஹ் ஹமெத் அபூதீத் அவர்களின் நிதியத்தினால் வழங்கப்பட்ட சுமார் 80 இலட்ச ரூபாய் நிதியைக் கொண்டு இந்த அழகிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இந்தப் பள்ளிவாசலின் சுற்றுமதில் மேல்மாடிக் கட்டிடம், மற்றும் பள்ளி வாசல் பரிபாலனம் என்பனவற்றுக்காக மர்ஹுமா நூறாஹ் ஹமெத் அபூதீத் அவர்களின் நிதியத்திலிருந்து நிதி உதவி வழங்கப்படவிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Source: Kattankudiinfo
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment