"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Monday, July 23, 2012
ரூபாய் 100,000 மேற்பட்ட பரிசை வெல்லுங்கள் – இன்போ ஊடக அனுசரணையுடன் முஸாபகதுர் ரமழான்
Posted by Kattankudi Web Community (KWC) on 23/07/2012


இந்த போட்டிக்குரிய பரிசு விபரங்கள் பின்வருமாறு;
- முதலாம் பரிசு - ரூபாய் 40,000
- இரண்டாம் பரிசு – ரூபாய் 32,000
- மூன்றாம் பரிசு – ரூபாய் 25,000
- நான்காம் பரிசு – ரூபாய் 15,000
- ஐந்தாம் பரிசு – ரூபாய் 7,000
- ஆறு தொடக்கம் பதினைந்து வரை – தலா ரூபாய் 5,000
- மற்றும் பல ஆறுதல் பரிசுகள்
இந்த போட்டியில் கலந்துகொள்வது மிகவும் இலகுவானதாகும். அதாவது இங்கே நாம் இரண்டு இணைப்புகளை பதிவு செய்துள்ளோம்.
அதில் முதலாவது இணைப்பில் ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியின முற்றாக படித்து இரண்டாவது இணைப்பில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
மேலும், இரண்டாவது இணைப்பில் உள்ள கேள்விகள் விரிவாக நோக்கும்போது அது மூன்று பகுதிகளை கொண்டது. அதில்
- பகுதி 01 க்கு (இலைஹி யுரத்து) 25 ஆவது ஜுஸ்இலிருந்தும்,
- பகுதி 02 க்கு ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலில் இருந்தும், (ஆரம்பம் முதல் 158 ஆம் பக்கம் வரையுள்ள)
- பகுதி 03 க்கு வாசகர்களின் தேடல் மூலம் பொதுக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.
விதிமுறைகள்
- விடைகள் யாவும் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட வேண்டும்.
- தமிழ் தஃவா ஒன்றியத்தின் உறுப்பினர்களோ, அவர்களின் குடும்பத்தினரோ இதில் பங்குபற்ற முடியாது.
- வெளிநாடுகளில் வசிப்பவர்களும் கலந்துகொள்ளலாம்.
- ஒரு குடும்பத்தில் ஒருவர் மாத்திரமே பங்குபற்றலாம்.
- பொது மக்களின் நலன்கருதி நடைபெறும் இப்போட்டியில் மௌலவிமார்கள், மௌலவியாக்கள் கலந்து கொள்ள முடியாது.
- மற்றவர் எழுதியதைப் பிரதிபன்னல் இஸ்லாத்தில் ஹராமாகும்.
- புத்தகத்தின் இறுதியிலுள்ள ‘விடைகள்’ எனும் பகுதியிலேயே விடையளித்து, அப்பகுதியை மாத்திரம் கத்தரித்து அனுப்ப வேண்டும்.
- விடைகள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதிநாள் 20 ஷவ்வால் 1433 (07. 09. 2012)
- விடைகள் யாவும்தபாலில் கீழே உள்ள விலாசங்களில் ஒன்றுக்கு அனுப்பிவைக்க வேண்டும்:
“MUSABAKATHU RAMALAN” (TAMIL DAUWA ASSO.)
AL HIKMA WELFARE ASSOCIATION,
80/1, MALIGAKANDA ROAD, COLOMBO -10
AL HIKMA WELFARE ASSOCIATION,
80/1, MALIGAKANDA ROAD, COLOMBO -10
“TAMIL DAUWA MUSABAKATHU RAMALAN”
OLD SINAIYYAH ISLAMIC CENTER,
P.O.BOX: 255018,
RIYADH 11353,
SAUDI ARABIA
OLD SINAIYYAH ISLAMIC CENTER,
P.O.BOX: 255018,
RIYADH 11353,
SAUDI ARABIA
- மேலதிக விபரங்களுக்கு: 071 144 14 14, 077 35 50 287, +966 55 327 80 85
- பாக்ஸ் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ அனுப்பப்படும் விடைகள் நிராகரிக்கப்படும்.
- வினாக்களையும், ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலையும் www.kattankudi.info, www.islamkalvi.com என்ற இணைய தளங்களின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
“இணைப்பு -1″ பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
“இணைப்பு -2 ” பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
இணைப்புகளை பதிவிறக்கம் செய்வதில் ஏதும் இடையூறுகள் காணப்பட்டால் எமது இமெயில் முகவரியான kattankudi@yahoo.com தெரியப்படுத்தவும். அவ்வாறான வாசகர்களுக்கு இந்த இணைப்புகள் இமெயில் ஊடாக அனுப்பிவைக்கப்படும்.
Rate this:
Rate This
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment