"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Tuesday, July 31, 2012
Picture about Mohamed (Sal) in Sinhala Newspaper in Sri Lanka
As we have noted, in many instances some Sinhala newspapers has been taking racial, discriminative stance in reporting about Muslim community and Islam. Rivira, Mawbima Lakbima and Divaina has taken very dangerous levels of hatred against Muslims by publishing biased and baseless articles about Muslims and Islam repeatedly.
In this sequence, on 24/07/2012 Mawbima has published an small article Prophet Mohammed with a picture of a person depicting him as the Prophet (I didn't post the full image here. I have cropped it). Not only that. There are many mistakes in the article too.
You can find the article here http://www.mawbima.lk/ ct-admin/images/e_paper/ 5019.jpg
While appreciating their interest about introducing Prophet Mohammed to Sinhala readers, we should point out that we do not have a picture of the Prophet. Throughout the history any media in the world has respected and never used a picture to depict him. Meantime, we should ask them if they want to write anything about Islam they should approach a Muslim.
Please call Mawbima editorial on following numbers and explain this politely.
Telephone: 0117-566 566/0117-566 535
Fax: 0117-566 546
Email:ceylontodayonline@gmail. com
Please call them or send an email and show them that we are alert.
Wassalam
Zaid.
zaidstar_mo@yahoo.com.
"பத்ரு" களம் தரும் படிப்பினை
"பத்ரு" களம் தரும் படிப்பினை
அபூ யாசிர், உடன்குடி
இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ""பத்ரு"போர் ரமழான் 17ல் நடைபெற்றது.ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த "பத்ரு" போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1430 ஆண்டுகள்.
இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
ஆறு ஒட்டகங்களையும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷ்களை எதிர்த்தனர் என்றால், அந்த முஸ்லிம்களின் நெஞ்சுறுதியையும் இறை நம்பிக்கையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நோன்பு வைத்துள்ளோமே இச்சமயத்தில் எப்படிப் போராடுவது என்றெல்லாம் அவர்கள் தயங்கிக் கொண்டிருக்கவில்லை. இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.
இறைவன் அளித்த உயிர் அவனுடைய மார்க்கத்திற்காக அவனுடைய வழியிலேயே அர்ப்பணமாவதை நபிதோழர்கள் பெரும் பேராய்க் கருதினார்கள். இறைநெறியை நிலை நாட்டுவதையும் அதற்காக உழைப்பதையும் மையமாகக் கொண்டே அவர்களின் வாழ்க்கை சுழன்றது. அந்த 313 முஸ்லிம்களின் வாழ்வோடு எதிர்கால இஸ்லாத்தின் வாழ்வும் வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருந்தன. இறைநெறியை அழிக்க முனைந்தோரை எதிர்த்துப் போரிடும்படி இறைக்கட்டளை கிடைத்த உடனேயே அந்த சிறுபான்மை சத்தியக் குழுவினர் போருக்குத் தயாராகிவிட்டனர். ஆர்ப்பரித்து வரும் குறைஷ்களின் படையை எந்த இடத்தில் சென்று சந்திப்பது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களும் தோழர்களும் கலந்து ஆலோசித்தனர். பல போர்த் திட்டங்களை வகுத்தார்கள். போருக்காக இஸ்லாமியப் படைகள் முகா மிடும் இடங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்க முடிவு செய்த போது நபிதோழர்களில் ஒருவர் இது இறை அறிவிப்பா அல்லது தங்களின் சொந்த முடிவா என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "இது இறை அறிவிப்பு அல்ல, என் சொந்த முடிவு’ என்று கூறியதும், அந்த நபி தோழர் தண்ணீர் வசதியுள்ள மற்றோர் இடத்தைக் குறிப்பிட்டு அங்கு சென்று முகாமிடலாம் என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்கள் அத்துடன் எதிரிகளின் போர் நிலைகளையும், தந்திரங்களையும் வேவு பார்த்து வருவதற்காக ஒற்றர்களையும் அனுப்பி வைத்தார்கள்.
"பத்ரு" போர் களத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகச் சிறந்த படைத் தளபதியாகச் செயல்பட்டார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் அறிவை மட்டுமே பெரிதாக எண்ணாமல் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார்கள். இறைவனிடம் இருகையேந்தி இறைஞ்சினார்கள். "இறைவா! எங்களுக்கு துணை புரிவதாக நீ அளித்த வாக்கை நிறைவேற்று. சத்தியத்திற்காகப் போராடும் இந்தச் சிறுகுழு இன்று அழிந்து விட்டால் இனி உலகில் உன்னை வணங்கிட எவரும் இருக்க மாட்டார்கள்’ என உருக்கமாக பிரார்த்தனை செய்தார்கள்.
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் வந்து, "அல்லாஹ்வின் உதவி நமக்கு நிச்சயம் உண்டு; கலங்காதீர்கள்’ என்று ஆறுதல் கூறினார். அந்த சிறுபான்மை சத்தியக் கூட்டம் "நாங்கள் இறைவனுக்காகவே’ என்று முழுமையாக முன்வந்தபோது இறைவனும் தன் அருளைப் பொழியத் தொடங்கினான். போர் நடைபெறும் வேளையில் மழை பெய்வித்தும், வானவர்களை அனுப்பியும் இன்னும் பல்வேறு வடிவங்களில் அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான். அவர்களின் பாதங்களை வலுப்படுத்தி இறுதி வெற்றியையும் அளித்தான். நபியவர்களோ, நபிதோழர்களோ இந்த வெற்றி குறித்து சிறிதும் கர்வம் கொள்ளக்கூடாது என்பதற்காக இறைவன் பின்வரும் குர்ஆன் வசனத்தை அருளினான். "உண்மையாதெனில், நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். மேலும் (நபியே!) நீர் எறிந்தபோது, உண்மையில் எறிந்தது நீரல்லர்; மாறாக அல்லாஹ்தான் எறிந்தான். (8:17)
இந்த அருள்நெறி வசனங்களுக்கேற்ப அந்த ஆரம்ப கால முஸ்லிம்களும் விளங்கினார்கள். அவர்கள் தங்களின் அறிவையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தியே போரிட்டனர் என்றாலும், அவற்றைக் கொண்டுதான் வெற்றி பெற்றோம் என்று சிறிதும் கர்வம் கொள்ள வில்லை. இறையருளின் துணைகொண்டே வெற்றி பெற்றோம் என்று உறுதியாக நம்பினர். இறைவனுக்கு நன்றியும் செலுத்தினர். இவ்வாறு அனைத்து பண்புகளையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்து சமநிலைப் படுத்தியது "பத்ரு" போரின் தனிச்சிறப்பாகும். ""பத்ரு" போரில் எந்தெந்த நியதிகளைக் கடைபிடித்ததால் இறை யுதவி அவர்களுக்கு கிடைத்ததோ அந்த இறை நியதிகள் எந்தவித மாற்றமும் இன்றி இன்று வரை அப்படியே உள்ளன. தன்னுடைய அள வற்ற அருட்கொடைகளின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இறைவனும் வழங்கக் காத்திருக்கிறான். ஆனால்ஸ
அந்த இறை நெறிகளைப் பின்பற்ற நம்மில் ஒருவரேனும் உண்டா? இறைவனின் அருட் கொடைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வம் நம்மில் எத்தனைப்பேரிடம் இருக்கிறது? நம் உள்ளத்தைத் தொட்டுப் பார்த்துப் பதில் சொல்ல வேண்டும். இன்றுகூட இறைநெறியை -இஸ்லாத்தை முழுமையாக நிலைநாட்டும் பணி நம் முன் உள்ளது. பத்ரு தோழர்களிடம் இருந்த அதே துடிப்பும், உணர்ச்சியும் இன்று நமக்கும் தேவைப்படுகிறது.
இறைநெறியை நிலைநாட்டியே தீருவோம் எனும் உறுதியோடு நம்மிடம் இருக்கும் வாய்ப்பு வசதிகளையும் ஏன் தேவைப்பட்டால் நமது உயிர்களையும் கூட இறைவழியில் அர்ப்பணிக்கத் தயாராகி விடவேண்டும். அதற்காக மறைமுக கொரில்லாத் தாக்குதல், மனித வெடிகுண்டு, தற்கொலைப் படை என இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான செயல்களில் சுய விளக்கம் கூறி ஒருபோதும் ஈடுபடக் கூடாது. அப்படி இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடந்தால் இறையுதவி எப்படியெல்லாம் கிடைக்கிறது என்பதை நாம் நம் கண்களாலேயே கண்டு கொள்ளலாம்.
1430 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற "பத்ரு" போரை இன்று நினை வூட்டுவதன் நோக்கம், நம்முடைய உள்ளத்திலும் சத்திய வேட்கை கொழுந்து விட்டெரிய வேண்டும் என்பதற்காகவே. அந்த சத்தியச் சுடர் நமது செயல்களில் வெளிப்பட்டு சுற்றி யுள்ள தீமைகளை எல்லாம் சுட்டுக் கரித்து விட்டு ஓர் ஒளிமிக்க புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே!
"பத்ரு" போரிலிருந்து கிடைக்கும் படிப்பினை:
"பத்ரு" போர் தரும் படிப்பினைகளை நம் உள்ளத்தில் பதியவைக்க வேண்டும். (1) பெரும் பான்மை மக்கள் ஒரு விவாதத்தை ஏற்றுக் கொள்வதால் அது சத்தியமாகிவிடாது. அவர்கள் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அது அசத்தியமாகிவிடாது. சத்திய வாதிகள் சிறுபான்மையினராய் இருந்தாலும் இறைவன் சத்தியவாதிகளுடன்தான் இருப்பான்.
(2) இறை நம்பிக்கை கொண்ட பிறகு, இறைவனின் கட்டளைகளுக்கும் இறைத் தூதரின் கட்டளைகளுக்கும் கீழ்படியத் தயங்குவது உள்ளத்தின் நயவஞ்சகமாகும். இறைவன் இத் தகையவர்களை விரும்புவதில்லை, வெறுக்கிறான்.
(3) இந்த நயவஞ்சகத் தன்மையும் கோழைத் தனமும் போலி வாதமும் ஒழிய வேண்டுமானால், இறைவன் நம் உள்ளத்தின் இரகசியங்களை அறிகின்றான் என்ற சிந்தனையும் அவன் முன்னிலையில் மறுமையில் நாம் நிற்க வேண்டியுள்ளது எனும் உறுதியான நம்பிக்கையும் வேண்டும். செல்வம், சந்ததிகள் மீதுள்ள பேராசைதான் இறை வழியில் தியாகம் செய்ய தயக்கத்தையும், கோழைத்தனத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே இவ்விரண்டையும் இறை நம்பிக்கையாளர்களை சோதிக்க இறைவனால் அளிக்கப்பட்ட சோதனைப் பொருட்கள் என உணர்ந்து இறை நம்பிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
(4) சத்திய வழி நடப்போர் பலவீனர்களாய் இருந்தபோதிலும் அசத்தியவாதிகள் எவ்வளவு தான் பலமுள்ளவர்களாய் இருந்தபோதும் சூழ் நிலைகளை மாற்றி சத்தியவாதிகளுக்குப் பாதுகாப்பையும் வெற்றியையும் அளித்திட இறைவனால் முடியும். "பத்ரு" போரில் வானவர் களைக்கொண்டு இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிந்ததன் மூலம் இறைவன் அதனைச் செய்தும் காட்டிவிட்டான். அதற்காக இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். இறை மறுப்பாளர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டனர். எனவே இறைவன் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தான்.
(5) இறை வழியில் தியாகம் செய்வது ஓர் இறைவணக்கமே.
இந்த உணர்வுகள், படிப்பினைகள் என்றும் பசுமையோடு இருக்க "பத்ரு" போர் நிகழ்ச்சிகள் நமக்கு என்றென்றம் படிப்பினையாக இருக்கட்டும்! வல்ல அல்லாஹ் போதுமானவன்.
source: http://annajaath.com/?p=4379
திக்ர்: இறை ஞாபகம்
திக்ர்: இறை ஞாபகம்
ரமீஸா அபுல்பௌஸ்
திக்ர் என்றால் இறைநினைவு, இறைவனைத் துதித்தல், தியானித்தல், இறைவனிடம் வேண்டுதல் என்று பொருள்படும். திக்ர் இரு முறைகளில் அமையும்.
1. நாவால் மொழிதல்
2. மனதால் நினைத்தல்
இது இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும். எனவே, நாம் இதனை அல்லாஹ் வும் அவனது தூதரும் கற்றுத்தந்த முறைப்படியே அமைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்றான் "நபியே நீர் உம் மனத்திற்குள் மிகப் பணிவோடும் பயத்தோடும் (மெதுவாக) சொல்லில் உரத்த சத்தமின்றியும் காலையிலும் மாலையிலும் உமது இரட்ச கனை நினைவுகூர்வீராக. அவனை மறந்திருப்போரில் ஒருவராக ஆகிவிடாதீர்." (அல்குர்ஆன் 7:205)
"ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யுங்கள். இன்னும் காலையிலும் மாலையிலும் அவனை துதி செய்யுங்கள்." (அல்குர்ஆன் 33:41-42)
"அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன."
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "அல்லாஹ்வை திக்ர் செய்பவனுக்கும் திக்ர் செய்யாதவனுக்குமான உவமையானது, உயிருள்ளவனுக்கும் மரணித்தவருக்கும் ஒப்பான தாகும்." (புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூர்பவராக இருந்தார்கள். ஒரு நாளைக்கு நூறு தடவைகள் இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) செய்யக்கூடியவர்களாக காணப்பட் டார்கள்.
எமது நாவு எப்பொழுதும் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலேயே ஈரமானதாக இருக்க வேண்டும். அன்றாட செயற்பாடுகளின் போதும் அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக நாம் மாற வேண்டும். இதன்மூலம் எமது உள்ளங்கள் அமைதியடைவதுடன் எமது செயற் பாடுகளும் இலகுவாய் அமையும்.
அது மாத்திரமன்றி திக்ர் செய் வதன் மூலம் நாம் மேலும் பல பயன்களை அடைந்து கொள்ள முடியும். வாழ்வில் வெற்றி கிடைக்கும், உளத்தூய்மை ஏற்படும், உள்ளம் மென்மையாகும், ஈமான் அதிகரிக்கம், பாவ மன் னிப்பு கிடைக்கும், ஷைத்தானிடமிருந்து பாவமன்னிப்பு கிடைக்கும், அல்லாஹ்வின் அருளும் அன்பும் அதிகரிக்கும், மறுமையில் வெற்றி கிடைக்கும் இது போல பல்வேறு நன்மைகளையும் பயன்களையும் திக்ர் மூலம் அடைந்து கொள்ளலாம்.
எனவே, நாம் ஒவ்வொரு வரும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுபடுத்துவதன் மூலம் இப்பயன்களை அடைவதோடு அல்லாஹ் விரும்பக்கூடிய நல்லடியானாக வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் அவனது நேசத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி: மீள்பார்வை
பித்ரா (தருமம்) கொடுத்த பின்புதான் நோன்பு வானகம் செல்கிறது.
ரமலான் மாத நோன்பு குறித்து, அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்!
* ரமலான் பிறை பார்த்து நோன்பு வைய்யுங்கள்(ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள் (வானம் மேகத்தால் மறைக்கப்படுமானால்) எண்ணிக்கையை முப்பதாக முழுமைபடுத்திக் கொள்ளுங்கள்!
* ரமலான் மாதம் வந்து விட்டால் வானங்களின்(ரஹ்மத்தின்) கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம்
விலங்கிடப்படுகின்றன.
* சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான் எனப்படும் வாசலாகும். அதில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழையமாட்டார்கள்.
* யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும், நன்மை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் அதன் இரவுகளில் நின்று வணங்குகிறாரோ இன்னும் "லைலத்துல் கத்ர்' இரவிலும் நின்று வணங்குகிறாரோ, அவருடைய முன் செய்த(சிறிய) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
* அல்லாஹ் கூறுகின்றான் ""நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால் எனக்காகவும், என் திருப்திக்காகவும், பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கி இருந்தான். மேலும், நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது. நோன்பு திறக்கும் போதும் தன் இறைவனை சந்திக்கும்போதும்''.
* நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில் எவர் விழித்திருந்து வணக்கம் புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளில் விழிப்புடனே இருக்கும்.
* ஷாபான் மாதம் பிறை 15ஆம் இரவும், நோன்புப் பெருநாள் இரவும், ஹஜ்ஜு மாதம் 8,9,10 முதலிய இரவுகளைக் குறித்தும் திருநபி(ஸல்) அவர்கள் கூறியதாவது: எவர் மேற்படி 5 இரவுகளில் விழித்திருந்து வணக்கம் புரிகிறாரோ அவருக்கு சொர்க்கம் கடமையாக்கப்பட்டு விட்டது.
* மக்கள் ஈத்பெருநாள் தொழுகைக்கு முன்னரே, பித்ரா என்னும் தருமத்தை கொடுத்துவிட வேண்டும்.
* ஒரு அடியானின் நோன்பு பித்ரா தருமம் செலுத்தாதவரை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும். பித்ரா (தருமம்) கொடுத்த பின்புதான் நோன்பு வானகம் செல்கிறது.
Sunday, July 29, 2012
மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு
ஈமானில் குறைபாடு என்று உணர்கின்றீர்களா?
அமல்களில் குறைபாடு என்ற ஆதங்கமா?
வணக்க வழிபாடுகளில் முழுமையாக ஈடுபாடு காட்ட முடியவில்லையா?
பிறருக்கு அநீதி இழைத்து விட்டோம் என்ற மனக்குழப்பமா?
அல்லாஹ்வுக்கு நாம் செய்த பாவங்களை அல்லாஹ் மண்ணிப்பானா?
என்ற பிரச்சினையா?
செல்வம் தான் நிம்மதியென்று நினைக்கிறீர்களா?
செல்வத்தினால் எதையும் சாதிக்கலாம் என்ற நப்பாசையா?
ஏழையாக இருப்பது கவலையாக இருக்கிறதா?
பணம் இல்லாத வாழ்வை வெறுக்கிறீர்களா?
சோதனையை சகிக்க முடியும் என்ற முடிவெடுக்க முடியவில்லையா?
இதோ உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக 10 உரைகள் ஒரு இடத்தில் “மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு” என்ற தலைப்பில் பார்த்துப் பயன் பெருங்கள்.
http://www.youtube.com/
Saturday, July 28, 2012
மனித வாழ்வில் ''வஹி''யின் தாக்கம்
மனித வாழ்வில் வஹியின் தாக்கம்
''வஹி அறிவு'' போதகரின் உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும்
எம்.எச்.எம். நாளிர்
மேற்கத்திய உலகில் வஹியின் தாக்கத்தை அறியக்கூடியதாக உள்ளது. எனினும், கிழக்கத்திய உலகில் இதனைத் தெளிவாகக்காண முடியாது உள்ளது. இதற்கான காரணம் யாதெனக் கண்டறிய வேண்டிய தேவை உள்ளது. இது பற்றி உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கூறும் கருத்தை நோக்குவோம்.
இது சமூகத்தின் பிழையல்ல. வஹியோடு சமூகத்தைத் தொடர்பு படுத்த வேண்டியவர்கள் செய்த பிழையாகும். அவர்கள் வஹியை வெறும் போதனையாக மாற்றிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர், வஹியை வாழ்க்கையாக மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள், துன்பங்கள், சோதனைகள் அளப்பரியன.
நாம் அத்தனையையும் சுருக்கி வெறுமனே வாய்களிலிருந்து காதுகளை எட்டும் போதனைகளாக வஹியை மாற்றிவிட்டோம். இன்றைய சமூகத்தில் குறைந்த பட்சம் அந்த வஹியைப் பொருளறிந்து விளங்கிக் கற்பதற்குக் கூட ஊக்குவிப்புக்களை வழங்காத ஒரு சூழலைக் காண்கிறோம்.
கற்பவர்களும் வஹியினூடாக அல்லாஹ் அருளிய அடிப்படைகளை விட்டுவிட்டு உட்பிரிவுகளிலுள்ள கருத்து வேறுபாடுகளையும் அவற்றின் மீதான வெறியையும் வளர்க்கிறார்கள்
அல்லது பகல் காலத்திற்குத் தேவையான வஹியை விட்டு விட்டு இரவு காலத்திற்குத் தேவையானதையும், வாழும் காலத்திற்குத் தேவையானதை விட்டு விட்டு மரணத்திற்குப் பின் தேவையானதையும், நெருக்கடிமிக்க வெளிச் சூழலுக்குத் தேவையானதை விட்டு விட்டு,
அமைதிமிக்க மஸ்ஜிதிற்குள் அவசியமானதையும், வாழ்க்கை போராட்டத்தையும் வரலாற்றையும் திசை திருப்பும் வஹியை விட்டு விட்டு கட்டிடங்களையும் மிம்பர்களையும் எழுப்புகின்ற வஹியையும்,
மனிதனை உருவாக்கும் வஹியை விட்டு விட்டு அவன் செய்ய வேண்டிய ஒரு அமலை உருவாக்கும் வஹியையும், மனித சமூகத்தை வழிநடத்தும் வஹியை விட்டு விட்டு பிற சமூகங்களால் ஏற்படும் துன்ப துயரங்களை அல்லாஹ்விடம் முறையிடும் வஹியையும் நாம் போதித்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய வழிகாட்டிகள் வஹியைப் போதிக்கும் இவ்வணுகுமுறை காரணமாக வஹியின் வளர்ச்சியையும் அது வழங்குகின்ற உத்வேகத்தையும் அது உருவாக்குகின்ற எதிர்கால நம்பிக்கையையும் அது தோற்றுவிக்கின்ற இலட்சிய வேட்கையையும் குன்றச்செய்து விடுகிறார்கள். இதனால் ஏனைய தேவைகளுக்காக விடுக்கப்படும் அழைப்பிற்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம், வஹி சார்பாக விடுக் கப்படும் அழைப்பிற்குக் கொடுக்கப்படுவதில்லை.
மக்கள் இவ்வாறு நடந்து கொள்ளும்போது சகித்துக்கொள்ள முடியாத போதகர்கள் மக்களை சாடுகிறார்கள். அல்லாஹ்வின் தண்டனை வருமென எச்சரிக்கிறார்கள். கியாமம் நெருங்குவதற்கான அடையாளமாக தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள். காலம் கெட்டுவிட்டது என்று யஹூதி நஸாராக்களின் சூழ்ச்சிகளில் முஸ்லிம்கள் சிக்கி விட்டதாகவும் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இப்படிக் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் அழைப்பு விடுத்ததும் அனைவரும் வஹியை ஏற்றுக் கொண்டார்களா? வஹியின் கவர்ச்சியும், ஈர்ப்பும் அனைவரையும் இஸ்லாத்தை தழுவவைத்தனவா என்று கேள்வி எழுப்பலாம்.
இது நடக்கவில்லையென்றாலும் வஹியை ஏற்றுக் கொண்டவர்கள் உயிரே போனாலும் விட்டுவிடமாட்டோம் என உறுதியாக நின்றார்கள். வஹியை மறுத்தவர்களோ வஹியின் வருகையால் நிம்மதியின்றி, நித்திரையின்றி துன்பப்பட்டார்கள். ஆக, உடன்பாடானதும் எதிர்மறையா னதுமான ஒரு பாரிய தாக்கத்தை வஹி அனைவரிடத்திலும் ஏற் படுத்தியது. வஹியை ஏற்றவர்களதும் மறுத்தவர்களதும் பேச்சு வஹியாகவே இருந்தது. வேறு பக்கம் அவர்களது கவனமோ கவலையோ திசை திரும்ப வில்லை.
வஹியின் கவர்ச்சி, வேரில் பட்ட ஈரம் போல உறிஞ்சப்படுவதாகும். பின்னர் அது அவரது நாவு, நடத்தைகள் அனைத்தையும் வானளாவ உயர்த்துகிறது. அவனது செயல்கள் பல்வேறு சுவை கொண்ட கனிகள் போல பண்பட்டுக்கனிகின்றன. பின்னர் அவனது கருத்துக்களும், உரை களும், சிந்தனைகளும் மற்றோர் உள்ளத்தை உயிர்ப்பிக்கின்றன. (அல்-ஹஸனாத், ஜூலை 2006)
வஹி அறிவு போதகரின் உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும். அவர்கள் பெற்ற அறிவு நன்கு மென்று சுவைத்துத்தின்று உடலோடு இரத்தமாக சங்கமிக்க வேண்டும். அது உள்ளத்தில் பாய்ந்து நாவினாலும், நடத்தையாலும் வெளிப்பட வேண்டும். ஏற்கனவே சொல்லிவந்த விடயங்கள் வஹி அறிவிற்கு புலனறிவும் பகுத்தறிவும் துணை சேர்க்கின்றன என்பதை எடுத்துக்காட்டின. ஆகவே, வஹி அறிவு ஏனைய இரண்டாலும் மெய்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒரு சம்பவம் கூறப்படுகின்றது. ஒரு முறை அப்துர் காதிர் ஜீலானி அவர்களின் மகன் பள்ளி வாசலில் தொடராக பயான் செய்து வந்தார். எனினும் அது மக்களில் எதிரொலிப்பதாகத் தெரியவில்லை. இது பற்றித் தந்தையிடம் முறையிட்டார். அடுத்த நாள் தந்தை மக்கள் முன் தோன்றினார். தான் குடிப்பதற்காக தயாராக வைத்திருந்த பாலை பூனை கொட்டி விட்டது என்று ஆரம்பித்தார். மக்கள் அழத் தொடங்கிவிட்டார்கள். பின்னர் தந்தைக்கும் மகனுக்கு மிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. பங்கேற்றவர்களில் அந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை தெளிவுபடுத்த விரும்பிய தந்தை, மகனே! உள்ளத்தால் பேசவேண்டும். அதுதான் உள்ளத்தைத் தைக்கும் என்றார். இது வஹியை முன்வைப்பவர்களுக்கு சிறந்த படிப்பினையாக அமையும்.
நன்றி: மீள்பார்வை
Friday, July 27, 2012
ஸகாத்தின் முக்கியத்துவம்
ஸகாத்தின் முக்கியத்துவம்
ஸகாத்தின் பொருள்
இதன் பொருள் தூய்மையுறச்செய்தல் என்பதாகும். ஒருவன் தன் உடைமைகளிலிருந்து நாற்பதில் ஒருபகுதியை எடுத்து ஏழைகளுக்கு அறம் செய்வதன் மூலம் அவனிடம் எஞ்சியுள்ளவை தூய்மை பெறுவதாலும், அவனுடைய உள்ளமும் உலோபித்தனத்திலிருந்து தூய்மை பெறுவதாலும் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.
ஸகாத்தின் நோக்கம் என்ன ?
செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது சமுதாயத்தின் எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும். இதுவேபொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம்செய்கிறது. இதைத்தான் அருள்மறை அல்-குர்ஆன் பின் வருமாறு இயம்புகிறது.
''உங்களுடைய செல்வம் நாட்டிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது.'' (அல்குர்ஆன் 59:7)
ஸகாத்தின் விதிகள் என்னென்ன?
1) ஸகாத் பொருள் தனக்கு உரியதாக இருக்க வேண்டும்.
2) அளவு (நிஸாப்) முழுமை பெறவேண்டும்.
3) ஓராண்டு காலம் நிறைவு பெறவேண்டும்.
4) (கடன்கள் இல்லாமலிருக்க வேண்டும்.
5) சொந்த தேவைகள் போக மீதயிருக்க வேண்டும்.)
ஸகாத் கொடுப்பதற்கு கடமைப்பட்டோர் யார் ?
ஸகாத் வரி குறிப்பிட்ட அளவு (நிஸாப்), பொருள் படைத்த ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் இஸ்லாம் விதியாக்கியுள்ளது. தொழுகை நோன்பு, ஹஜ்ஜு போன்ற வணக்கங்களில் சிறுவர்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதோருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவது போல் ஸகாத்தில் விதிவிலக்கு வழங்கப்படவில்லை. அவர்களிடம் குறிப்பிட்ட தொகை இருந்தால் அவர்களின் பொறுப்பாளர்கள், அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று வழங்கியாக வேண்டும். ஏனெனில் இது ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உரிமையாகும்.
ஸகாத் விதியானோர் ஐந்து பேர்
1. முஸ்லிமாக இருத்தல்
2. சுதந்திரமானராக இருத்தல்
3. நிஸாபை அடைதல் (85 கிராம் தங்க மதிப்புடைய பொருளைப் பெறுதல்) 4. பொருளுக்கு உரியவராக (
Owner) இருத்தல்.
5. விளை பொருளைத்தவிர அனைத்தும் ஓராண்டு பூர்த்தியாகுதல் இத்தகுதிகளைப்பெற்ற அனைவரும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் ?
8 பிரிவினர்
انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ( التوبة 9:60 )
1) யாசிப்போர் (ஃபக்கீர்)
2) ஏழைகள் (மிஸ்கீன்)
3) ஸகாத் வசூலிப்போர்.
4) இஸ்லாத்தை தழுவ விரும்புவோர்.
5) அடிமைகளை விடுதலை செய்வதற்காக!
6) கடன்பட்டோர்.
7) இறைவழியில் அறப்போர் செய்வோர்.
8) பயணிகள் (வழிப்போக்கர்) (அல்-குர்ஆன் 9:60 )
யார் யாருக்கு கொடுககக்கூடாது ?
1) வசதியுள்ளோர்.
2) உடல் வலிமை பெற்றோர்.
3) தனது பெற்றோர்.பிள்ளைகள் (அல்-அஸ்லு வல்ஃபர்உ)
4) நபியின் குடும்பத்தினர்.
5) முஸ்லிமல்லாதோர்.
6) தீயவர்கள்.
எப்போது வழங்க வேண்டும் ?
இது ரமளானில் தான் வழங்கவேண்டுமென பலரும் எண்ணிக்கொண்டு அம்மாதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாம் அவ்வாறு குறிப்பிடவே இல்லை.
பின் எப்போது கொடுக்க வேண்டும் ?
ஒருவருக்கு உணவு,உடை, வீடு, வாகனம், தொழிலுக்குத் தேவையான பொருட்கள் (கருவிகள்) போன்றஅவசியத் தேவைகள் போக ஒருகுறிப்பிட்ட அளவு அல்லது அதற்கு மேல் செல்வமிருந்தால் கணக்கிட்டு நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் கொடுக்கவேண்டும்.
அதுவும் குறிப்பிட்ட அளவை (நிஸாபை) பெற்றவுடன் அல்ல. அந்த தொகை ஒர் ஆண்டு முழுவதும் அவனிடம் இருந்து, ஆண்டு இறுதியில் கொடுத்தால் போதுமானது.
எந்த அளவுக்கு ஸகாத் வழங்கவேண்டும் ?
20 தீனாருக்கு குறைவானவற்றில் ஸகாத் கடமையில்லை. 20தீனார்கள் ஓராண்டு முழுவதும் உம்மிடமிருந்;தால் அதற்கு நீர் ஸகாத் கொடுக்க வேண்டும்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலி ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: அஹ்மது, அபூ தாவூது, பைஹகீ)
மேற்கண்ட நபி மொழியில் 20 தீனார் அளவு அல்லது அதற்கு மேற்பட்ட அளவு வைத்திருப்போர்தான் ஸகாத் கொடுக்க கடமைப்பட்டுள்ளனர். என்பது தெரிய வருகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் செல்வம் என்பது தங்க வெள்ளி நாணயங்களாகவோ, கால்நடைகளாகவோ சொத்தாகவோ இருந்தது. இப்போதுள்ளது போல் விலையுயர்ந்த வைரங்கள், பிளாட்டினங்கள் இருந்ததில்லை. கரன்ஸி நோட்டுகள் இருந்ததில்லை. தங்கத்தின் மதிப்பை வைத்தே நோட்டுகள் அச்சடிக்கப் படுவதால் தங்கத்தின் விலையையும் வைத்தே இன்று அனைத்தையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஸகாத் கடமையான பொருட்கள் :
ஸகாத் ஐந்து வகை பொருட்கள் மீது கடமையாகிறது:
1) தங்கம், வெள்ளி,
2) வியாபாரப் பொருட்கள்
3) கால் நடைகள் 4) விவசாய விளைச்சல்கள்
5) புதையல்கள்
ஸகாத்தின் சதவிகித அளவுகள்
1. 2.5 (இரண்டரை) சதவிகிதம்
2. 5 சதவிகிதம்
3. 10 சதவிகிதம்
4. 20 சதவிகிதம் என பொருளின் இனம் மாறுபடும் போது சதவிகிதமும் மாறு படுகிறது.இனி இவற்றை விரிவாகாப் பார்ப்போம்.
1. இரண்டரை சதவிகிதம் ஸகாத்
1. தங்கம்நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் வழக்கிலிருந்த ஒரு தீனார் தங்க நாணயத்தின் மதிப்பு இன்றைய மெட்ரிக் அளவில், 4..25 கிராமாகும். 20 தீனாருக்கு 85 கிராம் தங்கத்தின் அளவாகும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு 20 மித்கால் (தீனார்) தங்கத்துக்கும் அரை மித்கால் தங்கத்தை (அதாவது 40ல் ஒரு பாகத்தை) ஸகாத்தாக எடுப்பார்கள். (இப்னு மாஜா)
யாரிடமேனும் தமது அத்தியாவசியப் பொருட்களான உணவு,உடை, உறையுள்,தொழிற் கருவிகள்போக 85 கிராம் தங்க நகைகளோ, தங்கமோ, அல்லது அதற்கு மேற்பட்டோ ஓராண்டு முழுவதுமிருந்தால்அதற்கு நாற்பதில் ஒரு சதவிகிதம்-அதாவது இரண்டரை சதவிகிதம்- ஸகாத் கொடுத்தாக வேண்டும்.
உதாணமாக ஒருவரிடம் 100 கிராம் தங்கம் ஓராண்டு முழுவதும் இருந்தால் அதில் இரண்டரை கிராம்(இரண்டரை சதவிகிதம்) -தங்கத்தை அல்லது அதற்கு இணையான விலையை ஸகாத்தாக கொடுக்க வேண்டும்.
வருடத்துவக்கத்தில் 100 கிராமிருந்து பின்னர் தன் தேவைக்கு ஒரு 10 கிராமை எடுத்துச் செலவு செய்து விட்டால் வருட இறுதியில் எஞ்சிய 90 கிராமுக்குரிய ஸகாத்தை வழங்க வேண்டும்.
2. வெள்ளிவெள்ளி நகைகள், வெள்ளிப் பாத்திங்கள், வெள்ளிக் காசுகள் போன்றவற்றிற்கும் ஸகாத் வழங்கப்பட வேணடும்.200 திர்ஹமோ அதைவிடக்கூடுதலோ வெள்ளிக்காசுகள் வைத்திருப்போர் மீது ஸகாத் கடமையாகும். ஐந்து ஊக்கியா (ஒரு ஊக்கியா 40 திர்ஹம். 40ஓ 5ஸ்ரீ 200 திர்ஹம்) அளவை விடக்குறைந்த வெள்ளிக்காசுகளுக்கு ஸகாத் இல்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரிய்யி ரளியல்லாஹு அன்ஹு, புகாரி : 1447)
200 திர்ஹம் (வெள்ளி) இருக்கும் போது அதில் ஐந்து திர்ஹம் ஸகாத் கொடுக்க வேண்டும்..
மேற்கூறிய ஹதீஸிலிருந்து 200 திர்ஹத்திற்கு குறைவான எடைக்கு ஸகாத் கிடையாது எனத் தெரிகிறது.இன்றைய மெட்ரிக் எடையில் ஒரு திர்ஹத்திற்கு 595 கிராம் ஆகும். 200 திர்ஹத்திற்கு(200ஒ 2.975) 595 கிராம் ஆகிறது. தனது அவசியத்தேவை போக ஒருவரிடம் ஓராண்டிற்கு 595 கிராம் அல்லது மேற்பட்டுவெள்ளியிருந்தால் (40 ல் ஒரு விகிதம்) இரண்டரை சதவீதம் (அதாவது 14.875 கிராம்) ஸகாத் வழங்க வேண்டும்.
3. நகைகள்; தங்க வெள்ளி நகைகளில் அணிந்திருக்கும் நகைகளுக்கு ஸகாத் உண்டா என அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் காணப்;பட்டாலும் பெரும்பாலான அறிஞர்கள் ஸகாத் கொடுக்க வேண்டுமெனகீழுள்ள ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.
இருபெண்கள் தங்கக் காப்புகள் அணிந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். அப்போது உங்களிருவருக்கும் மறுமை நாளில் நெருப்புக் காப்புகள் அணிவிக்கப்படுவதை விரும்புவீர்களா ? என அவர்ளிடம் கேட்டபோது விரும்பமாட்டோம் என பதிற் கூறினர். அவ்வாறாயின் உங்கள் கைகளில் அணிந்திருப்பவைகளுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடுங்கள்; என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ருப்னு சுகைபு ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: இப்னு ஹஸம்நானும் எனது சிறியதாயாரும் தங்கக்காப்புகள் அணிந்து கொண்டு நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றோம்.அப்போது இதற்கு ஸகாத் கொடுத்து விட்டீர்களா? எனக்கேட்
hர்கள். இல்லை என்றோம்.நரக நெருப்பை உங்கள் கரங்களில் அல்லாஹ் அணிவிப்பதைப்பற்றி உங்களுக்கு அச்சமாக இல்லையா? இதற்கான ஸகாத்தைச் செலுத்திவிடுங்கள். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத்)
நான் வெள்ளி மோதிரங்கள் அணிந்திருப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டனர். இதற்குரிய ஸகாததைச்செலுத்திவிட்டாயா? ஏன்று கேட்டனர். இல்லையென்றேன்.அவ்வாறாயின் இதுவே உன்னை நரகிற்சேர்க்கப்போதுமானதாகும். என்று ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அபூதாவூது, தாரகுத்னீ, பைஹகீ)
மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தங்க வெள்ளி நகைகளுக்கும் ஸகாத் உண்டு என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்துவதைக் காணலாம்.(தங்கம், வெள்ளிக்குரிய மதிப்பீட்டை அன்றைய மார்கெட் நிலவரப்படி கணித்துக்கொள்ளவேண்டும்) ஆண்டுதோறும் கொடுக்கவேண்டுமா?ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஸகாத் கொடுத்தால் போதுமானது. ஆண்டு தோறும் கொடுக்க வேண்டியதில்லை என்ற வாதத்தை பரவலாகக் காணமுடிகிறது. இவர்கள் முன்வைக்கும் வாதத்தையும் ஆதாரஙடகளையும் பின்னர்காண்போம்.
எனினும் ஆண்டு தோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமென்றே பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் அவர்களின் பின்னர் வந்த கலீபாக்கள்காலத்திலும் ஆண்டு தோறும் வசூலித்து வந்துள்ளதைக் காணமுடிகிறது.
நபிகளாரின் காலத்திலும் குலபேயே ராசிதீன்கள் காலத்திலும் ஸகாத் வசூலிப்பதற்காக வருடந் தோறும் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். எந்த நாயகத் தோழரும் அவ்வாறு கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்க வுமில்லை. இதை வைத்தே உலகின்பெரும்பாலான அறிஞர்கள் ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமெனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
ஸவூதி அரேபியாவின் மிகப்பெரும் மார்க்க மேதைகளான அஷ்ஷைகு பின் பாஸ் (ரஹ்) அவர்களும், ஸாலிஹ்அல்-உதைமீன் (ரஹ்) போன்றவர்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்.
(மேற்கோண்டு விளக்கத்திற்கு தொடர்-2 கட்டுரையைப்பார்க்க)
4. ரூபாய்கள் 85 கிராம் தங்கத்திற்கு நிகரான வகையில் கரன்ஸிநோட்டுகள் குறிப்பிட்ட காலஅளவு நம்மிடமிருந்தாலும்வங்கியிலிருந்தாலும் அதற்கான ஸகாத்தையும் நாம் கணக்கிட்டு கொடுத்து வரவேண்டும்.
5. வியாபாரப் பொருட்கள்
வியாபாரத்திற்கு வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருப்பினும் அதற்கு கட்டாயம் ஸகாத் வழங்கியேஆக வேண்டும்.ஸமுரா இப்னு ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:-நாங்கள் வியாபாரத்திற்கென வைத்திருக்கும் பொருட்களுக்கு ஸகாத் வழங்க வேண்டுமென நபி ( ஸல் )அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆதாரம் : அபூ தாவூது, பைஹகீ
மூலதனத்திற்கும் மட்டும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்க வேண்டுமா? என்று பலரும் கேட்கின்றனர். மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்கவேண்டும் என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.ஆதாரம்: உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆடுகளைப் பெற்றிருந்த ஒருவரிடம் அதற்குரிய ஸகாத்தை கேட்டபோதுஅவை ஈன்ற குட்டிகளை விட்டு விட்டு ஸகாத் கொடுக்க முன் வந்தார். அப்போது அதற்குரிய குட்டிகளையும்கணக்கில் சேர்ப்பீராக! என அவர்கள் கூறிய செய்தி இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் முவத்தாவில் இடம் பெற்றிருக்கிறது. இதை ஆதாரமாகக் கொண்டு வியாபாரத்தில் இலாபமாகப்பெற்ற தொகைக்கும் சேர்;த்தே ஸகாத்தை கணக்கிடவேண்டும் என்பதை அர்ரவ்லுல் முரப்பஃ ஸரஹ் ஸாதுல் முஸ்தக்னஃ பாகம்4,பக்கம்17ல் குறிப்பிடப்பட்டுள்ளது.)
1) ஒருவர் பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து ஜனவரிமாதம் ஒரு வியாபாரத்தைத் தொடங்குகிறார் என்றுவைத்துக்கொள்வோம்.ஓராண்டு முடிந்து அடுத்த ஜனவரியில் கணக்குப்பார்க்கும்போது வியாபாரம் வளர்ந்து செலவு சம்பளம் போக 5 இலட்ச ரூபாய் அதிகமிருக்கிறது. இப்போது மூலதனமாகிய ரூ10இலட்சத்துக்கும் ஓராண்டுக்குப்பிறகு இலாபமாகக் கிடைத்த 5 இலட்சத்துக்கும் சேர்த்து 15இலட்சத்துக்கு இரண்டரைசதவீதம்(அதாவது 37,500 ரூபாய் ) ஸகாத் கொடுக்க வேண்டும். மூலதனமாகிய 10 இலட்ச ரூபாய்க்கு மட்டும் கொடுத்தால் போதுமானது என்பதற்கு ஆதாரமில்லை.
2) அடுத்து பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து வியாபாரம் செய்கிறோம். வினியோக வியாபாரிகளிடமிருந்து கடனாகப் பெற்ற ஐந்து இலட்சத்திற்குரிய வியாபாரப் பொருட்களும் கடையில் உள்ளன.வரவேண்டிய பாக்கிக்கடன் தொகை மூன்று இலட்சம் உள்ளது. ஆண்டு இறுதியில் கணக்குப் பார்க்கும் போது 7 இலட்ச ரூபாய் இலாபமாக கிடைத்துள்ளன. இப்போது கடையில் ஆண்டு இறுதியில் 1010 5107 ரூ 22 இலட்சம் உள்ளன. இவற்றில் கடனாகப் பெற்ற தொகையையும் வரவேண்டிய தொகையையும் கழித்து 14 இலட்சத்திற்கு ஸகாத்கொடுக்க வேண்டுமா ? அல்லது இருப்புக்கு மட்டும் கொடுக்க வேண்டுமா என்ற ஐயங்கள் எழுகின்றன..ஆண்டு இறுதியில இருப்பில் உள்ள மொத்த தொகைக்கும் (அதாவது 101010710 ரூ 22 இலட்சத்துக்கு இரண்டரை சதவிகிதம் (ரூபாய் 55,000.00) ஸகாத் கொடுக்க வேண்டும்.
3) பிறருடைய பொருள் நம் பொறுப்பில் இருந்தாலும் அது ஸகாத்துடைய அளவை அடைந்து ஓராண்டு முழுமையாகநம்மிடம் இருந்து விட்டால் ஓரராண்டுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடவேண்டும். அந்தப் பொருளை ஸகாத்துடைய காலவரையை அடைவதற்கு முன் திருப்பிக் கொடுத்து விட்டால் அதற்கு ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.
4) அது போல நாம் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன் தொகை நம்மிடம் ஒருவருடம் இருந்துவிட்டாலும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து விடவேண்டும். ஸகாத் காலவரைக்கு முன்னர் திருப்பிச் செலுத்திவிடடால் ஸகாத் செலுத்த வேண்டியதில்லை.
கடன் தொகை
5) சதாரணக் கடனாகட்டும். வியாபாரக் கடனாகட்டும். கடன் கொடுத்த தொகை கண்டிப்பாக வரும் தொகையும் உண்டு. வராதவையும் உண்டு. கண்டிப்பாக வரும் தொகைக்கு அந்த ஆண்டே கணக்கிட்டு ஸகாத் கொடுத்து விடவேண்டும். வராத தொகைக்கு கையில் கிடைத்ததும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டு கொடுத்து விடவேண்டும். பலஆண்டுகள் சென்று இந்த கடன் தொகை கிடைப்பதாக இருப்பின் அவற்றிற்கு அண்டு தோறும் என்ற கணக்கில்லாமல் ஒரேஒரு தடவை மொத்தத் தொகைக்கும் கொடுத்தால் போதுமானது.
6. வங்கியில் போடும் வைப்பு நிதி,, குறித்த கால வைப்பு நிதியும் சேமிப்புப் பத்திரம் நிறுவனப்பங்குகள் அவை கைவசமிருக்கும் பணமாகக் கருதி ஒரு வருடம் பூர்த்தியானதும் ஆண்டுதோறும் ஸகாத் கொடுத்து வரவேண்டும்.
7. சொந்த வீடுகள், வாடகை வீடுகள்நாம் குடியிருக்கும் வீட்டிற்கு ஸகாத் கிடையாது. ஆயினும் வாடகைக்கு விடப்படும் வீடுகளில் வரும் வருமானத்திற்கு இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
8. கடைகள், விடுதிகள் (லாட்ஜுகள்) வாடகைக்கு விடப்படும் கடைகள்,கட்டடங்கள், விடுதிகள்(லாட்ஜுகள்) ஆகியவற்றிற்கும் ஸகாத் கிடையாது.அதில் வரும் வாடகைக்கு இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
9. நிலங்கள், வீட்டு மனைகள்விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் ஆகியவற்றுக்கும் ஸகாத் இல்லை. ஆனால் அவற்றிலிருந்து வரும் வருவாய்க்கும், விற்பனை செய்வதாக இருந்தால் அதன் மதிப்புத் தொகைக்கும் இரண்டரை சதவீதம் ஸகாத் கடமையாகும். இவை வியாபாரச் சரக்குகளைப்; போன்றவையாகும்.
10. வாகனங்கள், கனரக பளுதூக்கும் இயந்திரங்கள்வாகனங்கள், கனரக பளுதூக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பீட்டிற்கு ஸகாத் இல்லை. ஆனால், அவற்றின் வருமானத்திற்கும் வாடகைக்கும் ஸகாத் உண்டு.
பொதுவாகவே மேற்கூறிய அனைத்திற்கும் அவற்றின் மொத்த மதிப்பீட்டிற்கு -அஸலுக்கு- ஸகாத் கிடையாது. அவற்றின் வருமானத்திற்கும், அவற்றை விற்கும் போதும் தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.
11. கால் நடைகள் கால் நடைகளில் ஆடு, மாடு, ஒட்டகை மனித வாழ்வுக்கும் ஒரு நாட்டின் வளத்திற்கும் வருவாய்க்கும் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. அவற்றின் பாலும் மாமிசமும் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவை. அதன்தோல், உரோமம், கொம்பு ஆகியவை பெருமளவில் அந்நியச்செலாவணியைப் பெற்றுத்தருகிறது. பயணம் செய்வதற்கும் பயன்படுகின்றன. இவ்வாறாக மனிதத் தேவைகளுக்கும் பொருளாதார வளத்திற்கும் பயன்தரும் இந்த கால் நடைகளை சிறப்பித்து அல்குர்ஆன்-ல் வரும் 43:12, 16:5,7 வசனங்கள் சிந்தனைக்குரியதாகும், எனவே இறைவன் வழங்கிய இந்த அருட்கொடைகளுக்கு ஸகாத் வழங்குவது கடமையாகும். நம் நாட்டைப் பொறுத்தவரை ஸகாத் கொடுக்குமளவுக்கு யாரும் கால்நடைகள் வைத்திருப்பதில்லை.
எனினும் அதன் விபரத்தை சுருக்கமாகக் காண்போம்.
ஸகாத் விகிதங்கள் கால்நடைகள் எண்ணிக்கை ஸகாத் இல்லை ஸகாத் கொடுக்க வேண்டும்.
1. ஆடுகள்
1 முதல் 39 வரை ஸகாத் இல்லை
40 முதல் 120 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
121 முதல் 200 வரை ‘ ‘ இரண்டு ஆடுகள்
201 முதல் 399 வரை ‘ ‘ மூன்று ஆடுகள்
400, அதற்கு அதிகமுள்ளதற்கு ஒவ்வொரு 100 க்கும் ஒரு ஆடு அதிகம் வழங்கவேண்டும். (புகாரி ஹதீஸ் 1454)
(வெள்ளாடு,செம்மரியாடு,ஆண்-பெண் ஆடுகள் யாவும் சமமாகும்)
2. மாடுகள்
1 முதல் 29 வரை ஸகாத் இல்லை (எருமைகள);
30 முதல் 39 வரை ——- ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்று
40 முதல் 59 வரை ——- 2 வருடம் ‘ ‘ ஒரு கன்று
60 அல்லது அதற்குமேற்பட்டதற்கு ஓவ்வொரு 30 மாடுகளுக்கு ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும் ஓவ்வொரு 40 மாடுகளுக்கு இரண்டு ஆண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும்
3. ஒட்டகைகள்
1 முதல் 4 வரை ஸகாத் இல்லை
5 முதல் 9 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
10 முதல் 14 வரை ஓராண்டு நிறைவு பெற்ற இரண்டு ஆடுகள் 15 முதல் 19 வரை ஓராண்டு நிறைவு பெற்ற மூன்று ஆடுகள்
20 முதல் 24 வரை ஓராண்டு நிறைவு பெற்ற நான்கு ஆடுகள்
25 முதல் 35 வரை ஓராண்டுநிறைவுபெற்ற ஓர் பெண் ஒட்டகம்;
36 முதல் 45 வரை இரு வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
46 முதல் 60 வரை 3 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
61 முதல் 75 வரை 4 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம
76 முதல் 90 வரை 2வருடம்நிறைவுபெற்ற 2 பெண் ஒட்டகங்கள்
91 முதல் 120 வரை 3 வருடம்நிறைவுபெற்ற2 பெண் ஒட்டகங்கள
ஒவ்வொரு 40 க்கும்ஒவ்வொரு 50 க்கும் 2 வருடம் நிறைவுபெற்ற 1 பெண் ஒட்டகம் 3 வருடம்நிறைவுபெற்ற 1 பெண்xட்டகம்
குதிரைக்குரிய ஸகாத் வியாபாரப்பொருளைப்போன்றதாகும். சொநத உபயோகத்திற்கு ஸகாத் கிடையாது. வியாபாரத்திற்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
2) 5 சதவிகிதம் ஸகாத்
12. தானியங்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் தானியங்களில் கோதுமை மட்டுமே விவசாயம் செய்யப்பட்டுவந்தன. வேறு தானியங்களும் அப்பகுதிகளில் உற்பத்தியாகவுமில்லை. ஆயினும் நெல், சோளம், ரவை, ராகி கிழங்கு போன்ற உணவு வகை எதுவாயினும் கோதுமையைப் போன்று கணக்கிட்டு ஸகாத் கொடுக்க வேண்டும்.எனினும் முன்னர் நாம் குறிப்பிட்ட பொருள்களின் ஸகாத்திலிருந்து இவை மாறுபடுகின்றன. தங்கம் வெள்ளி வியாபாரப் பொருட்களுக்கு ஆண்டு தோறும் ஸகாத் கொடுத்து வரவேண்டும். ஆனால் தானியங்களைப் பொறுத்தவரை அவ்வாறன்று. விவசாயம் செய்து விளைந்து அறுவடை செய்யும் காலங்களில் அதற்குரியஸகாத்தை கணக்கி;ட்டுக் கொடுக்க வேண்டும்.
3) 10 சதவிகிதம் ஸகாத்
(உற்பத்தியில் 5 சதவிகிதம்)
நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்து விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 5 சதவிகிதம் ஸகாத்கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் ஒருபங்கு (1ஃ20) கொடுக்க வேண்டும்.)
உற்பத்தியில் 10 சதவிகிதம் நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்படாமல் விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் இரு பங்கு (2/20) கொடுக்க வேண்டும்.) (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி)
ஓராண்டு முடிவடைய வேண்டும் என்பதில்லை.அறுவடையான உடனேயே கொடுத்து விடவேண்டும் இங்கேகவனிக்கத்தக்கதாகும். அதற்குரிய உரிமையை அறுவடை நாளிலேயே கொடுத்;து விடவேண்டும் என அல் குர்ஆன் (6:141) அறிவுரை பகர்கிறது.
தானியங்களுக்குரிய அளவு (நிஸாப்)
கோதுமைதானியங்களுக்கும் ஒரு வரையறையை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயம் செய்;துள்ளார்கள்;.’ ஐந்து வஸக்’ அளவுக்குக் குறைவான உற்பத்திக்கு ஸகாத் கிடையாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூ தாவூது, தீhமிதி,நஸயீ, இப்னு மாஜா,தாரமீ, முஅத்தா, அஹ்மத்.)
எனவே, ஒரு வஸக் என்பது 60 ஸாவு ஆகும் ஒரு ஸாவு 2.5 மப (இரண்டரை கிலோ) ஃ 5 வஸக் 5ஒ60ஸ்ரீ 300 ஸாவு 300 ஸாவு (300ஓ 2.5 மப ஸ்ரீ) 750 கிலோவாகும் .
750 கிலோ கோதுமை உற்பத்திக்கே ஸகாத் வழங்கப்படவேண்டும். அதற்கு குறைந்த அளவுக்கு ஸகாத்வேண்டியதில்லை. ஒரு வருடத்தில் பல முறை உற்பத்திச் செய்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த அளவுவிளைச்சலுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.
நெல் கோதுமையைப் பொறுத்த வரை அப்படியே அரைத்து மாவாக்கி உணவாக உட்கொள்ள முடியும்..ஆனால் நெல்லைப் பொறுத்தவரை அதன் மேல் தோலான உமியை நீக்கிய பிறகே உண்ணுவதற்கு ஏற்றதாகும். ஆகவே. நெல்லுக்கு ’10 வஸக்’ (1500 மப) உற்பத்தியானால் தான் அதற்கு ஸகாத் உண்டு என மார்க்கஅறிஞர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். தண்ணீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்பட்டிருந்தால் உற்பத்தியில் 5 சதவிகிதமும் தண்ணீர் பாய்ச்சுவதற்காகசெலவு செய்யப்படாமலிருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதமும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
நிலத்திலிருந்து உற்பத்தி யாகும் பொருட்களுக்கு மட்டுமே ஸகாத் கடமையாகும். நிலம் எவ்வளவு இருந்தாலும்நிலத்திற்கு ஸகாத் கிடையாது.
13. பேரீத்தம் பழம் , உலர்ந்த திராட்சை இந்த இரண்டும் அறுவடை செய்த உடனேயே ஸகாத் கொடுக்க வேண்டும். இவை தவிர எந்த பழவகைகளுக்கும் ஸகாத் கிடையாது.
14. காய்கறிகள்காய்கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படுமேயாhனால் அவற்றின் ஸகாத்காலமும் அளவும் நிறைவு பெற்றால் ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டும்.
4) 20 சதவிகிதம் ஸகாத்
15. கனிமப் பொருள், சுரங்கப்பொருள்சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் உலோகங்கள், கனிமப் பொருட்கள், பூமியிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற புதையல்கள், போரில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும் (கனீமத்) பொருட்கள் ஆகியவற்றிற்கு 20 சதவிகிதம் ஸகாத் வழங்ப்படவேண்டும்.
முக்கியக் குறிப்பு :
1. வைரக்கல், பிளாட்டினம் பல நர்டுக்கரன்சிகள், வலையுயர்ந்த சேமிப்புப் பொருட்கள் ஆகிய ற்றிற்கு ஸகாத்கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
2. ஆடு, மாடு, ஒட்டகை அல்லாத மிருகங்களுக்கும் ,பறவைகளுக்கும் ஸகாத் கிடையாது. விற்பனைக்கென்றால் ஓராண்டுநிறைவு பெற்றதும் வியாபாரப் பொருளைப்போல் இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
3. பழவகைகள், காய் கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும அதன்விலைக்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
4. மேலே குறிப்பிடப்படாத எதுவாயினும் சொந்த உபயோகத்திற்கோ, பாது காத்து வரும் எண்ணத்திலோஉள்ளவையாயின் ஸகாத் கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு இரண்டரைசதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
16. சில்லரையாக வினியோகித்தல்; சில்லரையாக வினியோகிப்பது ஸகாத் முறையாகாது. கடமையும் நிறை வேறாது.
17. பைத்துல் மால் பொது நிதிபைத்துல் மால் பொது நிதி ஒன்றை உருவாக்கி பணத்தை உரியவரிடமிருந்து திரட்டி ஒரு அமைப்பு முறையாக ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்குப்பயன் படும் வகையில் அவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்றவர்களுக்கு கொடுக்கும் வகையில் வினியோகிப்பதையே இஸ்லாம் விரும்புகிறது.
இதன் மூலமே உலகளாவிய அளவில் வறுமையை ஒழித்து ஏழைகள் ஏற்றம் பெறச் செய்து சமுதாயத்தில் வாழ்வையும் வளத்தையும் காணமுடியும். இதுவே இஸ்லாம் விழையும் ஸகாத் முழறயாகும். வல்ல நாயன் ஸகாத்தின் முக்கியத்தை உணர்ந்து அதை உரிய முறையில் வினியோகிப்பதற்கு நல்லருள் புரிவானாக.
நன்றி: இஸ்லாம் கல்வி
Subscribe to:
Posts (Atom)