widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, July 31, 2012

திக்ர்: இறை ஞாபகம்


திக்ர்: இறை ஞாபகம்
  ரமீஸா அபுல்பௌஸ் 
திக்ர் என்றால் இறைநினைவு, இறைவனைத் துதித்தல், தியானித்தல், இறைவனிடம் வேண்டுதல் என்று பொருள்படும். திக்ர் இரு முறைகளில் அமையும்.
1. நாவால் மொழிதல்
2. மனதால் நினைத்தல்
இது இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும். எனவே, நாம் இதனை அல்லாஹ் வும் அவனது தூதரும் கற்றுத்தந்த முறைப்படியே அமைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்றான் "நபியே நீர் உம் மனத்திற்குள் மிகப் பணிவோடும் பயத்தோடும் (மெதுவாக) சொல்லில் உரத்த சத்தமின்றியும் காலையிலும் மாலையிலும் உமது இரட்ச கனை நினைவுகூர்வீராக. அவனை மறந்திருப்போரில் ஒருவராக ஆகிவிடாதீர்." (அல்குர்ஆன் 7:205)
"ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யுங்கள். இன்னும் காலையிலும் மாலையிலும் அவனை துதி செய்யுங்கள்." (அல்குர்ஆன் 33:41-42)
"அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன."
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "அல்லாஹ்வை திக்ர் செய்பவனுக்கும் திக்ர் செய்யாதவனுக்குமான உவமையானது, உயிருள்ளவனுக்கும் மரணித்தவருக்கும் ஒப்பான தாகும்." (புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூர்பவராக இருந்தார்கள். ஒரு நாளைக்கு நூறு தடவைகள் இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) செய்யக்கூடியவர்களாக காணப்பட் டார்கள்.
எமது நாவு எப்பொழுதும் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலேயே ஈரமானதாக இருக்க வேண்டும். அன்றாட செயற்பாடுகளின் போதும் அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக நாம் மாற வேண்டும். இதன்மூலம் எமது உள்ளங்கள் அமைதியடைவதுடன் எமது செயற் பாடுகளும் இலகுவாய் அமையும்.
அது மாத்திரமன்றி திக்ர் செய் வதன் மூலம் நாம் மேலும் பல பயன்களை அடைந்து கொள்ள முடியும். வாழ்வில் வெற்றி கிடைக்கும், உளத்தூய்மை ஏற்படும், உள்ளம் மென்மையாகும், ஈமான் அதிகரிக்கம், பாவ மன் னிப்பு கிடைக்கும், ஷைத்தானிடமிருந்து பாவமன்னிப்பு கிடைக்கும், அல்லாஹ்வின் அருளும் அன்பும் அதிகரிக்கும், மறுமையில் வெற்றி கிடைக்கும் இது போல பல்வேறு நன்மைகளையும் பயன்களையும் திக்ர் மூலம் அடைந்து கொள்ளலாம்.
எனவே, நாம் ஒவ்வொரு வரும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுபடுத்துவதன் மூலம் இப்பயன்களை அடைவதோடு அல்லாஹ் விரும்பக்கூடிய நல்லடியானாக வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் அவனது நேசத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி: மீள்பார்வை

0 comments:

Post a Comment