widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, July 5, 2012


ஐயமும் தெளிவும்

ஐயம்:
வட்டியினைப் பெறாமல் சேமிப்புக் கணக்கினை வங்கியில் தொடரலாமா?
தெளிவு :
வட்டி மிகப் பெரும் பாவம் மட்டுமல்ல, இன்றைய சூழலில் மிகப் பெரும் சமூகக் கொடுமையுமாகும்.
வட்டிக்குத் துணைபோகும் அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்லாம் ஹறாம் என்றே கணிக்கிறது. வட்டியில் ஈடுபடும்
பிரதான நபர்கள், இடைத்தரகர்கள், உதவிசெய்பவர்கள் ஆகிய அனைவருமே நபியவர்களின் நாவினால்
சபிக்கப்பட்டவர்கள். வட்டி வாங்குபவர், வட்டி கொடுப்பவர், அதற்கு கணக்கு எழுதுபவர், சாட்சியாக இருப்பவர்கள்
அனைவரையும் நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். அக்குற்றத்தில் அவர்கள் அனைவரும்
சமம் என்று கூறினார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்)
வட்டியை உலகில் பரவச் செய்ய வேண்டும் என்ற யூதர்களின் திட்டத்தில் அவர்கள் பெரும்
வெற்றியடைந்திருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு பிரதேசத்தின் மூலை முடுக்குகளிலும் வட்டி நிறுவனங்கள் தோன்றி,
வட்டியை சமூகத்தில் தாராளமாக பரவலாக்கி வருகின்றன. இன்னும் சொல்லப் போனால் சில வட்டி நிறுவனங்கள்
இளைஞர்கள், யுவதிகள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்தை வழங்கி, பட்டி
தொட்டியெங்கும் அலைந்து திரிய வைத்து, வட்டிச் செயற்பாட்டை பாரிய அளவில் முன்னெடுத்து வருகின்றன. இன்று
ஒவ்வொரு வீடும் தட்டப்பட்டு வட்டிக்கான பிரசாரம் கச்சிதமாக முன்னெடுக்கப்படுகிறது. பிள்ளைகளுக்கான காப்புறுதி,
ஆயுள் காப்புறுதி, ஓய்வூதியக் காப்புறுதி என்று பல்வேறு கவர்ச்சிகரமான பெயர்களில் வட்டி உலா வருகிறது. இதில்
மற்றுமொரு அதிர்ச்சி தரும் விடயம் என்னவெனில், முஸ்லிம்கள் வட்டியை வெறுப்பவர்கள் என்பதை நன்கு
அறிந்துகொண்டு சில வட்டி நிறுவனங்கள் இஸ்லாமியப் பெயர்களோடும் அறபுப் பெயர்களோடும் வட்டியை
அறிமுகப்படுத்தி வருகின்றன. இவற்றை பலர் அறியாமலும் மற்றும் பலர் அறிந்துகொண்டே வட்டியில்
வீழ்ந்துவருகிறார்கள் என்பது மிகப் பெரும் கவலை தரும் விடயமாகும். எனவே வட்டி சார்ந்த எந்தவொரு செயற்பாட்டிலும்
ஒரு முஸ்லிம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஈடுபடாமலிருப்பதே அவரது ஈமானுக்கும் மறுமை
வெற்றிக்கும் பாதுகாப்பானதாகும்.
வாட்டும் வறுமை காரணமாக வேறு வழியின்றியே பலர் இத்தகைய வட்டியில் விழ வேண்டிய நிலைக்கு
தள்ளப்படுகிறார்கள் என்பது உண்மையேயாயினும், ஹலாலான மாற்றுவழிகளைத் தேட வேண்டியதும் க~;டங்களின்
போது பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் வாழுமாறு இஸ்லாம் வழிகாட்டுவதைக் கருத்திற்கொள்வதும்
அவசியமாகும். மிகப் பெரும் வறுமையையும் க~;டத்தையும் இவ்வுலகில் பொறுமையோடு சுமந்து, மறுமை வெற்றியை
உரித்தாக்கிக்கொண்டவர்களான நபியவர்களையும் ஸஹாபாக்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதே வேளை
இஸ்லாமிய நிறுவனங்கள், அமைப்புகள் வட்டிக்கெதிரான பிரசாரத்தை முன்னெடுப்பதோடு மாற்றுத் திட்டங்களை
அறிமுகப்படுத்தும் அதே வேளை, ஸகாத், ஸதகா போன்றவற்றை உரிய முறைப்படி நிறைவேற்றும் போது வட்டி
இல்லாதொழிந்து போகும்.
இது இவ்வாறிருக்க இன்றைய சூழலில் சில அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் தவிர்க்க முடியாத
காரணங்களுக்காகவும் வங்கிகளில் தொடர்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதை மறுக்க முடியாது.
உதாரணமாக,
1. களவு, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களிலிருந்து பாதுகாப்புப் பெற முடியாத சூழ்நிலை. ஒருவரிடம்
உள்ள பெருந்தொகைப் பணத்தை வீட்டில் வைத்திருந்தால் அதற்குப் பாதுகாப்பில்லை.
2. அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல தமது பணியாளர்களின் சம்பளத்தை பணமாகவோ, காசோலையாகவோ
வழங்காமல், வங்கிகளிலேயே வைப்புச் செய்கின்ற நிலை இன்று அதிகரித்து வருகிறது. இதனால் இத்தகைய
நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் சம்பளம் பெறுவதென்றால் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டிய நிலை
ஏற்படுகிறது.
3. வியாபாரிகள் தங்களது கொடுக்கல், வாங்கல்களுக்காகவும் வியாபார ரீதியான பணப் பரிமாற்றங்களுக்காகவும்
வங்கிகளில் தொடர்பு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, இவை போன்ற இன்னும் பல காரணங்களையும் அத்தியாவசியத் தேவைகளையும் கருத்திற்கொண்டும், இஸ்லாம்
துகு.ஸஜிதா, ஏறாவூர் 03
கடமையை நிறைவேற்றிட முடியும்.
எனவே இதில் இணைந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள்
எதிர்வரும் 31.10.2011க்கு முன்னர் பணத்தைச்
செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறோம். ஆயினும்
அத்தகையோர் துல்ஹஜ் முதல் பிறை கண்டதிலிருந்து
உழ்ஹிய்யா கொடுக்கும் வரை முடி, நகம் போன்றவற்றை
அகற்றக்கூடாது என்பதை கவனத்திற்கொள்ளவும்.
இத்திட்டம் தொடர்பாக பின்வரும் இலக்கங்களில்
தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
077 8088030, 077 3574043
றறற. நசயஎரசநெவ.வம - 07 - நவத2011@hழவஅயடை.உழஅ
நடைமுறைக்கேற்ற ஒரு மார்க்கம், அது ஒரு போதும் ஒரு மனிதனின் அன்றாட நடைமுறையை மறந்துவிட்டு
சட்டங்களைக் கூறாது என்ற வகையிலும் வங்கிகளில் பணத்தை வைப்புச் செய்வதற்காகவும் பணப் பரிமாற்றம்
செய்துகொள்வதற்காகவும் கணக்கொன்றை திறந்துகொள்வதில் குற்றமில்லை. அவ்வாறு கணக்கு வைத்திருப்போர்
வட்டியைப் பெறாமல் கணக்கினைத் தொடர்வது அவசியமாகும். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

0 comments:

Post a Comment