"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Monday, July 2, 2012
ஐயமும் தெளிவும்
ஐயம் : நீங்கள் அல்குர்ஆனையும் ஹதீஸையும் மாத்திரம் பின்பற்றுமாறு பிரசாரம் செய்கிறீர்கள். அப்படியென்றால் இமாம்கள்கூறியவை அவ்விரண்டுக்கும் முரணானவையா?நீங்கள் இமாம்களை மதிப்பதில்லைதில்லையென்று சிலா குற்றம் சாட்டுகின்றார்களே!
- YBM.. ஹில்மி, ஏறாவூர்.
தெளிவு : அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மாத்திரமே பின்பற்றுமாறு நாம் பிரசாரம் செய்கிறோம் என்பதுமுற்றிலும் உண்மையாகும். ஏனெனில் மார்க்கச் சட்டங்களை இயற்றும் தகுதியும் அதிகாரமும் அவ்விரண்டுக்கு மாத்திரமே உள்ளன. இதை பல அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் தெளிவுபடுத்துகின்றன. நபியவர்கள் கூறினார்கள்: “நான் உங்களிடம் இரு விடயங்களை விட்டுச்செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடித்திருக்கும் வரை வழிதவறமாட்டீர்கள். அவ்விரண்டும் அல்குர்ஆனும் எனது வழிமுறையாகிய ஸ{ன்னாவுமாகும் “(ஆதாரம் : முவத்தா, ஹாகிம்)
இமாம்களைப் பொறுத்தவரை, அவர்கள் இம்மார்க்க்கத்தைப் பாதுகாப்பதற்காக தமது வாழ்வையே அர்ப்பணித்தவர்கள். அத்தகைய இமாம்கள் வரலாற்றில் ஆயிரக்கணக்கில் தோன்றியிருக்கிறார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக. நம்மை விட பல மடங்கு உயர்வானவர்கள் என்ற போதிலும் அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் சில வேளைகளில் தவறு செய்யக் கூடியவர்கள். அத்தோடு அனைத்து ஹதீஸ்களும் அனைத்து இமாம்களுக்கும் கிடைக்கவுமில்லை. எனவே அவர்களுடைய கருத்துகளில் சரியானவையும் இருக்கலாம். தவறானவையும் இருக்கலாம். இமாம்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு போலியான குற்றச்சாட்டாகும். ஒரு மத்ஹபை மாத்திரம் பின்பற்ற வேண்டும் என்பவர்கள்தான் அந்த மத்ஹபின் இமாமை மாத்திரம் மதித்து ஏனைய இமாம்களை புறக்கணிக்கிறார்கள். அல்குர்ஆனுக்கும்
ஹதீஸ{க்கும் உடன்பாடான கருத்தை எந்த இமாம் கூறியிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுமாறுதான் நாம் வலியுறுத்துகிறோம். அல்குர்ஆனையும் ஹதீஸையும் மாத்திரமே பின்பற்ற வேண்டுமென்று அனைத்து இமாம்களும்
கூறியிருக்கிறார்கள். எனவே நாம்தான் இமாம்கள் அனைவரையும் உண்மைக்கு உண்மையாக மதிக்கிறோம். பின்வரும் இமாம்களின் கருத்துகளை கவனியுங்கள்:
நான்கு இமாம்கள் இப்படிக் கூறினார்கள்:
1. இமாம் அபூ ஹனீபா றஹிமஹ_ல்லாஹ்:
“அல்குர்ஆனுக்கும் ஹதீஸ{க்கும் முரணான ஒரு கருத்தை நான் கூறியிருந்தால், எனது கருத்தை விட்டுவிடுங்கள்”
“நான் கூறிய கருத்து ஆதாரபூர்வமான ஹதீஸ{டன் உடன்பட்டிருந்தால் அதுவே எனது மத்ஹபாகும்”
(நூல்கள்: அல் ஈகாழ், அல் இன்திகா)
2. இமாம் மாலிக் றஹிமஹ{ல்லாஹ்:
“நபி ஸல்ல்ல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னர் இந்த சமூகத்தில் உள்ள ஒருவர் என்ன கருத்தைக் கூறியிருந்தாலும் அதில் எடுக்க வேண்டிய கருத்துகளும் உள்ளன, விட்டுவிட வேண்டிய கருத்துகளும் உள்ளன” “நான் ஒரு மனிதன்தான். சரியாகவும் கூறுவேன். பிழையாகவும் கூறுவேன். எனது கருத்துகளை கவனித்துப் பாருங்கள். நான் கூறியவற்றுள் அல்குர்ஆனுக்கும் ஹதீஸ{க்கும் உடன்பாடானவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸ{க்கும் முரண்படுகின்றவற்றை விட்டுவிடுங்கள்” (நூல்கள்: அல்ஜாமிஃ, உஸ_லுல் அஹ்காம்)
3. இமாம் ஷாபிஈ றஹிமஹ{ல்லாஹ்:
“நபியவர்களின் ஹதீஸ{க்கு மாற்றமான கருத்துகளை எனது நூலில் நீங்கள் கண்டால் நபியவர்களின் ஹதீஸையே எடுத்துக்கொள்ளுங்கள். எனது கருத்துகளை விட்டுவிடுங்கள்” “நான் கூறிய கருத்துகளில் ஹதீஸ{க்கு மாற்றமான கருத்துகளை நீங்கள் கண்டால், நபியவர்களின் ஹத P ஸே ப pன் ப ற ; ற ப ; ப ட தகுத pயானது என் பதை அற p ந ;துn க hள்ளுங் கள் . என்னை ந Pங் கள் பின்பற்றாதீர்கள்” (நூல்கள்: அல் இஹ்திஜாஜு பிஷ் ஷாபிஈ, தம்முல் கலாம், அல்ஆதாப்)
4. இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் றஹிமஹ{ல்லாஹ்:
“என்னையோ, இமாம் மாலிக்கையோ, இமாம் ஷாபிஈயையோ, இமாம் அவ்ஸாஈயையோ, இமாம் தவ்ரியையோ பின்பற்றாதீர்கள். அவர்கள் எங்கிருந்து ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டார்களோ அங்கிருந்தே (அல்குர்ஆன்,
ஹதீஸிலிருந்து) ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்”
“யார் நபியவர்களின் ஒரு ஹதீஸை நிராகரித்து விடுகிறானோ அவன் அழிவின் விழிம்புக்கே சென்றுவிட்டான்”
(நூல்கள்: அல்மனாகிப், அல் ஆதாப்).
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment