widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, August 10, 2011

ஓட்டமாவடி நாவலடிப் பகுதியில் பொதுமக்கள் பொலிசாருடன் மோதல்: பிரதேசததில் பதற்றம்


- அபூ றப்தான் / MMM. பைறூஸ் -
சற்று முன்னர் ஓட்டமாவடி நாவலடிப் பிரதேசத்தில் மர்ம மனிதன் ஒருவரை பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததை அடுத்து அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதனால், பொதுமக்கள் போலிசாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
மக்கள் பொலிசாரின் மீது கற்களை வீசியதாகவும் வீதியில் டயர்களை எரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பொலிசார் மக்களைக் கலைக்க மேல்நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கல்குடா முஸ்லிம்  இணையத்தள முகாமைத்துவத்தை தொடர்புகொண்டு கேட்ட போது அவர்கள் தகவல்களை எமக்கு தெரிவித்தனர்;
இன்று நாவலடியில் வசிக்கும் பெண்ணொருவரின் வீட்டுக்கு தண்ணீர் கேட்டுச் சென்ற இளைஞர் ஊசிபோன்ற கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்கியுள்ளார். இதனால் இரத்தம் வெளியேறி இப் பெண் மயக்கமுற்ற நிலையில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஊரவர்கள் கூடி அந்நபரைப் பிடித்து வாழைச்சேனைப் போலிஸில் ஒப்படிடைத்தனர். பொலிஸ் இவரை கைது செய்யாது தப்பியோட விட்டதால் கோபமடைந்த ஊர்மக்கள் ஓட்டமாவடி பிரதான வீதியில் திரண்டு போராட்டம் நடாத்தினர்.
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான போக்குவரத்துப் பாதையும் மட்டக்களப்பு – திருகோணமலை போக்குவரத்துப் பாதையும் இதனால் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தில் போலிசாரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மட்டக்களப்பு நகரிலிரிந்து விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரதேசவாசி ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முகம்மது கனீபா முகம்மது காலிதீன் அவர்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இக்கலவரத்தின் போது படுகாயமடைந்த மற்றய நபரான எம்.எப்.எம்.பாறூக் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் சீடி ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அவச சிகிச்சை மேற்கொள்ளவும் என கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.






போட்டோ – கல்குடா முஸ்லிம்
kattankudi.info

0 comments:

Post a Comment